நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 6
குறளமுதம்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.. 6
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.. 6
ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி
பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 6
ஸ்ரீ ஞானசம்பந்தர் அருளிச்செய்த
திருக்கடைக் காப்பு
திருந்துதேவன்குடி
மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்இவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.. 3/25/1
**
ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

மார்கழி ஆறாம் நாள் வாழ்த்துகள் .
பதிலளிநீக்குஅன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி
நீக்குநன்றி ஸ்ரீராம்
பாம்பணையில் பள்ளிகொள்ளும் பரந்தாமன்
பதிலளிநீக்குபுகழ் பாடி
பறவைகளும் பறக்கின்றன படபடத்து
புள்ளொலியால் நிறைகிறது வானம்
புறப்பட்டு வருவீர்
உள்ளொளியாய் காண்போம் நாமும் ஆயிரம் நாமம் கொண்ட ஆதிசேஷன்
பரம்பொருளை படித்துறையில்
நீராடி.பாரோரே
ஆகா... அருமை..
நீக்குஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்