நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 17, 2020

சிவமே சரணம் 12

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்.. 
***

இன்றைய பதிவில்
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த 
திருப்பதிகம்

முதல் திருமுறை
திருப்பதிக எண் - 62

திருத்தலம் - திருக்கோளிலி
- : திருக்குவளை :-

இறைவன் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ வண்டமரும் பூங்குழலாள்


ஸ்ரீ வண்டமரும் பூங்குழலாள் 
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்
தலவிருட்சம் - தேற்றா மரம்

ஸ்ரீ வீதிவிடங்கர் 
ஸ்ரீ அவனி விடங்கர் - நீலோத்பலாம்பிகை
பிருங்க நடனம் ( வண்டு என ஆடல்)

முசுகுந்தச் சக்ரவர்த்தி தேவலோகத்தில் இருந்து கொணர்ந்து
நிறுவிய விடங்கத் திருத்தலங்கள் ஏழினுள்
திருக்கோளிலியும் ஒன்று..


நவக்ரகங்கள் வக்ரமின்றி ஒரே வரிசையில் இருக்கின்றனர்..

குண்டையூர்க் கிழாரின் விருப்பப்படி 
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்கு
நெல் மலை அருளப்பெற்றது இத்தலத்தில் தான்...


நாளாய போகாமல் நஞ்சணியும் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
கேளாய் நங்கிளை கிளைக்கும் கேடுபடாத் திறம் அருளி
கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே.. 1

ஆடரவத்து அழகாமை அணிகேழற் கொம்பார்த்த
தோடரவத்து ஒருகாதன் துணைமலர் நற்சேவடிக்கே
பாடரவத் திசை பயின்று பணிந்தெழுவார் தம் மனத்தில்
கோடரவந் தீர்க்குமவன் கோளிலி எம்பெருமானே.. 2

நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்டு
ஒன்றிவழி பாடுசெயல் உற்றவன்தன் ஓங்குயிர்மேல்
கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்
கொன்றைமலர் பொன்திகழுங் கோளிலி எம்பெருமானே.. 3

வந்த மணலால் லிங்கம் மண்ணியின்கண் பாலாட்டும்
சிந்தை செய்வோன் தன்கருமந் தேர்ந்து சிதைப் பான்வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீசன் என்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலி எம்பெருமானே.. 4

வஞ்ச மனத்தஞ் சொடுக்கி வைகலுநற் பூசனையால்

நஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும்
பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்துகந்தான்
கொஞ்சுகிளி மஞ்சணவும் கோளிலி எம்பெருமானே.. 5


தாவியவன் உடனிருந்தும் காணாத தற்பரனை
ஆவிதனில் அஞ்சொடுக்கி அங்கணன் என்றாதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன்
கோவியலும் பூவெழுகோற் கோளிலி எம்பெருமானே.. 6

கன்னவிலு மால்வரையான் கார்திகழு மாமிடற்றான்

சொன்னவிலு மாமறையான் தோத்திரஞ்செய் வாயினுளான்
மின்னவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியான் அங்கையினில்
கொன்னவிலுஞ் சூலத்தான் கோளிலி எம்பெருமானே.. 7

அந்தரத்திற் தேரூம் அரக்கன்மலை அன்றெடுப்பச்

சுந்தரத்தன் திருவிரலாற் ஊன்ற உடல் நெரித்து
மந்திரத்த மறைபாட வாளவனுக்கு ஈந்தானும்
கொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலி எம்பெருமானே.. 8

நாண்முடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத்

தாணுஎனை ஆளுடையான் தன்னடியார்க் கன்புடைமை
பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்
கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலி எம்பெருமானே.. 9

தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல்

இடுக்கண்வரு மொழிகேளாது ஈசனையே ஏத்துமின்கள்
நடுக்கமிலா அமருலகம் நண்ணலுமாம் அண்ணல்கழல்
கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலி எம்பெருமானே.. 10

நம்பனைநல் அடியார்கள் நாமுடைமா டென்றிருக்கும்

கொம்பனையாள் பாகன் எழிற் கோளிலி எம்பெருமானை
வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்டமிழ்கொண்டு
இன்பமர வல்லார்கள் எய்துவார்கள் ஈசனையே.. 11
-: திருச்சிற்றம்பலம் :-


இன்றைய பதிவு
தஞ்சையம்பதியின்
ஆயிரத்து ஐநூற்று ஒன்றாவது பதிவாகும்..

இவையனைத்தும் அன்புள்ளங்கொண்ட
தங்களால் தான் ஆயிற்று...
நன்றி.. நன்றி..


ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 

ஃஃஃ

14 கருத்துகள்:

  1. ஈஸ்வரன் அனைவரையும் காக்கப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்களுக்கு நல்வரவு...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ஓம் நம சிவாய...
    ஓம் நம சிவாய...
    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      ஓம் சிவாய நம நம சிவாய..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. வாழ்க நலம்
    வாழ்க வையகம்
    ஓம் நம சிவாய

    1501-வது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  4. வாழ்க வையகம். நலமே விளையட்டும்.

    1501-வது பதிவு - வாழ்த்துகள். உங்களது சிறப்பான பதிவுகள் இன்னும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
      நலமே வாழ்க...

      நீக்கு
  5. 1501- வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
    இறை அருளால் அனைத்தும் நலமாக வேண்டும்.
    வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க வையகம்... வளமுடன் வாழ்க..

      நீக்கு
  6. 1501 ஆம் பதிவுக்கு வாழ்த்துகள். கொஞ்சமும் மாறாமல் தொடர்ந்து நல்ல விஷயங்களையே தொகுத்தும், எழுதியும் போடும் பதிவுகள் மிகச் சிறப்பானவை. தொடர்ந்து 2000,3000 எனப்பதிவுகள் வரட்டும்.வாழ்த்துகள், பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் பாராட்டும்
      மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நலமே வாழ்க..

      நீக்கு
  7. எப்போவோ பத்து வருஷங்கள் முன்னால் போனோம் திருக்கோளிலி! சப்த விடங்கர் தரிசனத்தின்போது சென்றது. அரைகுறையாய் நினைவு. பதிகம் முழுவதும் தெரியாது. இங்கே படித்து அறிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருஆரூரில் ஒரு நாள் தங்கிக் கொண்டால் இரண்டு/மூன்று நாட்களில்
      ஏழு விடங்கத் தலங்களையும் தரிசனம் செய்து விடலாம்...

      இறைவன் சித்தம் அதுவாகட்டும்..

      வாழ்க நலம்...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..