நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 25, 2015

ஸ்ரீவேங்கடேச சரணம்

நாளெல்லாம் உந்தன் திருநாளே!..

- என என்றென்றும் விழாக்கோலம் பூண்டிருக்கும் திருப்பதியில் -

நிகழும் மங்கலகரமான ஸ்ரீ மன்மத வருடத்தின் பிரம்மோத்ஸவம் சிறப்பான முறையில் நிறைவேறியிருக்கின்றது..


கடந்த செப்டம்பர் 15 - நந்தவனத்திலிருந்து புற்றுமண் எடுத்து வந்து அதில் நவதானியங்களை விதைத்ததுடன் ( பாலிகை - முளைப்பாரி) திருவிழா தொடங்கியது..

மறுநாள் புதன் கிழமையன்று மாலை திருக்கொடியேற்றம்..

கொடியேற்றத்திற்குப் பின் - ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி சர்வ அலங்காரத்தில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் திருவுலா..

தொடர்ந்து -

17/9 அன்று காலை சின்ன சேஷ வாகனத்திலும் இரவு அன்ன வாகனத்திலும்

18/9 அன்று காலை சிம்ம வாகனத்திலும் இரவு முத்துப் பந்தலிலும்

19/9 அன்று காலை கற்பக விருட்சத்திலும் இரவு ஸர்வபூபால வாகனத்திலும் எழுந்தருளினார்..




20/9 அன்று காலை மோகினி அலங்காரத்தில் திருக்காட்சி நல்கிய பெருமாள் - இரவு ஆண்டாள் பட்டுடுத்தி - கோதை நாச்சியார் சூடிக் களைந்த மாலையுடன் கருட சேவை அருளினார்..

21/9 அன்று காலை ஆஞ்சநேய வாகனத்திலும் இரவு யானை வாகனத்திலும்

22/9 அன்று காலை சூரிய பிரபையிலும் இரவு சந்திர பிரபையிலும் சேவை சாதித்தருளினார்.






23/9 அன்று காலை திருத்தேரோட்டம் நிகழ்ந்தது.. 

24/9 அன்று அதிகாலை ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி - தேவியருடனும் 
ஸ்ரீ சக்கரத்தாழ்வாருடனும் சூரிய புஷ்கரணிக்கு எழுந்தருளினார்.

ஸ்ரீ வராஹமூர்த்தியின் திருக்கோயிலுக்கு முன்பாக - திருமஞ்சனம் நடந்தது..




அதன் பின் திருக்குளத்தில் - ஸ்ரீ சக்கரத்திற்கு மூன்று முறை திருமுழுக்கு நடைபெற்றது.

அப்போது கூடியிருந்த பக்தர்களும் நீராடினர்..

மங்கலச் சடங்குகள் அனைத்தும் நிறைவேறிய பின் - 
பல்லக்கில் ஆரோகணித்து ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி திருக்கோயிலுக்கு எழுந்தருளினார்..

இந்த அளவில் பிரம்மோத்ஸவ வைபவங்கள் நிறைவேறிட - 
மாலையில் கொடியிறக்கத்துடன் திருவிழா மங்கலகரமாக நிறைவு பெற்றது..

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் - ஐயன் வேங்கடேசப் பெருமானுக்கு - குலசேகர ஆழ்வார் திருப்படியைத் தாண்டி திருமூலத்தானத்தில் -
மண் சட்டியில் தயிர் சோறு தான் பிரியமான திருவமுது!..

இதை சிந்தையில் கொள்வது அவசியம்!..

கோவிந்தன் வாழும் மலையில் 
கோலாகலங்களுக்குக் குறைவில்லை!..

கோவிந்தன் அன்பினில் கூடிவரும் 
அன்பர்களுக்கும் குறைவில்லை!..

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவ நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே!..
குலசேகராழ்வார்

ஸ்ரீ வேங்கடேச சரணம் சரணம் ப்ரபத்யே!..
* * *

16 கருத்துகள்:

  1. ஸ்ரீ வெங்கடேசரின் திருவிழாவை குவைத்திலிருந்து... அபுிதாபியில் காண வைத்தமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. நேரில் செல்ல இயலா நிலையில் தங்கள் பதிவு வழி காண நேர்ந்தது மகிழ்ச்சியே,,,,
    அழகிய புகைப்படங்கள், அருமையான தொகுப்பு,
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. கண்ணாரக் கண்டு மனதார வணக்க வழிசெய்தீர்கள் ஐயா!
    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..

      தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. எல்லாம் வல்ல எம்பெருமானுடைய திருவருளைப் பெற்று எல்லோரும் நீடுழி வாழ வாழ்த்தி வணங்குகின்றேன் ஐயா ! அருமையான பகிர்வின் மூலம் அகம் குளிர வைத்த தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ஐயா பகிர்வுக்கு மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் .. நன்றி..

      நீக்கு
  5. பிரஹ்மோத்ஸ்வ நிகழ்வுகளை நாங்களும் காண முடிந்தது - உங்கள் வலைப்பூ வாயிலாக....

    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. திரு மலைக்குப் போக வேண்டும் என்பது என் மனைவியின் விருப்பம் ஆனால் அந்த மாதிரி வரிசையில் போக இயலுமா என்பதும் கேள்விக்குறி. நடந்தே திரு மலைக்குச் சென்றதும் புஷ்கரணியில் நீராடியதும் நினைவில் படங்களின் கீழ் அது பற்றிக் கூறி இருக்கலாமோ. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்களின் நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  7. விழாவினை வலை வழியே காண வைத்தமைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. திருமலைய்ப்பனின் திருவிழா கண்டேன், மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      அன்பின் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..