நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 06, 2013

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம்! 

ஸ்ரீராஜராஜேஸ்வரி என விளங்கும் பராசக்தி அம்பிகையைப் பற்றிய எட்டு ஸ்லோகங்களும்  - அற்புதமானவை. 


ஆயுளையும் ஆரோக்யத்தையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் சர்வ மங்கலங்களையும் தர வல்லவை. 

சர்வ வல்லமை பொருந்தியவளும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவளுமான அம்பிகையைப் போற்றித் துதிக்கும் இந்த அஷ்டகத்தில் அம்பிகையின் திருப்பெயர்களே பயின்று வருகின்றன. 


அன்னையின் - அழகும் அருளும் ஆற்றலும்  நிறைந்து விளங்கும் திருப்பெயர்களுடன் கூடிய அஷ்டகம் , புனிதமான நவராத்திரி நாட்களில் பாராயணம் செய்தற்கு ஏற்றவை. 

ஒன்றிய மனத்துடன் நாளும் பாராயணம் செய்யும் போது - அன்னையின் திருநாமங்களை உச்சரித்ததன் பலனாக - அஷ்டகத்தின் உட்பொருளான அவளே - உள்ளத்தில் தோன்றி ஒளிர்வாள். சத்தியம்!..

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்.
அம்பிகைக்கு ப்ரியமான ஆனந்த ஸ்தோத்ரம். 
 

அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமா பார்வதி
காளி ஹைமவதி ஸிவா த்ரிநயனி காத்யாயனி பைரவி 
சாவித்ரி நவயெளவனா ஸுபகரி சாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா 
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!.. 

அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனி ஆனந்த சந்தாயினி 
வாணி பல்லவ பாணி வேணு முரளி கானப்ரியா லோலினி 
கல்யாணி உடுராஜபிம்ப வதனா தூம்ராக்ஷ ஸம்ஹாரிணி
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!.. 


அம்பா நூபுர ரத்ன கங்கணதரி கேயூர ஹாராவலி 
ஜாதீசம்பக வைஜயந்தி லஹரி க்ரைவேய  கைராஜிதா 
வீணா வேணு விநோத மண்டிதகரா வீராஸனே ஸம்ஸ்திதா  
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..  

அம்பா ரெளத்ரிணி பத்ரகாளி பகளா ஜ்வாலாமுகி வைஷ்ணவி 
ப்ரஹ்மாணி த்ரிபுராந்தகி ஸுரநுதா தேதீப்ய மானோஜ்வாலா 
சாமுண்டா ச்ருதரக்ஷ போக்ஷ ஜனனி தாக்ஷாயணி வல்லவி
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..  


அம்பா சூலதனு குசாங்குச தரிஅர்த்தேந்து பிம்பாதரி 
வாராஹி மதுகைடப ப்ரஷமனி வாணி ரமா ஸேவிதா 
மல்லாத்யாஸுர மூகதைத்ய மதனி மாஹேஸ்வரி சாம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..

அம்பா ஸ்ருஷ்டி விநாச பாலனகரி ஆர்யா விஸம்ஸோபிதா 
காயத்ரி ப்ரணவாக்ஷராம் ருதரஸ: பூர்ணானுஸந்தீ க்ருதா 
ஓங்காரி விநதா ஸுதார்ச்சிதபதா உத்தண்ட தைத்யாபஹா  
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!.. 


அம்பா சாஸ்வதா ஆகமாதி வினுதா ஆர்யா மஹாதேவதா 
யா ப்ரஹ்மாதி பிபீலிகாந்தா ஜனனி யா வை ஜகன் மோஹினி 
யா பஞ்ச ப்ரணவாதி ரேபஜனனி யா சித்கலா மாலினி
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!.. 

அம்பா பாலித பக்தராஜ ரசிதம் அம்பாஷ்டகம் ய: படேத் 
அம்பா லோல கடாக்ஷ வீக்ஷ லலிதம் ச ஐஸ்வர்ய மவ்யாஹதம் 
அம்பா பாவன மந்த்ர ராஜபடனா தந்தே மோக்ஷப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
 
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் ஸம்பூர்ணம். 

