நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 13, 2014

ஸ்ரீ கபாலீச்சரம் - 2

இறைவன் - ஸ்ரீகபாலீஸ்வரர். இறைவி - ஸ்ரீகற்பகவல்லி.

அம்பிகை மயில் வடிவாக வழிபட்டமையால் மயிலாப்பூர் எனப் பெயர் பெற்ற திருத்தலம் - ஆதியில் புன்னை வனம். எனவே தல விருட்சம் புன்னை.


அப்பர் பெருமான் இத்தலத்தை மயிலாப்பு எனக் குறித்து புகழ்கின்றார். 

திருஞான சம்பந்தரின் பதிகத்தால் - நாகம் தீண்டி இறந்த பூம்பாவை  - அஸ்தியிலிருந்து மீண்டெழுந்த தலம். வாயிலார் நாயனார் அவதரித்த தலம்.

கடந்த பிப்ரவரி-21. எனது விடுப்பு முடிந்து குவைத் திரும்ப வேண்டிய நாள். விமான நிலையத்தில் - Check In - பிற்பகல் மூன்று மணிக்கு.  

அன்று பகல் 12 மணியளவில் - நான் இருந்ததோ - மயிலை கபாலீச்சரத்தில்!..

மயிலையில்  தரிசனம் செய்த போது எடுக்கப்பட்ட படங்களில் சில - இங்கே பதிவில்!..


திருக்கோயிலின் முன் பரந்து விரிந்த திருக்குளம். இதுவே கபாலி தீர்த்தம். நாற்புறமும் நீண்ட  படிக்கட்டுகள்.  திருக்குளத்தின் நடுவில் அழகான  நீராழி மண்டபம். 

திருக்குளத்தின் கீழ்க்கரையில் அழகுடைய ராஜகோபுரம்.   மேற்கு நோக்கிய திருக்கோயில்.  தலைவணங்கி உள்ளே நுழைந்தால் அழகிய கொடிமரம். அன்பும் அழகும் அறிவும் ஆற்றலும் நிறைந்த - நந்தியம்பெருமான்.

நேர் எதிரே சுவாமி ஸ்ரீகபாலீஸ்வரர் திருச்சந்நிதி - மேற்கு முகமாக கருணை ததும்பி வழியும் சிவலிங்கத் திருமேனி.

'மட்டிட்ட புன்னை' என்னும் திருப்பதிகமும் சிவபுராணம் முதலான வேறு  சில திருமுறைப் பதிகங்களும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.

சுவாமி சந்நிதியுள் நுழைந்து வணங்கி உள் திருச்சுற்றில் வலம் வரும்போது கருவறையைச் சுற்றிலும் - நடராஜர், வள்ளி தெய்வயானை  சமேத கல்யாணமுருகன்,  சோமாஸ்கந்தர், பிக்ஷாடனர் - முதலான உற்சவத் திருமேனிகள். 

சண்டீசர் சந்நிதி. திருக்கோஷ்ட மூர்த்தங்களாக - துர்கை, நான்முகன், லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, விநாயகர் - தரிசனம். இன்னும்  லக்ஷ்மி, சரஸ்வதி , நாகங்கள், பைரவர், வீரபத்திரர், நற்றமிழ் வளர்த்த  நால்வர் -

மயிலையின் மாண்புகளுள் ஒன்றான அறுபத்து மூவர்  மூலத் திருமேனிகள். உற்சவத் திருமேனிகள் - என கண்கள் நிறைகின்றன. மேனி சிலிர்க்கின்றது.

உள் திருச்சுற்றில் சோமாஸ்கந்த மூர்த்தி தரிசனம். வலம் வந்து மீண்டும் பெருமானைத் தொழுகிறோம்.


வெளியே வலப்புறம் அம்பாள் சந்நிதி. கருணைக் கடலாக ஸ்ரீகற்பகவல்லி!.. நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி அருள்கின்றனள்.

தாயைக் கண்ட கன்றென மனம் துள்ளித் தாவுகின்றது. சந்நிதியில் நுழையும் போதே தெய்வீக மணம். ஊழ்வினைகள் இற்றுத் தொலைகின்றன.

அபிராமி அந்தாதி,  சௌந்தர்யலஹரி என தேவியின் புகழ் பாடும் திருப் பாடல்களின் கல்வெட்டுகள்.  பல தலங்களிலும் வீற்றிருக்கும் அம்பாளின் வண்ணப் படங்கள் என - உள் திருச்சுற்று தெய்வாம்சமாகத் திகழ்கின்றது.

வெளித்திருச்சுற்றில்  வலப்புறம் திரும்பினால் -  கிழக்கு நோக்கிய  முதல் சந்நிதி - பூம்பாவையின் சந்நிதி . 

ஞானசம்பந்தப் பெருமானின்  திருவாக்கினால் - பூம்பாவாய் என அழைக்கப் பட்ட பெரும் பேற்றினள். அவளை வணங்குகின்றோம்.


வடக்குத் திருச்சுற்றில் தல விருட்சமாகிய புன்னை.   அம்பிகை மயிலாய் பூசித்த புன்னைவன நாதர் சந்நிதி. - சிவலிங்கத் திருமேனி உள்ளது.  மயிலின்  சிலாரூபம்.

