நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 24, 2019

பாலோடு பழம்


ஜூன் 24 - 1927 
இன்று கவியரசர் பிறந்த நாள்...
கூடவே - அவருடைய அன்புத் தோழர்
மெல்லிசை மன்னருக்கும் பிறந்த நாள்..

கவியரசர் வழங்கிய 
கருத்தாழம் மிக்க பாடல்களுள்
இதுவும் ஒன்று..

காலத்தை வென்று நிற்கும் இந்தப் பாடல்
இன்றைய பதிவில்..

நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்..

நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்
நானாக வேண்டும்..

நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்..

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்
உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும்
பசியாற வேண்டும்..
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்
நானாக வேண்டும்
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும்
நீயாக வேண்டும்..

நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்..  

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை
விலையேதும் இல்லை..

ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே
உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை
வேறேதும் இல்லை..

நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்...
***


இனிய இந்தப் பாடல் 
இடம் பெற்ற திரைப்படத்தையும் 
இந்தப் பாடலுக்கு
இசையமைத்தவரைப் பற்றியும்
சொல்லவும் வேண்டுமோ!..

ஜூன் 24 - 1928
கவியரசரும் மெல்லிசை மன்னரும் வழங்கிய இனிய பாடல்கள் 
இன்றைய நாளில் அதிகமாகப் பேசப்படுகின்றன...

இது தான் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் பெருஞ்சிறப்பு..

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!.. - என்றார் கவியரசர்..

அந்த சொல் மெல்லிசை மன்னருக்கும் பொருந்தும்..

அவ்வண்ணமாகிய 
மாபெரும் வித்தகர்களை 
நெஞ்சம் மறப்பதில்லை..
நெஞ்சம் மறப்பதேயில்லை!..  
***

28 கருத்துகள்:

  1. நல்லதொரு அஞ்சலி. பெரும்பாலும் இம்மாதிரிப் பாடல்களை அதிகம் கேட்டிருக்கேனே தவிர்த்துப் பார்த்தது இல்லை! அதிலும் இந்தக் குறிப்பிட்ட பாடல் வரும் படத்தைப் பார்த்தது இல்லை. ஆகவே பாடலை நன்கு ரசிப்பேன். குரல்களின் குழைவும், உணர்ச்சிகளின் வெளிப்பாடும் அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா அவர்களுக்கு
      அன்பின் நல்வரவு...

      மனம் ஒத்த தம்பதியர்க்கு அமுதம் போன்றது இந்தப்பாடல்...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாட்டமா. என்ன ஒரு ஒற்றுமை.
    இந்தப் பாடலிப் போல எல்லாத்தம்பதியினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
    கவியரசரின் எழுத்தும்,மெல்லிசை மன்னனின் இசையும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கலாம்.
    பதிவுக்கு மிக நன்றி அன்பின் துரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா..

      பாடலின் சொல்லும் பொருளும் இனிமையும் என்றென்றும் நிலைத்திருக்கும்...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி ஐயா...

      நீக்கு
  4. இருவரும் காலம் முழுவதும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.
    இறவா புகழ் பெற்ற பாடல்களை தந்தவர்கள்.
    எனக்கு பிடித்த பாடல்.
    படமும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெஞ்சிருக்கும் வரைக்கும் அவர்களது நினைவிருக்கும்...

      தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  5. டைரக்டர் பீம்சிங்கின் பா வரிசை படப் பாடல்கள் எல்லாம் மிகவும் இனிமை.
    விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை கண்ணதாசன் பாடல்கள் எல்லாம் படத்து உயிர் கொடுக்கும்.
    பதிவு அருமை. பாடல் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலத்தை வென்று நிற்கும் பாடல்களைத் தந்த காலம் அது...

      தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  6. இரு சிகரங்களையும் நினைவு கூர்ந்தது சிறப்பு அற்புதமான பாடல் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  7. நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் - என்னையே நீ நினைத்துக்கொண்டிருக்கவேண்டும் - இந்த ஆசை டூ டூ மச் இல்லையோ?

    பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் - இது தாய்மை என்ற உணர்வால்தான் சாத்தியம்.

    சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை - என்ன அருமையான வாழ்க்கைத் தத்துவம்.

    இரண்டு சிகரங்களையும் நினைவுகூர்ந்ததற்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை...

      தின்னும் வெற்றிலையில்
      வேய்ங்குழலானைக் காண வில்லையா நம்மாழ்வார்!...

      எல்லாம் சிவனென நின்றாய் போற்றி!.. என நாவுக்கரசர் உருக வில்லையா!...

      பார்க்கும் திசைதொறும் திரிபுரையாள் திருமேனி... என்று பட்டர் குளிரவில்லையா!...

      பார்க்கும் இடத்தில் எல்லாம் நந்தலாலா.. என்று மகாகவி மருகவில்லையா!..

      அந்த வழியில் தான் கவியரசரும் நிற்கின்றார்..

      ஒருவருக்கொருவர் உளமாரப் பதிந்து நின்றாலே தமிழ் கூறும் நல்லுலகில் ஏது ஒழுக்கக் கேடு?..

      நீக்கு
  8. ஆமாம்...துரை செல்வராஜு சார்....யாருக்கோ, நல்ல பாடல்களை வெளியிடுங்கள் என்று சொல்றது மாதிரி இருக்கே... அவரும் எப்பவாவது கண்ணதாசன் பாடல்களை வெளியிடுவாரே...ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா...
      அப்போதே தம்புராவின் சத்தம் கேட்டது... இதற்குத்தானா!...

      நீக்கு
    2. இதுக்காகவே தம்பூராவை வைத்துவிட்டுத்தானே தளத்துக்கு வந்து பதில் போட்டேன்...அப்படியும் கண்டுபிடித்துவிட்டீர்களே..

      நீக்கு
  9. அனைவரின் நேசத்துக்கும் பாசத்துக்கும் போற்றுதலுக்கும் உரிய இருவர்...
    அருமையான பகிர்வு ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  10. தமிழ் திரையுலகில் மறக்க முடியாத ஜோடியான கவியரசருக்கும், மெல்லிசை மன்னருக்கும் ஒரே நாள்தான் பிறந்த நாள் என்பது ஆச்சர்யமான, சுவாரஸ்யமான தகவல். தகவலுக்கும், நல்ல பதிவுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  11. நான் பேச நினைப்பதெல்லாம்என்மனைவி மட்டும் பேசுகிறாள் அதுவும் சிலகுறிப்பிட்டஇடங்களில் மட்டுமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. அன்பின் தனபாலன்...

    தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

    பதிலளிநீக்கு
  13. சிறப்பானதோர் அஞ்சலி. இருவரும் சேர்ந்து உருவாக்கிய பாடல்கள் இன்றைக்கும் நிலைத்து நிற்பவை.

    நல்லதோர் அஞ்சலி செலுத்திய உங்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..