நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
புதன் கிழமை
இன்று நமது மண்ணிற்கே உரிய பனை மரத்தைப் பற்றிய சிறு காணொளிச் சுருள்..
நமது தளத்தில்
பனை மரத்தைப் பற்றிய பதிவுகள் வந்திருக்கின்றன...
இது Fb ல் கிடைத்தது...
காணொளியை
உருவாக்கிய அன்பருக்கு நெஞ்சார்ந்த நன்றி
ஓம் சிவாய நம ஓம்
**
அருமை. பனைமரம் என்றாலே நுங்கு, அதன் மரத்திலிருந்து மேற்கூரைக்காகப் போடும் குறுக்குக் கட்டைகள்தாம் என் நினைவுக்கு வரும். அதில் உள்ள நரம்புகள் கைகளில் நிறையதடவைகள் குத்தியிருக்கின்றன
பதிலளிநீக்குசிறப்பான காணொளி. எவ்வளவு பயன்கள் பனையால்?
பதிலளிநீக்குகோபிநாத் இது பற்றியும் ஒரு நிகழ்ச்சி தயாரித்து, 'மனிதன் வாழ்வதற்கே இடம் இல்லை. பனையை வெட்டைக்கு கூடாது என்று சொல்கிறீர்களே.. எனக்கே கோபம் வருது' என்று நிகழ்ச்சி செய்வார்! நிகழ்ச்சியில் ஒருவர் பனைமரம் கீற்று விழுந்தபோது தன் ஆறுமாத குழந்தையின் மீது விழுந்திருக்கும். நல்லவேளை தப்பித்தது என்று கூறி மக்களை கண்கலங்க வைப்பார்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. காணொளி நன்றாக உள்ளது. தென்னை, பனை மரங்களின் பயன்கள் இறைவன் நமக்களித்த ஒரு கொடை. மிக உயரமானவர்களை கேலியாக பனை மரத்திற்கு ஒப்பிடுவார்கள். ஆனால், உயரமாக இருந்தாலும், பனை மரங்களின் பயன்களை நாம் நிச்சயமாக அந்த காலத்தில் நிறைய அனுபவித்திருக்கிறோம். எங்கள் அம்மா வீட்டில் பின்புறம் பல பனை மரங்கள் இருந்தன. எங்கள் மாமா தாத்தா எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம், பனைமர விசிறிகள் நிறைய செய்து தருவார். செயற்கை காற்று உபகரணங்கள் இல்லாத அந்த காலத்தில், அந்த ஓலை விசிறி இயற்கைக்காற்றை நமக்குத் தரும் சுகமே ஒரு அலாதி. பனை மரத்தின் சிறப்புக்களை சொல்லவும் வேண்டுமோ.? நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.