ஈசான்ய மூலையில் சனைச்சரன் சந்நிதி.  வலமாக வந்து நவக்கிரகங்களைத் தொழ - கம்பீரமான கிழக்கு ராஜகோபுரம்.


திருச்சுற்றில் சுந்தரேஸ்வரர், ஜகதீஸ்வரர், நர்த்தன விநாயகர், அண்ணாமலையார் சந்நிதிகள்.

தெற்குத் திருச்சுற்றில் மிக அழகாக விளங்கும் சிங்கார வேலன் சந்நிதி.  திருமதில் ஓரமாக பசுமையான நந்தவனம் உள்ளது.

அருகில் தண்டாயுதபாணி சந்நிதியும், மயிலையில் வாழ்ந்த வாயிலார் நாயனார் சந்நிதியும்.


அலங்காரமாக பதினாறு கால் மண்டபமும்,  சுவாமி எழுந்தருளும் வசந்த மண்டபமும் உள்ளன.

மயிலைக்கு வந்து  திருப்புகழ் பாடி தரிசனம் செய்த  அருணகிரிநாதர் சந்நிதி.

மேலைத் திருச்சுற்றாகிய திருக்கோயில் வாசல். தங்கக் கவசத்துடன் கொடி மரம்.

தலைக்கு மேல் கரங்களைக் கூப்பி - ஈஸ்வரா என்று - வீழ்ந்து வணங்கி, எழும் போது நெஞ்சில் ஆனந்தமும் ஆரவாரித்து எழுவதை உணர்கின்றோம்.


பிரதோஷம், கிருத்திகை, ஆடிப்பூரம், ஆவணிமூலம், நவராத்திரி, சஷ்டி, தனுர் மாதவழிபாடு முதலியனவும் திருமுறை விழாக்களும் சிறப்புற நிகழ்கின்றன.

தைப்பூசத்தினை அனுசரித்து தெப்ப உத்ஸவம் நிகழ்கின்றது.

மயிலையில் நடைபெறும் சிறப்புடைய பங்குனிப் பெருவிழாவின் ஏழாம் நாள் அறுபத்துமூவர் திருவிழா. கண்கொள்ளாக் காட்சியாகும்.

முருகனை வணங்கிய அருணகிரி நாதர்  - ''..கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப்பதி தனில் உறைவோனே!..'' - என்று  பாடி மகிழ்கின்றார். ஆனால் - அந்த பழைமையான திருக்கோயில் இப்போது இல்லை.

ஸ்ரீ கபாலீச்சரம் - 1 - எனும் நேற்றைய  பதிவில், ஸ்ரீ கபாலீச்சரத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வெறியாட்டங்களை குறித்திருந்தேன்.

மேலதிக விவரங்களை - கடற்கரையில் கபாலீசுவரம் - என்னும் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடற்கரையில் இருந்த திருக்கோயிலை வெள்ளையர் இடித்துத் தள்ளி விட்டு  தமக்காக கட்டிக் கொண்டதுவே  - சாந்தோம் கதீட்ரல்.

அதைப் பற்றி விக்கிபீடியா கூறுவது  - இதோ!..



Mylapore was occupied by the Portuguese in 1523, who established the viceroyalty of "São Tomé de Meliapor" or "Saint Thomas of Mylapore." Portuguese rule lasted until 1749, except for a brief interregnum between 1662 and 1687, when the town was occupied by the French.

After 1749, the town fell into the hands of the British East India Company, who took possession of the settlement in the name of Muhammad Ali Khan Wallajah, the Nawab of Arcot. In that same year, Mylapore was incorporated into the Administration of the Presidency of Madras. The settlement known as "Luz" developed during this period.


The commonly held view is that the temple was built in the 7th century CE by the ruling Pallavas.This view is based on references to the temple in the hymns of the Nayanmars (which, however, place it by a sea shore). Thirugnanasambandar's 6th song in Poompavaipathikam and Arunagirinathar's 697th song in Thirumylai Thirupugazh, make clear reference to the Kapaleeswarar temple being located on the seashore in Mylapore. 

The scholarly view that accounts for the discrepancies is that the original temple was built on the shore at the location of the current Santhome Church but was destroyed by the Portuguese, and the current temple (which is 1-1.5 km from the shore) was built by the Vijayanagar kings during the 16th century. There are inscriptions dating back to 12th century inside the temple.

ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்டதே - இப்போதுள்ள திருக்கோயில்.

கடந்த மார்ச்.7  வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் பங்குனித் திருவிழா தொடங்கியது. முன்னதாக  வியாழன்று - கிராம தேவதையான அருள்மிகு கோலவிழியம்மன் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.


திருவிழாவின் மூன்றாம் நாள் அதிகார நந்தி தரிசனம்.

இன்று - ஏழாம் நாள் {மார்ச்-13. வியாழன்} திருத்தேர்.  


