நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 15, 2020

தேடி வந்த தேவி

    


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
துலா மாதமாகிய 
ஐப்பசி இன்றுடன்
நிறைவடைகின்றது..

இம்மாதத்தின் முப்பது நாட்களும்
காவிரியுடன் கலந்தவளாய்
கங்கை இம்மண்ணில்
தவழ்ந்திருந்தாள்..

கடந்த வருடங்களில்
துலா மாதத்தில்
கங்கை - காவிரியைப்
பேசும் பதிவுகள்
வழங்கிய நிலையில்
இவ்வருடம் அப்படி ஒரு பதிவைத்
தொகுத்து இடுவதற்கு
இயலவில்லை..

வேலையின் சூழ்நிலை
கடுமையாக அமைந்து விட்டது..
எனவே - சற்று தாமதமாக
கங்கை காவிரி தரிசனம்..

கங்கோத்ரி

கோமுகி


தலைக்காவிரி

துள்ளி வரும் காவிரி - மேட்டூர்

பொன்னி சூழ் திருஅரங்கம்

கல்லணை

காவிரியின் அருட்கொடை

காவிரியின் மடியில் கண்ணன்
திருச்சேறை..

மேலே உள்ள படம் கணினியில்
எனது சேமிப்பாக உள்ளது..
எனினும் கைப்பேசி வழியாக
பதிவுகள் இயங்குவதால்
இந்தப் படத்தைத் தேடினேன்...

கூகுள் கொடுத்த படம்
துளசிதளத்தினுடையது..
அவர் தமக்கு நன்றி..
 ஃஃஃ


நாளை கடைமுகம்..
மயிலாடுதுறையில்
முடவன் முழுக்கு..
இவ்வருடம்
திருவிழா நடைபெறுவதாகத்
தெரியவில்லை..

இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
எல்லாம் வல்ல இறைவனின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்!..

"கங்கையிற் புனிதமாய காவிரி"
என்பது ஆழ்வார் திருவாக்கு..

ஆழ்வாரின் அருள் வாக்கினை
சிரமேற்கொள்வோம்..
நீர் நிலைகளைக் காத்து
அவற்றின் புனிதம்
போற்றி நிற்போம்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

13 கருத்துகள்:

  1. இனியகாலை வணக்கம் துரை அண்ணா.

    தாமதமானால் என்ன அண்ணா. இப்போது போட்டுவிட்டீர்களே. வேலையின் சூழ்நிலை கடுமை சரியாகும் அண்ணா. பிரார்த்தனைகள்

    படங்கள் அத்தனையும் அழகு. இயற்கை எவ்வளவு தந்திருக்கிறது நமக்கு. கங்கை காவிரி அருமை!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா..
      தங்களுக்கு நல்வரவு...
      வெகு நாட்களாயிற்று.. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. அருமையான படங்களைக் கண்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. வேலையின் கடுமை எப்போது குறையும்?  கணினி எப்போது உங்கள் கைக்கு உபயோகப்படுத்தும் வசதி வரும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      இது மூன்றாண்டுகளுக்கான ஒப்பந்தம்... எட்டு மாதங்கள் காய்ந்து கிடந்த கம்பெனிக்கு அடித்திருக்கிறது யோகம்.. கணினிக்கு வேறு இணைய இணைப்பு (Router) எடுக்க வேண்டும்..

      வேறு இணைப்பு எடுத்தாலும் பகல் பொழுது முழுதும் வேலை நேரமாகி விடுகிறது.. மாலையில் 5 மணிக்குத் திரும்பினால் எதிர் படுக்கைக்காரன் 7 மணிக்கு வந்து உடனே படுத்து விடுவான். அறையின் சூழ்நிலை மாறி விடும்...

      இதற்கிடையே தான் எழுத்துப் பணி..

      அன்பின் விசாரிப்புக்கு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  4. உங்கள் வேலைப் பளு குறைய வேண்டும். பிரார்த்தனைகள். இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் பகிர்ந்துள்ள பதிவு அருமை. இன்று ஆண்டாள் துலாக்காவிரி ஸ்நானத்துக்கு அரங்கனுக்குத் தங்கக்குடத்தில் நீர் எடுத்துச் செல்லும் சப்தங்கள் வழக்கம் போல் காதாரக் கேட்டேன். கீழே போய்ப் பார்க்க முடியாத நிலை! நேரம் ஒத்துவரவில்லை. நாளைக்குக் கடைமுகம் , நாளையும் ஆண்டாள் வருவாள். அதன் பின்னர் இனி அடுத்த வருஷம் தான்.

    பதிலளிநீக்கு
  5. கங்கோத்ரியும் போனதில்லை. தலைக்காவிரியும் போனதில்லை. உங்கள் படப் பகிர்வு மூலம் தரிசனம் கிடைத்தது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. கங்கையிற் புனிதமாய காவிரி...சிறப்பு. உங்கள் சூழல் சீரடைந்து, தொடர்ந்து முன்போல எழுத இறையருளைப் பரவுகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. அழகிய காட்சிகளை காண தந்தமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  8. கங்கோத்ரி போய் இருக்கிறேன், தலைக்காவிரி போனது இல்லை.
    துலா காலம் வந்து விட்டால் மாயவரம் நினைவுகள் வந்து விடும். விடாது மழை பெய்தாலும் கடைமுழுக்கு, முடவன் முழுக்கு அன்று துலாக்கட்டம் சென்று பஞ்சமூர்த்தி தரிசனம் செய்வோம். நாளை முதல் சோமாவார சங்காபிஷேகம் நடைபெறும் .

    நீங்கள் தந்த படங்கள் மூலம் தரிசனம் செய்து கொண்டேன்.

    உங்கள் வேலை பளூகுறைந்து வலைதளத்தில் பகிர்வுகள் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. நம் புண்ணிய தேசத்தை இன்னும் வளம்
    செய்வாள் அன்னை காவிரி.
    கோமுகம் கண்டதில் மிக மகிழ்ச்சிமா.
    நாங்களும் தலைக் காவிரி போயிருக்கிறொம்.
    ஒருசின்னக் குளத்தைப் பார்த்து
    பெருகிவரும் காவிரியையும் கண்டோம்.

    நலம் பெருகட்டும் அன்பு துரை.அன்னை எல்லா வடிவும் எடுத்துக் காப்பாள்.

    பதிலளிநீக்கு
  10. உங்கள் வேலைப் பளு குறைய வேண்டும் பா.
    மனம் தளராமல் இறைவன் பாதங்களைப்
    பிடித்து வந்து முன்னேறுவீர்கள்.

    இங்கேயும் குளிர் சிந்தனையைச் சோதிக்கிறது.
    மீறி வரவேண்டும்.பத்திரமாக இருங்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..