நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
வெள்ளிக்கிழமை
விழிக்குத் துணை திரு மென்மலர்ப்
பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா
எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு
தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும்
செங்கோடன் மயூரமுமே.. 70
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு
வெற்பனை செஞ்சுடர் வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்
விரித்தோனை விளங்கு வள்ளிக்
காந்தனைக் கந்தக் கடம்பனைக்
கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போதும் மறவா தவர்க்கு
ஒரு தாழ்வில்லையே.. 72
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நாலா யிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே.. 90
நன்றி கௌமாரம்
-::-
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய பாடல் நன்றாக உள்ளது.
/முருகா
எனும் நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணை /
அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்ற திடநம்பிக்கையோடு முருகா சரணமென அவன் நாமத்தை இடைவிடாது பாடி மகிழ்வோம். முருகா சரணம். முத்துக்குமரா சரணம். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பான வருகையும் அழகான கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா..
இன்றைய வெள்ளிப் பாடல் மனப்பாடமான பாடல். பலமுறை பாடி இருக்கிறோம்.இன்றும் பாடி வணங்கினோம்.
பதிலளிநீக்கு"வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடனும் மயூரமுமே" அவனருள் துணை நிற்கட்டும்.
"முருகா எனும் நாமங்கள் .." கூறி வணங்குவோம் எம் அனைவரையும் காக்க வேண்டுவோம்.
ஓம் முருகா சரணம்.