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பிகையே!.. சந்திர கலையைச் சூடியவளே!.. ஈரேழு புவனங்களுக்கும் ஆதாரமானவளே!.. தூம்ர லோசனனை வதைத்தவளே!.. புல்லாங்குழல் ஏந்திய கோவிந்த வடிவானவளே!.. சண்பக மாலைகளையும் ரத்னாபரணங்களையும் அணிந்திருப்பவளே!.. பத்ரகாளி எனவும் வைஷ்ணவி எனவும் வராஹி எனவும் தோன்றி தீமைகளை அழித்தவளே!.. 


சூலம், வில், கசை, அங்குசம் எனும் ஆயுதங்களைக் கொண்டவளே!.. முப்பெருந்தொழில்களையும் புரிபவளே!.. ஓங்கார ஸ்வரூபிணியே!.. சிற்றெறும்பு முதல் பிரம்மன் வரையிலான சகல உயிர்களையும் ஈன்றவளே!.. நல்லறிவின் கலைகளாக ஒளிர்பவளே!.. சகல செல்வங்களையும் அருள்பவளே!.. வானுக்கும் வையகத்திற்கும் தலைவியானவளே!.. 

அம்மா!..
நின் திருவடித் தாமரைகளில் 
தலை வைத்து வணங்குகின்றேன்!..
ஓம் சக்தி ஓம்

15 கருத்துகள்:

  1. திரு. கிருஷ்ணா ரவி அவர்களை அன்புடன் வரவேற்கின்றேன்!..

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீ இராஜராஜேஸ்வரி !

    ஆஹா ... பெயரிலேயே என்ன ஒரு கம்பீரம் !!

    ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களது மேலான வருகையும் அன்பான கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி!.. நவராத்திரி நாயகி அனைவருக்கும் மங்கலங்களை அருள்வாளாக!..

      நீக்கு
  3. அன்னையின் அழகு மிளிரும் படங்களும் அற்புத அஷ்டகமும் தந்து மனதை மகிழ்வித்தீர்கள் ஐயா...

    மிக அருமை! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    ஐயா.. என் வலைத்தளத்திற்கும் வந்து வாழ்த்தினால் மனம் மகிழ்வேன்!..
    மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி!..தங்களது மேலான வருகையும் அன்பான கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். அன்பின் நன்றி!.. நவராத்திரி நாயகி அனைவருக்கும் மங்கலங்களை அருள்வாளாக!..

      நீக்கு
    2. சகோதரரே.. உங்கள் அன்பான வரவு என் வலைப்பூவில் கண்டு உளம்மிக மகிழ்ந்தேன்...

      தொடர்வோர் இணைப்பிலும் இணைந்தமைக்கும் அன்பு நிறைந்த வாழ்த்திற்கும் கனிவான என் நன்றிகள்!

      நீக்கு
  4. ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம் மிகவும் அருமை ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. அன்பின் திரு. தனபாலன்.. தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி!.. நலம் பல அருள்வாள் - நவராத்திரி நாயகி!..

    பதிலளிநீக்கு
  6. எனக்கு மிகவும் பிடித்த அஷ்டகம் இது.
    என் தாயார் நவ ராத்திரி அன்று தினமும் பாடி மகிழ்வார்.

    நான் இதை ஒரு விருத்தமாக பாடி எனது வலையில் இட்டு இருக்கிறேன்.

    சிறிது நேரத்தில் லிங்க் தருகிறேன்.
    சுப்பு தாத்தா.
    www.menakasury.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. http://www.youtube.com/watch?v=a8MhsVBrFVE

      listen here

      subbu thatha.

      நீக்கு
    2. அன்புடையீர்!.. ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகத்தினை இசை வடிவாக வழங்கியுள்ள தங்களுக்கு அன்பின் வணக்கம். எல்லாருக்கும் அன்னை நல்லருள் புரிவாளாக!..

      நீக்கு
  7. அழகான அஷ்டகம்...
    படங்களும் அருமை...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!.. அன்னை எல்லா நலங்களையும் அருள்வாளாக!..

      நீக்கு
  8. அழகான படங்களுடன் , பொருளுடன் அருமையான
    அஷ்டகப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் மேலான வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ந்தேன்!.. அன்னை அனைவருக்கும் அனைத்து நலன்களையும் அருள்வாளாக!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..