நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 07, 2025

மக்ரோணி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 24
திங்கட்கிழமை


மக்ரோணி டிலைட்
 
குவைத்தில் இருந்த போது எனக்கு மிகவும் பிடித்த உணவுகளில் இதுவும் ஒன்று..

அப்போதெல்லாம் விரதம் இல்லாத நாட்களில்
 மக்ரோணியுடன் புலால்  கலந்திருக்கும்.. 

இப்போது புலாலைத் துறந்தாயிற்று..

தேவையானவை
மன உறுதி மற்றும்..

ஓய்!.. சமையல் குறிப்புக்கு வாருங்காணும் !...

இதோ வந்துட்டேன்..
எப்பவும் டமாரம் அடிச்சே பழக்கம் ஆகிட்டது!...


மக்ரோணி டிலைட் தேவையானவை:

சிறிய / நடுத்தரமான  மக்ரோனி 200 grms
பெரிய வெங்காயம் ஒன்று
தக்காளி  2
சிவப்பு குடை மிளகாய் ஒன்று
பச்சைக் குடை மிளகாய் ஒன்று
வெங்காயக் குருத்து ஒன்று
வெண்ணெய் 2 tbsp
அல்லது
சோயா எண்ணெய் தேவைக்கு
உப்பு தேவையான அளவு


செய்முறை:

வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாகவும்.  வெங்காயக் குருத்தை சன்னமாகவும் நறுக்கிக் கொள்ளவும்

பாத்திரம் ஒன்றில்  தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு, மக்ரோனியைப் போட்டு, சிறிது எண்ணெய் விட்டு,  வேக வைக்கவும். 

பிறகு தண்ணீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் அலசிக் கொள்ளவும். 

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு, காய்ந்ததும், பூண்டு, வெங்காயம் போட்டு,  வதக்கவும். 

பிறகு தக்காளி  மசியும் வரை வதக்கவும். அத்துடன், உப்பு, சிவப்பு பச்சை குடை மிளகாய் சேர்க்கவும்.. 

அடுத்து, வேக வைத்த மக்ரோனியையும் சேர்த்து, வெண்ணெய் விட்டு நன்கு கிளறி இறக்கவும்...

Tomato ketchup வீட்டிலேயே தயாரித்துக் கொள்வது நல்லது..

பெரிய வெங்காயம் ஒன்று
தக்காளிப்பழம்  2
பூண்டு 4 பல்
அச்சு வெல்லம் பாதி
உப்பு சிறிதளவு

பெரிய வெங்காயம் 
பூண்டு  இவற்றை உரித்துக் கழுவி நறுக்கிக் கொள்ளவும்.. 
தக்காளியைக் கழுவி நாலாக நறுக்கிக் கொள்ளவும்..

அனைத்தையும் போட்டு மிக்ஸியில் நன்கு அடித்து மக்ரோணி செய்யும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்...

எவ்வித ரசாயன கலப்பும் இல்லாதது.. வாணலியில் நெய் விட்டு இதனை சற்று காய்ச்சிக் கொண்டால் இன்னும் நல்லது.. அவ்வப்போது செய்து கொள்ள எளிதானது..

அன்பின் சமையல்
ஆரோக்கிய சமையல்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

11 கருத்துகள்:

  1. மக்ரோனி அவ்வப்போது செய்வதுண்டு.  எனக்கும் பிடிக்கும்.  ஆனால் செய்வது மிக அபூர்வம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்ரோணி நாமே செய்வது நல்லதே...

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
    2. மக்ரோணி நாமே செய்வது நல்லதே...

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. தக்காளி சாஸில் வெங்காயம் பூண்டு உண்டா?  நான் தக்காளி, காய்ந்த மிளகாய், புளி, வெல்லம், கொஞ்சம் உப்பு  போடுவேன்!

    பதிலளிநீக்கு
  3. மக்கரோணி கெச்சப் செய்முறை நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. மக்ரோணி (பாஸ்தா) செய்முறை நன்றாக உள்ளது. இங்கு குழந்தைகளுக்கு காய்கறி போட்டால் பிடிக்காது என்பதினால், தாளித்து வெறும் தக்காளி சாஸ் கலந்து செய்கிறார் மருமகள். இங்கு குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு. இது( பாஸ்தா) கோதுமை மாவினால் ஆனது என்பதினால் உடல் நலத்துக்கு தீங்கில்லை என்கிறார்கள்.

    தங்களது தக்காளி சாஸ் செய்முறையும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்ரோணி நல்ல உணவு... நமக்கு நாமே பாதுகாப்பு...

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு
  5. மக்ரோணி இங்கு நானும் செய்வேன். இதில் பல வடிவங்களில் கிடைக்கும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி சங்கு, வண்ணத்துப்பூச்சி வடிவங்களில் கிடைக்கிறது.

    மக்ரோணி செய்முறையும் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்ரோணி நல்ல உணவு... சிறு பிள்ளைகளுக்கு பிடித்தமானது...

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..