நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 16, 2022

சித்திரைத் தேர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஸ்ரீ சுபகிருது வருடத்தின் இரண்டாம் நாளாகிய நேற்று மா மதுரையில் சித்திரைத் தேரோட்டம்..


ஸ்ரீ அங்கயற்கண்ணி அம்பிகை உடனாகிய ஸ்ரீ சுந்தரேசப் பெருமான் திருத் தேரில் எழுந்தருள தேர்த் திருவிழா சிறப்பாக நிகழ்ந்துள்ளது..

நேரலை ஒளிபரப்பில் அனைவரும் கண்டு மகிழ்ந்திருப்பீர்கள்..
எனினும் நமது தளத்தில் நிகழ்வுகளைப் பதிவு செய்வதில் மகிழ்ச்சி..

தேரோட்டத்தின் சில காட்சிகள் இன்றைய பதிவில்..


ஒளிப் படங்களை வழங்கியோர் 
திரு. ஸ்டாலின், ARAVI..
அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..











செந்துவர் வாயாள் சேலன கண்ணாள்
சிவன் திருநீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள் பாண்டிமா தேவி
பணிசெயப் பாரிட நிலவும்
சந்தமார் தரளம் பாம்பு நீர் மத்தம்
தண்ணெருக்கம் மலர் வன்னி
அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ணல்
ஆலவாய் ஆவதும் இதுவே.. 3.120.3
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

18 கருத்துகள்:

  1. மதுரைத் திருவிழாக் காட்சிகள் சூப்பர்.  மதுரை வீதிகளில் இரண்டு வருட சமூக இடைவெளிகளுக்குப் பின்னர் இந்த அளவு பிரமாண்ட கூட்டம் பார்க்க மகிழ்ச்சியாய்த்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..
      தமிழகத்தின் பிரம்மாண்டமான விழா அல்லவா மா மதுரைத் திருவிழா...

      வேறு என்ன நமக்கு வேண்டும்?..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. மதுரையில் இருந்த நாட்களில் இந்தத் திருவிழாவை அனுபவித்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. என்ன ஒரு விழா, இந்த சித்திரைத்திருவிழா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்து முற்றிலும் உண்மை..

      தமிழின் அடையாளம் சித்திரைத் திருவிழா என்று கொள்ளலாம்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  4. மதுரைக்கு அழைத்துச் சென்ற பதிவு. மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

      நீக்கு
  5. அந்த நாட்கள் நினைவு வந்தது. தேரன்று காலையிலேயே அப்பா/அண்ணா/தம்பி எல்லாம் தேரை இழுக்கப் போயிடுவாங்க. நாங்க வடக்கு மாசி வீதி நேரு பிள்ளையார் சந்திப்பிலே நிற்போம். அங்கே தான் தெரிந்தவங்க வீட்டு மாடியிலே இருந்து பார்க்க வசதி. மொட்டை மாடி இருந்த எல்லா வீடுகளிலும் இப்படி பக்தர்களை அனுமதித்த காலம் அது. நேற்று ஜோதி தொலைக்காட்சியில் நேரலையில் பார்த்தப்போவும் மிக அழகாக/அருமையாகத் தேரின் உள்ளே உயரத்தில் அமர்ந்திருக்கும் சொக்கநாதரையும்/பிரியாவிடையையும், அம்மன் தேரில் வந்து கொண்டிருந்த மீனாக்ஷியையும் கண் குளிரப் பல முறை காட்டினார்க. எதிர்சேவை நிகழ்வும் இன்றைய அழகர் ஆற்றில் இறங்குவதையும் பார்க்கணும்னு நினைச்சு முடியலை. :( அழகரைப் பின்னர் யூ ட்யூப் மூலம் பார்த்தேன். பச்சைப் பட்டுடுத்தி வந்திருக்கார் அழகர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மலர்ந்த நினைவுகளும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  6. எம் அம்மை அப்பனின் தேர் பவனியை மனதாரக் கண்டேன். மிக்க நன்றி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி துளசிதரன்..

      நீக்கு
  7. சித்திரைத் தேர்த்திருவிழாப் படங்கள அனைத்தும் அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
  8. மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

    ஓம் சிவாய நம..

    பதிலளிநீக்கு
  9. தேரோட்டக் காட்சிகள் அனைத்தும் கண்டு மகிழ்ச்சி. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்.
      வெகு நாட்களுக்குப் பிறகு தங்களது வருகை...

      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. மிக அருமையான காட்சிகள்.
    இந்த முறை வெயில் வந்து விட்டது தேர் இழுக்கும் அன்பர்கள் மிகவும் கஷ்டபட்டார்கள்.
    அவர்களை உற்சாகபடுத்த சொல்லி கொண்டு இருந்தார் தேரில் இருந்தவர்.
    நானும் இந்த முறை இறைவன் அருளால் பார்த்து வந்து விட்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..