சார்ங்கா... சார்ங்கா!..
ஆன்மீக வானில் அலை அலையாய்ப் பரவும் திவ்ய நாமம்!..
திருக்குடந்தை ஆராஅமுதன்!..
அவனே - அந்தத் திருப்பெயருக்கு உரியவன்!..
சைவ வைணவ திருக்கோயில்கள் திகழும் திருத்தலங்களுள் - புகழ் பெற்று விளங்குவது கும்பகோணம்!..
குடந்தைக் காரோணம், குடமூக்கு, திருக்குடந்தை என்றெல்லாம் போற்றப்படுவது - கும்பகோணம்..
மகாமகக்குளம் மற்றும் பொற்றாமரைக்குளம் எனும் இரண்டு தீர்த்தங்களை உடையது - கும்பகோணம்..
சோழர்களின் காலத்திலிருந்து -
இன்று வரை மகத்தான பல சிறப்புகளை உடைய எழில் நகரம்.
நகரின் மத்தியில் இலங்குவது - ஸ்ரீசார்ங்கபாணித் திருக்கோயில்..
நிகழும் மங்களகரமான மன்மத வருடம் மாசி மாதம் பத்தாம் நாள் (22/2/2016) திங்கட்கிழமையன்று மகாமகம்..
மகாமகத் திருவிழாவினை முன்னிட்டு குடந்தையிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படுகின்றன..
அந்தவகையில் -
ஸ்ரீ கோமளவல்லி உடனுறையும் ஸ்ரீசார்ங்கபாணி திருக்கோயிலில் - கடந்த ஆண்டு ஜூலை/9 அன்று பாலாலயம் செய்யப்பட்டது.
தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் வழங்கிட - நன்கொடையாளர்களால் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது..
அதன்பின் திருப்பணி வேலைகள் தொடர்ந்தன. அனைத்தும் நிறைவு பெற்று, இன்று அதிகாலை 5.45 மணியளவில் திருக்குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்தது..
திருக்குடமுழுக்கின் சில காட்சிகள் இன்றைய பதிவில்!..
திருக்கோயிலின் ராஜகோபுரங்களும் அனைத்து சந்நிதி விமானங்களும் திருப்பணி செய்யப்பட்டுள்ளன. பொற்றாமரைக் குளத்தின் சுற்றுச்சுவர்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
தாயார் சந்நிதி ஸ்ரீ விமானத்திற்கு ஒரு கலசம்
ஸ்வாமி சந்நிதி ஸ்ரீவிமானத்திற்கு மூன்று கலசங்கள்
கிழக்கு ராஜகோபுரத்தில் ஏழேகால் அடி உயரத்தில் பதினோரு கலசங்கள் -
அகிய இவை அனைத்தும் குடந்தையிலுள்ள தனியார் நிறுவனத்தினரால் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
நேற்று மாலை கலசங்கள் வீதி வலம் வந்தபின் - ராஜகோபுரத்திலும்
ஸ்ரீ விமானங்களிலும் ஸ்தாபிக்கப்பட்டன.
கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு - வியாழன்று மாலை - பூர்வாங்க பூஜைகள் தொடங்கின.
வெள்ளிக்கிழமை காலை காவிரியிலிருந்து புனித நீர் - மேளதாளங்களுடன் யானையின் மீது எடுத்து வரப்பட்டது.
யாக சாலை பூஜைகள் தொடங்கி - பெருமாள், தாயார் , ஸ்ரீதேசிகன் மற்றும் ஆழ்வார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
தொடர்ந்து - இரவு இரண்டாம் கால யாக பூஜை நிகழ்ந்தது.
சனிக்கிழமை மூன்று மற்றும் நான்காம் கால பூஜைகளும்
ஞாயிற்றுக்கிழமை ஐந்து மற்றும் ஆறாம் கால பூஜைகளும் நடந்தன.
இன்று அதிகாலை மூன்று மணியளவில் விஸ்வரூப திருக்காட்சியுடன்
நித்ய ஆதாரணங்கள், துவார பூஜை, பாலிகா பூஜை, கும்ப மண்டல பூஜைகள், பிராயச்சித்த ஹோமத்துடன் பூர்ணாஹூதி வழங்கப்பட்டது.
