ராஜவல்லிபுரம் எனும் செப்பறையில் உறைந்திருக்கும்
அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...
ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜ மூர்த்திக்கு
நிகழ்த்தப்படும் ஆனித் திருமஞ்சனத் திருவிழாவின்
திருக்காட்சிகளில் சிலவற்றை நேற்றைய பதிவினில் கண்டோம்..
இன்றும் சில திருக்காட்சிகள்..
வழக்கம் போல திருக்கோயிலின் சார்பில்
அழகிய படங்களை FB ல் வழங்கியிருக்கின்றனர்..
அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...
தீர்த்த னைச்சிவ னைச் சிவ லோகனை
மூர்த்தியை முதலாய ஒருவனைப்
பார்த்தனுக்கு அருள் செய்த சிற்றம்பலக்
கூத்தனைக் கொடியேன் மறந்துய்வனோ..(5/2)
-: திருநாவுக்கரசர் :-
பித்த னைப்பெருங் காடரங்கா வுடை
முத்த னைமுளை வெண்மதி சூடியைச்
சித்தனைச் செம்பொ னம்பலத்த் துள்நின்ற
அத்தனை அடியேன் மறந்துய்வனோ..( 5/2)
-: திருநாவுக்கரசர் :-
காரு லாமலர்க் கொன்றையந் தாரனை
வாரு லாமுலை மங்கை மணாளனைத்
தேரு லாவிய தில்லையுட் கூத்தனை
ஆர்கி லாஅமுதை மறந்துய்வனோ..(5/2)
-: திருநாவுக்கரசர் :-
கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியும் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோம் அன்றே
மற்றாருந் தன்னொப்பார் இல்லா தானை
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏததப்
பெற்றானைப் பெரும் பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. (6/1)
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
குட்மார்னிங்.
பதிலளிநீக்குநேற்று ஒரு பதிவு மிஸ் செய்திருக்கிறேனோ....
அன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு....
படங்கள் அழகு. தரிசனம் செய்துகொண்டேன்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
காலைத் தூக்கி நின்றாடும் அந்தக் கோலம் தான் எத்தனை அழகு? மலர்க்கிரீடத்தின் அழகும், அதை அலங்கரித்திருக்கும் அழகும் சொல்ல வார்த்தைகளே இல்லை. அருமையான படத்தொகுப்பு. நேரில் பார்ப்பதைப் போல் உள்ளன.
பதிலளிநீக்குஅன்பின் அக்கா..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றி..
இனிய காலை வணக்கம். முதல் பகுதியை நானும் படிக்கவில்லையோ.
பதிலளிநீக்குஆனந்த நடனமாடும் தில்லை அம்பலத்துறைவாரையும் அன்னையையும் தரிசித்தது மிக ஆனந்தம் . படங்கள் தத்ரூபமாக எடுத்திருக்கிறார்கள்.
இறைவனின் பாதங்கள் தான் எத்தனை அழகு.
மிக மிக நன்றி துரை ராஜு.
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சியம்மா..
நீக்குநெஞ்சார்ந்த நன்றி..
அருமையான தரிசனம். எனக்கும் ஆலயத்து பட்டர் படங்கள் அனுப்பியிருந்தார்.
பதிலளிநீக்குஅன்பின் நெல்லை..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அபிஷேக படங்களையும் நீங்கள் கொடுத்து இருக்கும் அப்பர் தேவாரத்தை படித்தவுடன்.திருவீழிமிழலை பாடல் அப்பர் அருளியபாடல் நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குநெய்யினொடு பால் இளநீர் ஆடினான் காண்;
நித்தம்மண வாளன்என நிற்கிறாங்காண்;
கையில் மழு வாளொடு மான் ஏந்தினான் காண்;
காலன் உயிர் காலால் கழிவித்தான் காண்;
செய்யதிருமேனி வெண்ணீற்றான் காண்;
செஞ்சடைமேல் வெண்மதியம் சேர்த்தினான் காண்;
வெய்யகனல் விளையாட்டு ஆடினான் காண்;
விண்ணழி தண் வீழி மிழலை யானே.
-அப்பர்
செப்பறை போகவில்லை என்றாலும் வீட்டிலிருந்து உங்கள் பதிவின் மூலம் ஆனி திருமஞ்சனம் தரிசனம் கிடைக்க பெற்றேன்.
நன்றி, வாழ்த்துக்கள்.
கோமதி அரசு மேடம்...
நீக்குவிண் இழி தண் வீழிமிழலையானே - திருவீழிமிழலை கோயிலின் விமானம், திருமாலால் விண்ணுலகத்திலிருந்து கொணர்ந்து நிறுவப் பட்டதினால், விண்ணிழி தண் வீழிமிழலை எனப்பட்டது.
ஆமாம், படித்து இருக்கிறேன்.
நீக்குகோவில் மிக அழகாய் இருக்கும்.
அன்பின் கோமதி அரசு & நெல்லை..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அப்பர் ஸ்வாமிகளின் திருப்பதிகத்தினைக் கருத்தில் கூறியுள்ளதற்கு நெஞ்சார்ந்த நன்றி...
அபிஷேக காட்சிகளை தரிசித்தேன் ஜி
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
படங்கள் அனைத்தும் அட்டகாசமாக இருக்கின்றன.
பதிலளிநீக்குஅருமை.
கீதா