நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 24, 2021

வாளாதிருப்பதுவோ!..

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
மீண்டும் ஒரு பதிவு
செய்தி முகப்புகளுடன்...

செய்தி முகப்புகள்
தினமலர் நாளிதழின்
இணைய தளத்தில் இருந்து..


தேடி வரும் உயிர்களுக்குத்
திசை காட்டும் தாயே..
தீ நுண்மி தீர்ப்பதற்கு
துணை கூட்டுவாயே..

வகை கொண்ட மாந்தருக்கும்
வாழ்வழிந்து போவதெனில்
வருந்துகின்ற நெஞ்சகத்தில்
வரும் வார்த்தை இல்லையம்மா..

வளைக் கரத்து வாள் அதுவும்
வாளா இருப்பதுவோ!..
அனல் அதுவும் கரு விழியில்
மூளா திருப்பதுவோ!..

காளி என நீலி என
கடுந்துயரம் தீர்த்தவளே!.
கொடியவனாம் மகிடனையும திருவடியால் தேய்த்தவளே!..

கண் திறந்து பாரம்மா
கவலைகளைத் தீரம்மா..
கொடியவினை விஷமி தன்னை
விழி இணையால் தீர்த்திடம்மா!..
***
மனதை மிகவும் ரணப்படுத்துகின்ற
செய்தி இது..


கொரானா தீநுண்மிக்கு எதிரான
போரில்
திரு அண்ணாமலை  - போளூரைச் சேர்ந்த முதுநிலை பயிற்சி மருத்துவர்
கார்த்திகா (29) தன்னுயிரை ஈந்திருக்கின்றார்..

அவர் கர்ப்பிணி என்பது வேதனையிலும் வேதனை..

சில தினங்களுக்கு முன்
மதுரையில் ஷண்முக பிரியா (30) எனும் மருத்துவரும்
இன்னுயிரை ஈந்திருக்கின்றார்..


இப்படி மக்கட் பணியாற்றும்
மருத்துவர்களும் செவிலியர்களும்
காவல் துறை அலுவலர்களும்
தம்முயிரைப் பணயம் வைப்பது
பற்றி வெளியாகி இருக்கும்
செய்தியினைக் கண் கொண்டு படிக்க இயலவில்லை..

கொரானாவுக்கு எதிராக
பணி புரிந்து உயிர் துறக்கும்
மருத்துவர்களையும்
செவிலியர்களையும்
ஏனைய முன்களப் பணியாளர்களையும்
என்றும் நினைவில் கொள்வோம்..

கார்த்திகாவும்
அவர் தாங்கியிருந்த சேயும்
இறைநிழலில் கலந்திருக்க
வேண்டிக் கொள்வோம்..


***
இச்செய்தி முகப்புகள்
தினமலர் இணைய தளத்தில் இருந்து பெற்றவை..








கீழுள்ள இணைைப்பில்
காணொளியைக் காணலாம்..

சென்னை ஆவடி பகுதியில்
ரோட்டரி கிளப் இளைஞர்கள்
பசித்த உயிர்களைக் கண்டு
உணவு வழங்குகின்றார்கள்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த
நன்றியும் வணக்கமும்..

கொரோனா எனும் தீ நுண்மியால் விளைந்திருக்கும் கொடுமையான இக்காலகட்டம் விரைவில் தொலைந்து எங்கெங்கும் நலம் திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்..

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.. ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

ஃஃஃ

10 கருத்துகள்:

  1. பெரும்பாலான செய்திகளை அங்கும் வாசித்தேன்.  மருத்துவர் கார்த்திகாவின் மறைவுக்கு காரணம் அவருக்கு சீமந்தம் நடந்ததாம்.  அதில் கூடிய கூட்டத்தால் தொற்று ஏற்பட்டதாம்...

    பதிலளிநீக்கு
  2. ஆரம்ப கவிதை வரிகள் ஜோர்.  நானும் இரண்டு முறை வாசித்துப் பிரார்த்தித்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. எல்லாச் செய்திகளும் படித்து வேதனைப் பட்டேன். இம்மாதிரிக் கொண்டாட்டங்கள் எல்லாம் வேண்டாம் என்றால் யார்கேட்கின்றனர்? நேற்றும் முந்தாநாளும் கடைகளைத் திறந்தே இருக்க வேண்டாம். தள்ளு வண்டிகளை மட்டும் அனுமதித்திருக்கலாம். இந்த இரண்டு நாட்களில் எத்தனை கொரோனா நோயாளிகள் உருவாகினரோ! ஏற்கெனவே தமிழ்நாடு தான் இதிலும் முதலிடம்! :(

    பதிலளிநீக்கு
  4. மக்களுக்கு கொரோனா பயமே கிடையாது அரசு என்ன செய்ய இயலும் ?

    பதிலளிநீக்கு
  5. கவிதை அருமை.

    காளி கவலைகளை தீர்க்கவேண்டும்.

    பிரார்த்தனை செய்வோம்
    வாழ்க வையகம் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  6. இந்த நிலை விரைவில் மாறட்டும்...

    பதிலளிநீக்கு
  7. உங்கள் கவிதை வரிகள் அருமை.

    இந்த நிலை விரைவில் மாற வேண்டும் பிரார்த்திப்போம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. சில செய்திகள் மனதிற்கு வேதனையாக இருக்கிறது. இந்தக்காலக்கட்டத்திலேனும் திருமணம், சீமந்தம் பார்ட்டி, மரணம் போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்கலாம் அல்லது தள்ளிப் போடலாம் அல்லது 10 பேருக்குள் என்று வைத்து நடத்த வேண்டும். கூட்டம் கூடினால் கண்டிப்பாகப் பரவும் தான். அதுவும் கடைகளில் பயமாக இருக்கிறது.

    எங்கள் நெருங்கிய நட்பின் மகள் கல்யாணம் மே28 இருந்தது இப்போது அதைத் தள்ளி வைத்துவிட்டார்கள். புதிய தேதி சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். என்றாலும் நாங்கள் பங்கு கொள்வதாக இல்லை.

    காளியிடம் வேண்டிய உங்கள் கவி வரிகள் அருமை அண்ணா. பிரார்த்தித்துக் கொண்டேன்

    இந்த நிலை மாறி எல்லோரும் மகிழ்வாக இருக்க வேண்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
  9. மனதிற்கு பாரம் தரும் செய்திகள். தீநுண்மியின் வேகம் குறைந்து எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே இப்போதைய பிரார்த்தனை.

    உங்களுடைய கவிதை வரிகள் சிறப்பு.

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  10. வேதனையான செய்திகள்தாம். கொண்டாட்டங்களைத் தவிர்ப்பது மிக நல்லது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..