நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 11, 2015

செல்வக் களஞ்சியம்

செல்வம் என்றால் பொன்னும் பொருளுமா?..

இல்லை..

அமுதத் தமிழ்!..

அதுதான் - அது ஒன்றேதான் செல்வம்!..

அதைத்தான் மகாகவி பாரதியார் கூறுகின்றார்!..


மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைரமணிகள் உண்டோ!..
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிதும் உண்டோ!..

இன்று மகாகவி பாரதியார் அமரத்வம் எய்தியநாள்!.. 
* * *

சின்னஞ்சிறு கிளியே - கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!..
என்னைக் கலிதீர்த்தே - உலகில் 
ஏற்றம் புரிய வந்தாய்!..

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!..
அள்ளி அணைத்திடவே - என்முன் 
ஆடிவரும் தேனே!..

ஓடி வருகையிலே - கண்ணம்மா
உள்ளங் குளிருதடி!..
ஆடித் திரிதல் கண்டால் - உன்னைப் போய்
ஆவி தழுவுதடி!..

உச்சிதனை முகர்ந்தால் - கருவம்
ஓங்கி வளருதடி!..
மெச்சியுனை ஊரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி!..

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி!..
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி!..

சற்று உன்முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சலம் ஆகுதடி!..
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்குதடி!..


உன்கண்ணில் நீர் வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரங் கொட்டுதடி!..
என்கண்ணில் பாவையன்றோ - கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ!..

சொல்லி மழலையிலே - கண்ணம்மா
துன்பங்கள் தீர்த்திடுவாய்!..
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடுவாய்!..

இன்பக் கதைகள் எல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வதுண்டோ!..
அன்பு தருவதிலே - உம்மைநேர்
ஆகுமோர் தெய்வமுண்டோ!..

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைரமணிகள் உண்டோ!..
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிதும் உண்டோ!..


மார்பில் அணிவதற்கே - பாரதி உன்னைப்போல் 
வைரமணிகள் உண்டோ!..
சீர்பெற்று வாழ்வதற்கே - உன் சொல்லைப் போல் 
செல்வம் பிறிதும் உண்டோ!..

எங்கள் ஞானத் திருவிளக்கே!..
உன்திருவடி தொழுகின்றேன்!..

ஓம் சக்தி.. ஓம் சக்தி.. ஓம் சக்தி..
ஓம்!.. 
* * * 

23 கருத்துகள்:

  1. அருமை ஜி பாரதீக்கு பாமாலை சூடியது மிகவும் அருமை நானும் இதனைக்குறித்து எழுதினேண் பிறகு வேறு விடயத்துக்காக மாற்றி வைத்து விட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  3. வணக்கம்,
    பாரதியின் நினைவுநாளில் அருமையான பாடல் தொகுப்பு பகிர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. பைந்தமிழைப் பாரெங்கும் உணர வைத்த பாவலனின்
    நினைவுப் பதிப்பு மிக அருமை ஐயா!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. இதுதான் பாரதியின் பெருமை. அவனது பாடல்களிலேயே அவனை நினைவு கூர்ந்து விடலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      வெல்லப் பிள்ளையாருக்கு வெல்லமே நிவேதனம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. அருமை ஐயா
    பாரதியின் நினைவினைப் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  8. ஆஹா... கண்ணம்மாவுக்கு பாரதி பாடிய கவிக்காவியம் இது...
    பகிர்வுக்கு நன்றி ஐயா...
    மகாகவியை நினைவில் நிறுத்துவோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அருமையான அஞ்சலி. என்றும் மனதை விட்டு நீங்காத பாரதி......

    பதிலளிநீக்கு
  10. அருமையான அஞ்சலிப்பகிர்வு ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. அருமையான பகிர்வு சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  12. நாள்தோறும் புதுமைகள் செய்யும் நல்லவரே, பாரதிக்கு அவர் கவிதையாலேயே மகுடம் சூட்டினீர்கள். மிக்க நன்றி! புதுகையில் பார்க்கலாம் என்றிருந்தேன். தாங்கள் வர இயலவில்லை என்று அறிகிறேன். அதனால் என்ன, தங்கள் வலைப்பூவில் வலம்வரும் எழுத்துக்களால் அன்றாடம் மணம் பரப்பிக்கொண்டுதானே இருக்கிறீர்கள்! உணர்ச்சிதானே நட்பாம் கிழமை தரும்? - அன்புடன், இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் நட்பு - பெரிதும் மகிழ்ச்சி..
      அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..