நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 14, 2020

அம்பிகை வந்தாள் 2

தஞ்சை வடக்கு ராஜவீதியில்
காளி கோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோயிலில் இருக்கின்றோம்....

தெய்வத் திருமேனிகள் வடிக்கப்படும் கூடமாக இருந்ததாகவும்
பின்னாளில் சிற்பிகள் அகன்று போனதால் உருவாக்கப்பட்ட சிலைகள் அப்படியே விடப்பட்டதாகவும் சொல்கின்றனர்...

இதுவன்றி -
நாயக்கர் வருகைக்கு முன் நிகழ்ந்த அன்னியர் படையெடுப்பினால் சிதைவுற்ற ஏதோ கோயிலின் சிலைகள் இவை - என்றும் சொல்கின்றார்கள்...

உண்மை எது என்பது உறுதிப்படுத்த இயலாமல் இருக்கின்றது...

1990 களில் தமிழக அரசின் சுற்றூலாத் துறை நடத்திய சக்தி தரிசனம் என்ற சுற்றுலாவில் இக்கோயிலும் இடம் பெற்றிருந்தது..

இப்போதும் அந்தச் சுற்றுலா தொடர்கின்றதா என்று தெரியவில்லை...



மேலே உள்ள இரண்டு படங்களும் சிவராத்திரியன்று எடுக்கப்பட்டவை..
அவற்றை வலையேற்றியவர் நண்பர் தஞ்சை ஞானசேகரன் அவர்கள்..

சாதாரண சாம்சங் டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட படங்களில்
தேதியைக் குறித்துள்ளேன்...

16.2.2012 
ஸ்ரீ பஹூளாமுகி அம்மன் (16.2.2012) 
மேலுள்ள படத்தில்
அம்மனின் மூக்குத்தி ஒளியைக் கண்ட பிறகு மனம் நடுக்குற்றது...

அதன் பின் அந்தமண்டபத்திலுள்ள
ஏனைய தெய்வ வடிவங்களைப் படம் எடுக்க மனம் அச்சமுற்றது...

படங்களைத் தனிக் கோப்பில் சேகரித்து வைத்ததோடு சரி...
ஒருமுறை இந்தப் படங்களைப் பதிவிட முயன்றேன்.. தடங்கல் ஆயிற்று...
படங்களை எளிதாகக் கண்டு பிடிக்கவும் இயலவில்லை...


அதன் பின்னரும் இயலவில்லை..

கடந்த சிவராத்திரியின் போது இக்கோயில் வைபவங்களைக்
கண்டபிறகு ஒருவாறு மனம் கொண்டு - கோப்புகளில் தேடிக் கண்டு பிடித்தேன்..

இடர் தீர்த்து இன்னல் களைந்தவளே!..
நல்லவர் எல்லாரையும் காத்தருள்வாய் தாயே!..

- என்ற பிரார்த்தனையுடன் அந்தப் படம் இன்றைய பதிவில்...

ஸ்ரீ சுதர்சனரின் மூலஸ்தானம்  
ராஜகோபுரத்தின் கீழாகக் காணப்படுகின்ற அழகான சிற்பங்கள் -
சமூக விரோதிகளால் சிதைக்கப்பட்டிருக்கின்றன..

பாலகிருஷ்ணன்
எட்டுத் திருக்கரங்களுடன் ஸ்ரீக்ருஷ்ணன் 
புள்ளின் வாய் கீண்ட புண்ணியன் 
ஸ்ரீ ராமச்சந்த்ர மூர்த்தி 
ஸ்ரீ யோக நரசிம்ஹர் 
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர் 


கோயிலை எழுப்பிய நாயக்க மன்னர்களின் சிற்பங்கள்...

பெயர் விவரக் குறிப்புகள் ஏதும் அருகில் இல்லை..


தை சங்கராந்தி தினத்தையொட்டி ஸ்ரீ சுதர்சன மூர்த்திக்கு
செய்யப்பட்டிருந்த அலங்காரத் திருக்கோலம்...

இப்பதிவின் முதல் பகுதிக்கான இணைப்பு - அம்பிகை வந்தாள் 1 

தஞ்சை மாநகரின் வடக்கு ராஜவீதியில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்...

வடக்கு ராஜவீதிக்கு நேரிடையான பேருந்து வசதி இல்லை...

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நகருக்குள் ஒரு பேருந்து சுற்றி வந்து கொண்டிருந்தது...

வீதியில் போக்கு வரத்து நெரிசலாகின்றது என்று இப்போது அதை நிறுத்தி விட்டார்கள்... கும்பகோணத்துக்குள் இதை விட சிறிய தெருக்களில் எல்லாம் பேருந்துகள் இயக்கப்படுவதைக் காணும்போது மனதிற்கு ஏக்கமாக இருக்கும்...