முன்னதாக, ஸ்ரீகபாலீஸ்வரரும் ஸ்ரீகற்பகவல்லியும்   சிறப்பு பூஜைகளுடன் திருத்தேருக்கு எழுந்தருள - காலை ஒன்பது மணி அளவில் திருத்தேர் வடம் பிடிக்கப்படும்.

மாடவீதிகளில் வலம்வரும் தேர்  - மாலையில் நிலையைச் சென்றடையும்.

எட்டாம் நாள் {மார்ச்-14. வெள்ளி} வெள்ளி வாகனத்தில் ஸ்வாமி அம்பாள் திருவீதி எழுந்தருளல். அப்போது அறுபத்து மூன்று நாயன்மார்களும் கண் கொள்ளாக் காட்சியாக - பவளக்கால் சப்பரங்களில் மாடவீதிகளில் வலம் வருவர்.

மார்ச்-15. பிக்ஷாடனத் திருக்கோலம்.  மார்ச்-16. திருக்கல்யாணம்.

அதன் பின் விடையாற்றி.


பங்குனிப் பெருவிழாவின் போது மக்கள் மத்தியில் - கபாலீஸ்வரர், கற்பகவல்லி, விநாயகர், வள்ளி தேவயானை சமேத முருகன், சண்டிகேஸ்வர் - என பஞ்ச மூர்த்திகளுடன் அறுபத்து மூவர் - உலா வரும் அழகே அழகு.

கல்லாடை புனைந்தருளும் காபாலியைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே!..

கயிலைநன்மலை யாளுங் கபாலியே போற்றி!.. 
மயிலியன் மலை மாதின் மணாளனே  போற்றி!.. போற்றி!..
 திருச்சிற்றம்பலம்!..

22 கருத்துகள்:

  1. அருமையான படங்களுடன் சிறப்பான விளக்கங்கள்... நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மிகிழ்ச்சி!..

      நீக்கு
  2. அருமையான படங்கள் சிறப்பான தகவல்கள்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  3. பத்திரமாகப் போய்ச் சேர்ந்தீர்களா? (2) காபாலி கோயில் எனக்கு மிகவும் பிடித்த, நான் அடிக்கடி போகின்ற கோவில். அதைப் பற்றிப் படிப்பது மகிழ்ச்சியான அனுபவத்தைத் தருகிறது. அழகான பதிவு, வழக்கம் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. நலமாக குவைத் வந்து சேர்ந்தேன்.
      தங்களது அன்பினுக்கும் - இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  4. ஆலயங்களைத் தரிசித்திட கோடி புண்ணியங்கள் வந்து சேரும் அவ்வண்ணம்
    தங்களின் பகிர்வினைக் கண்டும் இன்புற்றுள்ளேன் !அருமையான பகிர்வினைத்
    தந்து மகிழ்விக்கும் தங்கள் பணி சிறந்து விளங்கட்டும் ஐயா .மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுடைய அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரை வழங்கி சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  5. மயிலையின் நினைவைக் கொண்டு வந்து விட்டீர்கள். மயிலையே கயிலை. கயிலையே மயிலை ஸ்தலத்தைப் பற்றிய செய்திகள் படங்களுடன் மிக மிக சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  6. பகிர்வுக்கு நன்றி நண்பரே..... மயிலை பற்றிய பல தகவல்களை தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  7. மயிலை தரிசனம் செய்ய வாய்ப்பளித்த அருமையான
    படங்களுக்கும் பகிர்வுகளுக்கும் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கு நன்றி..
      இனிய கருத்துரை கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  8. அழகான படங்களுடன் அருமையான விளக்கம் ஐயா.,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்களுடைய வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  9. பல நூற்றாண்டுகள் வரலாறு கொண்டது இக்கோயில். கால வெள்ளத்தால் பல மூலங்களும், முகங்களும் அழிக்கப்பட்டதுபோல இக்கோயிலும் மாறியுள்ளது. வரலாற்றை எவ்வளவுதான் மறைக்க முயன்றாலும் கோயிலின் பெருமையை எடுத்துரைக்கும் சான்றுகளாக உள்ளவை பக்தி இலக்கியங்கள். நலல பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.
      தொன்மையான பல விஷயங்கள் அழிவதற்கும் அழிக்கப்படுவதற்கும் - நம்மவர்களும் ஒரு காரணமாக அமைகின்றனரே.. சில ஊர்கள் பழைமையான பெயரையும் இழந்து விட்டன. தேவாரத்தில் சொல்லப்படும் சில தலங்கள் எவை என்று இன்னும் அறிய முடியவில்லையே..

      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  10. சென்னை செல்லும்போதெல்லாம் கபாலீஸ்வரர் கோவிலுக்குச் செல்வது வழக்கம் சந்நதி முன்னே இரு பக்கங்களிலும் கல்வெட்டுக் குறிப்புகள் பார்த்துள்ளேன்சரியாக நினைவில்லை கோவிலுக்கு யாரோ எழுதி வைத்த குறிப்புகள். அடுத்த முறை செல்லும் போது எழுதி எடுத்துக் கொள்ள வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  11. மயிலை கபாலீஸ்வரர் கோவில் படங்கள் செய்திகள் எல்லாம் அறிய தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..