நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 26
புதன் கிழமை
கடந்த ஞாயிறன்று விடியற்காலையில் எழுந்திருந்தும் - தாமதம் ஆகி விட்டதோ என்ற அச்சத்தினால் குளித்து முடித்து விட்டு பாரம்பரிய வழித்தடத்தில் செல்லாமல் நானும் என் மகனும் மேலும் சிறிது தாமதத்துடன் திருமானூர் வழியாக திருமழபாடி கொள்ளிடப் பேராற்றின் கரைக்கு வந்து சேர்ந்தபோது முற்பகல் 10:30...
திரு ஐயாற்றில் இருந்து
பல்லக்குகள் வருவதில் தாமதம்..
பல்லக்குகள் ஒவ்வொரு ஊரிலும் நின்று மாலை மரியாதையை ஏற்றுக் கொண்டு வருவதால் தாமதம் ஆகின்றது என்றார்கள்...
ஒருவழியாக 11: 30 மணியளவில் வைத்யநாதன் பேட்டை மண்டகப்படி மரியாதைகளை ஏற்றுக் கொண்டு மாப்பிள்ளை நந்தீசன் குதிரை வாகனத்தில் ஆற்றைக் கடந்து
திருமழபாடி
மண்டகப்படிக்கு வந்து சேர்ந்தார்...
நடுப்பகல் 12:00 மணியளவில் ஸ்ரீ ஐயாறப்பர் பல்லக்கு பேராற்றைக் கடந்து வந்தது..
திருமழபாடி ஸ்ரீ வைத்திய நாதர் சுந்தராம்பிகையுடன் எதிர் கொண்டார்..
12:15 மணியளவில் கொள்ளிடப் பேராற்றில் எதிர்சேவையும் தீப ஆராதனையும் நடைபெற்றது..
திருச்சுற்று வீதியில் வீட்டுக்கு வீடு வாசலில் மாவிலை தோரணங்களுடன் வாழை மரம் கட்டப்பட்டிருக்க பல்லக்குகள் வெகு சிறப்பாக வரவேற்கப்பட்டன..
நிகழ்வுகளை இயன்றவரை காட்சிப்படுத்தியுள்ளேன்...
மாப்பிள்ளை வருகின்றார்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
படங்கள் யாவும் சிறப்பு, அழகு. வைகோள்பாதை வெய்யில் சூடு தெரியாமல் இருக்க... அருமை.
பதிலளிநீக்குதிருமழபாடி வராமலேயே ஸ்வாமி தரிசனம்.. அதுவும் க்ளோசப்பில்.
இளங்கோ சார் ஊர்தானே அது?
ஆம்... திரு இளங்கோ அவர்களது ஊர் தான்
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
நீர்மோர் தெரிந்தது. அருகில் நல்ல பெரிய (பிளாஸ்டிக்) டம்ளர் வைத்திருக்கிறார்கள். அடுத்து வெள்ளையாக கெட்டியாக இருப்பது தயிரா? நீர்மோர் தீரத்தீர கலப்பதற்காக வைத்திருக்கிறார்களா? அடுத்து பானகமும் தெரிந்தது.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
ஆளரமவற்ற சாலை, பாதை.
பதிலளிநீக்குசட்டென சிலர் ஸ்வாமியோடு.
.
ஒருவர் பார்க்கிறார். உற்று நோக்குகிறார். அருகில் சென்று தரிசிக்கிறார்.
சிறு கூட்டம் மொய்க்கிறது. ஓரமாக சென்று காணாமல் போகிறார்.
திடீரென அந்த இடமே 'கல்'லென மக்கள் கூட்டம்!
உச்சி வெயில்..
நீக்குகொதிக்கின்ற மணல்
மகிழ்ச்சி..
நன்றி
மணலாக இருக்கிறதே, கொள்ளிடக்கரை ஆற்றில் நீர் இல்லையோ?
பதிலளிநீக்குஇங்க காவிரியில் ஏதோ நீர் ஓடிக் கொண்டிருட்ந்தது. அங்கு வரும் போது குறைவாகிடுச்சு போல.
வெயில் பயங்கரமாகத் தெரிகிறது. பல்லக்கைத் தோள்களில் ஏந்தி வருபவர்களுக்குச் சூடு தாங்க வேண்டும்.
வெற்று மணற் பரப்பு அப்புறம் கூட்டம்...வருவதும் பல்லக்குடன் வருவதும் தெரிகிறது
நீர் மோர் பானகம் கண்ணில் முதலில் பட்டவை!!!!!!!!
நீங்கள் சொல்லிய விதம் ரசித்தேன்!
படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன அண்ணா
கீதா
இப்போது காவிரியே காய்ந்து கிடக்கின்றது
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி சகோ
திருமளப்பாடி தரிசித்துக்கொண்டோம்.
பதிலளிநீக்குபடங்கள் நேரில் காணும் தரிசனக் காட்சிகளை தந்தன .நன்றி.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி..
நன்றி மாதேவி
சப்த ஸ்தான பல்லக்கு தரிசிக்க ரொம்ப நாட்களாக ஆசை. இப்போது புகைப்படத்தில் பார்த்தேன். நன்றி.
பதிலளிநீக்கு
நீக்குசித்ரா பௌர்ணமியை அடுத்து சப்தஸ்தான விழா
அன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி