நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 18, 2016

நினைவஞ்சலி

இன்று மே 18..

இதோ - பாதுகாப்புப் பகுதி.. இங்கே ஒளிந்து கொள்ளுங்கள்!..

- என்ற வார்த்தைகளைக் கேட்டு -

குழந்தைகளும் பெண்களும், வயதானவர்களும் - என, ஆயிரக்கணக்கில் நம்பிக்கையுடன் வந்தனர்..

அவர்களுடைய நம்பிக்கை பழுதானது..

வஞ்சகமும் வக்கிரமும் கை கோர்த்துக் கொள்ள -
சிறு பகுதிக்குள் அடைந்து கொண்ட அவர்கள் மீது கொத்து கொத்தாகக் குண்டுகள் பாய்ந்தன..

அங்கே எழுந்த அவலக்குரல் எட்டுத்திக்கையும் அதிர வைத்தது..

மனித நேயம் மண்ணில் வீழ்த்தப்பட்ட நாள் - இன்று..


முள்ளி வாய்க்கால்!..

உலகம் அழியும் வரை - அழியாதிருக்கும் நினைவுகளுள் ஒன்று..

ஏதிலிகளாக உயிர் துறந்த தமிழினத்திற்கு கண்ணீர் அஞ்சலி..









இசைப்பிரியா
மரணத்தின் தலைவாசலில்




மண்ணில் வீழ்ந்த மலராக இசைப்பிரியா
முள்ளி வாய்க்கால் படுகொலை குறித்த 
மேலதிகத் தகவல்களை -  இங்கே காணலாம்..


கீழேயுள்ள படங்கள்
தஞ்சாவூர்
முள்ளிவாய்க்கால் முற்றத்தில்
அமைக்கப்பட்டுள்ள
சிற்பத் தொகுப்புகள்..

முள்ளிவாய்க்கால் முற்றம் 
முள்ளிவாய்க்கால் முற்றம்
முள்ளிவாய்க்கால் முற்றம்
முள்ளிவாய்க்கால் முற்றம்

கன்னங்களில் வழிந்தவை
தண்ணீர்த் துளிகள் எனில்
இந்நேரம் காய்ந்திருக்கும்..

அவை -
கண்ணீர்த் துளிகள்..

எக்காலத்தும் இனிமேல்
காய்வதற்கில்லை - மனமும்
ஓய்வதற்கில்லை!.. 
*** 

14 கருத்துகள்:

  1. பதிவு வேதனையைத் தந்தது ஜி மனிதம் இனியெனும் வாழடடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்நாளை என்றும் நம் நினைவில் கொள்வோம்..

      தங்கள் வருகைக்கும் அஞ்சலிக்கும் நன்றி..

      நீக்கு
  2. மனதை கலங்க வைத்த பதிவு.படங்கள் மனதை பதற வைக்கிறது.
    அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்நாளை என்றும் நம் நினைவில் கொள்வோம்..
      தங்கள் வருகைக்கும் அஞ்சலிக்கும் நன்றி..

      நீக்கு
  3. வேதனையான நிகழ்வு. வரலாற்றில் மறக்கமுடியாத பதிவு. மனம் கனத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்நாளை என்றும் நம் நினைவில் கொள்வோம்..
      தங்கள் வருகைக்கும் அஞ்சலிக்கும் நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. இந்நாளை என்றும் நம் நினைவில் கொள்வோம்..
      தங்கள் வருகைக்கும் அஞ்சலிக்கும் நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. இந்நாளை என்றும் நம் நினைவில் கொள்வோம்..
      தங்கள் வருகைக்கும் அஞ்சலிக்கும் நன்றி..

      நீக்கு
  6. ஐயா பதிவின் படங்கள் மனதை சுட்டு விட்டது...
    கண்களில் கண்ணீரை தேங்க வைத்தது ஐயா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்நாளை என்றும் நம் நினைவில் கொள்வோம்..
      தங்கள் வருகைக்கும் அஞ்சலிக்கும் நன்றி..

      நீக்கு
  7. முள்ளிவாய்க்கால் பற்றி நினைத்தாலே நெஞ்சம் பதறுகின்றது. ஆனால் நம் மக்கள் அதனை என்றோ மறந்து விட்டார்கள். மலையாளிக்கோ, பஞ்சாபிக்கோ இது நடந்திருந்தால் நாடே பற்றி எரிந்திருக்கும். நம்மவர்க்கு இனப்பற்று என்று வருமோ தெரியவில்லை. போரில் கொல்லப்பட்ட அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்! மனதை பாரமாக்கிய பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்நாளை என்றும் மனதில் கொள்வோம்..
      தங்கள் வருகைக்கும் அஞ்சலிக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..