ஆனாலும் -

பேருந்து நிலையத்திலிருந்து கரந்தை வழியாகச் செல்லும் நகர பேருந்துகள்
கொடிமரத்து மூலை என்னுமிடத்தில் நின்று செல்கின்றன்..

அங்கிருந்து வடக்கு ராஜ வீதியில் சற்று தூரம் தான்...

வாய்ப்புக் கிடைக்கும்போது இத்திருக்கோயிலில் தரிசனம் செய்யுமாறு
அனைவரிடமும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...


கண்ணியது உன்புகழ் கற்பது உன்நாமம் கசிந்து பக்தி
பண்ணியது உன்னிரு பாதாம் புயத்தில் பகலிரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் எது என் அம்மே புவியேழையும் பூத்தவளே!..(012)
- அபிராமபட்டர் :-


ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

25 கருத்துகள்:

  1. தஞ்சை செல்லவேண்டும். உறவினர் வேறே அழைத்துக் கொண்டே இருக்கிறார். அப்படிப் போகையில் இந்தக் கோயிலையும் நினைவில் வைத்துக் கொண்டு செல்ல வேண்டும். நல்லதொரு விளக்கம். மூக்குத்தியின் ஒளி கண்ணைக் கூச வைக்கும் போல! படங்கள் எல்லாம் அருமை. அம்பிகை இன்றைக்குத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றியக்கா...

      நீக்கு
  2. அம்பிகை தொடர்ந்து தரிசனம் தரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      நான் நலமே... தங்களது நலமும் அறிய ஆவல்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. மூக்குத்தி அழகினைப் பார்த்ததும் அதில் லயித்துவிட்டேன். அவள் என்றும் நமக்கு துணை இருப்பாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. மூக்கு புல்லாக்கின் ஒளி மனதை நிறைத்தது.
    நம்பிக்கையின் ஒளியாக தெரிகிறது.
    வாய்ப்பு கிடைத்தால் பார்க்க வேண்டும். அம்மன் நினைத்தாள் அழைப்பாள்.
    அழகான படங்கள், செய்திகள் எல்லாம் அம்மனை பார்க்கும் ஆவலை ஏற்படுத்தி விட்டது.
    தரிசனத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      அவளே அனைத்தும் ஆனவள்... கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. படங்கள் சிறப்பு.  அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ள தகுந்த நேரம் பார்த்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அம்பிகையைக் காணக்காண மனம் நிறைகிறது. அவள் மனம் வைத்தாலன்றி ஒன்றும் அசையாது என்பதற்கு. பதிவே சான்று. மூக்குத்தி அழகை. என்னவென்று சொல்வது. !!. கண்ணன் சிற்பங்கள் மிக அருமை. இப்பொழுது உலகை உலுக்கும் நோயை விரட்டவே வந்துவிட்டாள் அன்பு துரையின் பதிவு வழி வந்த அன்னை நாமம் போற்றி போற்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      அன்றைக்கு அந்தப் படத்தை பிரிவியூவில் கண்டதும் அசந்து விட்டேன்...

      அதைப் பதிவிடுவதற்கு அஞ்சினேன்...
      இப்போது மட்டும் பதிவில் வரக் காரணம் என்ன?...

      அதனைப் பிறிதொரு பதிவில் கூறுகிறேன்..

      அன்பின் கருத்துரைக்கு நன்றியம்மா..

      நீக்கு
  10. ஶ்ரீசுதர்சன மூர்த்தி தரிசனம். அற்புதம். நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சியம்மா..

      நீக்கு
  11. செய்தியுடன் படங்கள்... அம்பிகை அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்...

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. படங்களும் இடுகையும் அருமை. எப்போ ப்ராப்தம் இருக்கோ தெரியலை...தரிசனத்துக்கு.

    தஞ்சையிலேயே நிறைய வரலாற்றுச் சிறப்புடைய கோவில்கள் உண்டு என்று படித்திருக்கிறேன். அவைகளுக்குச் செல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை...

      தஞ்சை நகருக்குள் மட்டுமே பதினெட்டுக்கும் மேற்பட்ட பெருமாள் சந்நிதிகள்...

      எட்டு காளி கோயில்கள்.. தவிர
      எட்டு சிவாலயங்கள்... ஆறு முருகன் கோயில்கள்..

      பிள்ளையார் கோயில்கள் தனிக்கணக்கு..

      காமாக்ஷியும் இங்கே...
      வராஹியும் இங்கே...

      மாரியும் இங்கே..
      காளியும் இங்கே...

      வாருங்கள்..வந்து தரிசனம் செய்யுங்கள்..

      நீக்கு
  13. புவி ஏழையும் பூத்தவளே - ஏழு உலகங்களையும் மலரச் செய்தவளே...

    நல்ல பாடலைப் பகிர்ந்துள்ளீர்கள்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..