நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 04, 2025

வாசி வாசி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 21 
ஞாயிற்றுக்கிழமை

விலைவாசி

இந்த விலைப்பட்டியல் வெளியான வருடத்தைக் கவனியுங்கள்.. 

அப்போது தான்
இப்போதுள்ள நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து அகம் மகிழலாம்.. ஆனந்தக் கூத்தாடலாம்...

ஒற்றை ரூபாய்க்கு லாட்டரி அடித்த காலம் ஒன்று இருந்தது..

ஒரு ரூபாய்க்கு பதினாறு அணா என்றாலும் நூறு பைசா...

ஐம்பது பைசாவிற்குள் கனமான காலைச் சிற்றுண்டி...

அத்தனையும் பொய் புரட்டு இல்லாத ஆரோக்கிய உணவுகள்..

இன்றைக்கு எத்தனையோ விதமான வசதிகள்...

ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை என்று எதுவும் இல்லை..

இன்றைக்கு நடு வீட்டிற்குள் வைர வைடூரிய வணிக விளம்பரங்கள்..

என்றாலும் - 
பணம்  படைத்தவர்க்கே உலகம்..

இருந்தாலும் -
மகிழ்ச்சியடைவோம்..


அன்றைய நடைமுறைக்கு எடை அளவு விவரங்கள் சிலவற்றை இங்கே தந்திருக்கின்றேன்..

ஒரு உழக்கு - 336 ml 

ஒரு தோலா - 11.7gr
10 தோலா  - 117 gr.

ஒரு பலம் =  35 gr
(எட்டு பலம்  ஒரு சேர்)
வீசை - 1.4 Kgr
(ஐந்து சேர் ஒரு வீசை)
தூக்கு - 1.7 Kg.

ஒரு வீசை = ஆயிரத்து நானூறு கிராம்.

ஒரு ஆழாக்கு 200 gr .
(5 ஆழாக்கு 1 கிலோ)
ஒரு படிக்கு 8 ஆழாக்கு 
(1. 600 Kg)
நன்றி இணையம்
 
வாழ்க்கை வாழ்வதற்கே!..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. விலைவாசி பட்டியல், அளவு முறைகள் என படித்துக் கொண்டேன். ஆளாக்கு என்பதின் அளவு முறையே இன்றைய தலைமுறைகளுக்கு தெரியாமல் போய் விட்டதென்பது உண்மைதான்.

    வாசி வாசியென்று (சிவா, சிவா) இறைவனை பணிந்து போற்றி வைத்து விட்டீர்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///அளவு முறைகளே இன்றைய தலைமுறைக்கு தெரியாமல் போய் விட்டது ///

      உண்மைதான்.

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு
  2. அன்றைய விலைவாசி பட்டியல் திகைக்க வைக்கிறது.
    நாங்கள் சிறுவர்களாக இருந்தபோதும் வடை , தோசை ,இட்லி, இடியப்பம் 5 சதம். மதியச்சாப்பாடு 25, சதம். ஐஸ்பழம் 10சதம் இப்போது நினைத்தால் திகைப்பாகத்தான் இருக்கிறது .

    கால மாற்றம் விலைவாசி எங்கும் ஏகிறி...ஏகிறி .... போகிறது.
    இப்பொழுது சாதாரண மதிய உணவு ரூபா400 அளவில் போகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///கால மாற்றம் விலைவாசி எங்கும் எகிறி... எகிறிப் போகிறது.///

      ஏழைகள் என்ன செய்ய முடியும்?..

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..