நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 04, 2025

விடங்கர்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 
வெள்ளிக்கிழமை

கடந்த வாரத்தில் ஒருநாள் தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இப்படிக் கூறினர்..
 
இந்திரனிடம் இருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தி எடுத்து வந்த ஏழு திருமேனிகளையும் ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினார் .. 


இதன் நிகழ்வு கூறுவதற்கே இப்பதிவு..

சோழ வள நாட்டின்
திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருக்காராயில், திருக்குவளை, திருவாய்மூர் மற்றும் திருமறைக்காடு ஆகிய ஏழு தலங்களும் சப்த விடங்க தலங்கள் எனப்படுகின்றன.

திரு ஆரூர்
வீதி விடங்கர்.. அஜபா நடனம்
உடலில் மூச்சுக் காற்று போல   நடனம்

திருநள்ளாறு 
நக விடங்கர்..
உன்மத்த நடனம்..
பித்தன் ஆடுவது போல  நடனம்..

திரு நாகைக் காரோணம் (நாகப்பட்டினம்)
- சுந்தரவிடங்கர்.. தரங்க நடனம்
கடலில் அலைகள் புரண்டு எழுவது போன்ற  தரங்க நடனம்

திருக்காராயில் (திருக்காரவாசல்)
 ஆதிவிடங்கர்.. குக்குட நடனம்.
சேவற் கோழியைப் போல   நடனம்

திருக்கோளிலி (திருக்குவளை)
 அவனி விடங்கர்.. பிருங்க நடனம்.
வண்டு மலருக்குள் குடைந்து ஆடுதல் போன்ற நடனம்

திருவாய்மூர் 
 நீலவிடங்கர்.. கமல நடனம். நீரில் தாமரை மலர் அசைவது போன்ற  நடனம்

திருமறைக்காடு (வேதாரணியம்)
புவனி விடங்கர்.. ஹம்சபாத நடனம்.
அன்னப் பறவை அடியெடுத்தாற் போல்  நடனம்..

விடங்கர் என்பது உளியால் செதுக்கப்படாத மூர்த்தி எனப் பொருள்.. 

இந்திரனின் சூழ்ச்சியை மீறி அவனிடமிருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தி பெற்று வந்த ஒரே வடிவமான கொண்ட ஏழு திருமேனிகளும் இந்த ஏழு தலங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்பது ஐதீகம்..

என்ன சூழ்ச்சி?..
ஏன் பெற்று வந்தார்!..
எதற்காகப் பெற்று வந்தார்?..

விவரங்களை
அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்..

இந்த ஏழு தலங்களிலுமுள்ள  கோயில்களில் திருமூலஸ்தானத்திற்குத் தென் புறமாக  விடங்கர் சந்நிதிகள் விளங்கும்..

இவையே முசுகுந்த சக்கரவர்த்தி அவர்களால் அமைக்கப்பட்டவை..

ஏழு தலங்களின் கோயில்களும் முசுகுந்த சக்கரவர்த்தி அவர்களுக்கு முந்தியவை.. காலத்தால் மிகவும் பழைமையானவை...

ஆரூர் வீதி விடங்கரின் அழகில் மயங்கிய ராஜராஜ சோழச் சக்கரவர்த்தி - தான் எழுப்பிய தஷிணமேருவில் விடங்கருக்கும் தனிச்சந்நிதி அமைத்து மகிழ்ந்தார்..

இது தவிர உபய விடங்கர் சந்நிதிகளும் விளங்குகின்றன.. 

அவற்றுள் திரு ஐயாறு, திருப்பூவனூர்,
திருவீழிமிழலை, கீழ்வேளூர்,
திருவாவடுதுறை,
 திருஒற்றியூர்  
திருக்கச்சூர்
தலங்களும் அடங்கும்..

இதே போல்
பிரதி விடங்கர் சந்நிதிகளாக - 
நல்லூர்,  திருவீழிமிழலை, கீழ்வேளூர், தஞ்சை தக்ஷிண மேரு, திருக்கோட்டாறு, கச்சனம், அம்பர் மாகாளம், திருவாவடுதுறை, திருமலைராயன் பட்டினம், திருத்துறைப்பூண்டி, நாகூர்,  தீபாம்பாள்புரம், சிங்கப் பெருமாள் கோயில், திருப்பைஞ்ஞீலி, பாரியூர், தொட்டிக் கலை, மேலையூர் முதலான தலங்கள் குறிக்கப்படுகின்றன...

ஆதி விடங்கத் தலங்கள் தவிர்த்த ஏனைய பிரதி விடங்கத் தலங்களின் பெயர்கள் விக்கியில் இருந்து நன்றியுடன் பெறப்பட்டவை...

சிவாய நம ஓம்
**

4 கருத்துகள்:

  1. நிறைய சுவாரஸ்யமான விவரங்கள்.  கோவில் நகரத்துக்கு அருகிலேயே  இருப்பதால் கோவில் கோவிலாகச் சுற்றி இன்புறுகிறீர்கள் போல.. 

    பதிலளிநீக்கு
  2. தகவல்கள் சிறப்பு. பல விஷயங்கள் உங்கள் பதிவுகள் வழி படிக்க கிடைக்கிறது. நன்றி.

    ஓம் நமச்சிவாய....

    பதிலளிநீக்கு
  3. இன்றைய பகிர்வு எமக்கு புதிய தகவல்கள். நன்றி.

    "ஆரூர் வீதி விடங்கரின் அழகில் மயங்கிய ராஜராஜ சோழச் சக்கரவர்த்தி - தான் எழுப்பிய தஷிணமேருவில் விடங்கருக்கும் தனிச்சந்நிதி அமைத்து மகிழ்ந்தார்" இது மட்டும் படித்திருந்த ஞாபகம்.

    தொடர்கிறோம் மிகுதி காண்பதற்கு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..