தொடர்ந்த நிகழ்வுகளில் அதிகாலை ஐந்து மணிளவில் கடங்கள் புறப்பட்டன.
சந்நிதி வலம் வந்து - காலை 5.45 மணியளவில் ஏக காலத்தில் ராஜகோபுரங்கள் மற்றும் சந்நிதி விமானங்களுக்கு திருக்குடமுழுக்கு சிறப்புடன் நடைபெற்றது..
அத்துடன் மகா தீபஆராதனையும் நடைபெற்றது..
திருக்குடமுழுக்கு வைபவத்தைத் தரிசிப்பதற்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தரிசித்து இன்புற்றனர்.
இன்று மாலை ஸ்ரீ கோமளவல்லித் தாயாருடன் ஆராஅமுதன் தங்கக் கருட வாகனத்தில் திருவீதி எழுந்தருள்கின்றார்..
இன்றைய பதிவில் இடம்பெற்றுள்ள படங்கள் Facebook- ல் பெற்றவை..

ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் நம்மாழ்வார் - என,
ஏழு ஆழ்வார் பெருமக்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட பெருமை உடைய திருக்கோயில்.
வேத விமானம் எனப்படும் வைதிக விமானத்தின் கீழ் -
அரவணையில் - உத்தான சயனத் திருக்கோலம்.
சொர்க்க வாசல் இல்லாத திவ்யதேசம்..
இத்திருத்தலத்தில் பெருமாளை சேவித்தவர்க்கு - மறு பிறப்பு ஏதும் இல்லை என்பதாக ஐதீகம்.
பெருமாளின் சந்நிதி தேர் வடிவில் அமைந்திருப்பது சிறப்புடையது.
சந்நிதியின் இருபுறமும் உத்ராயன திருவாசல் மற்றும் தட்சிணாயன திருவாசல்.
தை முதல் ஆனி வரை உத்ராயன திருவாசலும் ஆடி முதம் மார்கழி வரை தட்சிணாயன திருவாசலும் திறந்திருக்கும்.
ஒரு வாசல் திறந்திருக்கும் போது மற்றொன்று அடைக்கப்பட்டிருக்கும்.
தற்போது திறந்திருப்பது - உத்ராயன திருவாசல்.
நிகழும் மங்களகரமான மன்மத வருடம் மாசி மாதம் பத்தாம் நாள் (22/2/2016) திங்கட்கிழமையன்று மகாமகம்..
மகாமகத் திருவிழாவினை முன்னிட்டு குடந்தையிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படுகின்றன..
அந்தவகையில் -
ஸ்ரீ கோமளவல்லி உடனுறையும் ஸ்ரீசார்ங்கபாணி திருக்கோயிலில் - கடந்த ஆண்டு ஜூலை/9 அன்று பாலாலயம் செய்யப்பட்டது.
தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் வழங்கிட - நன்கொடையாளர்களால் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது..
அதன்பின் திருப்பணி வேலைகள் தொடர்ந்தன. அனைத்தும் நிறைவு பெற்று, இன்று அதிகாலை 5.45 மணியளவில் திருக்குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்தது..
திருக்குடமுழுக்கின் சில காட்சிகள் இன்றைய பதிவில்!..
திருக்கோயிலின் ராஜகோபுரங்களும் அனைத்து சந்நிதி விமானங்களும் திருப்பணி செய்யப்பட்டுள்ளன. பொற்றாமரைக் குளத்தின் சுற்றுச்சுவர்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
தாயார் சந்நிதி ஸ்ரீ விமானத்திற்கு ஒரு கலசம்
ஸ்வாமி சந்நிதி ஸ்ரீவிமானத்திற்கு மூன்று கலசங்கள்
கிழக்கு ராஜகோபுரத்தில் ஏழேகால் அடி உயரத்தில் பதினோரு கலசங்கள் -
அகிய இவை அனைத்தும் குடந்தையிலுள்ள தனியார் நிறுவனத்தினரால் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
நேற்று மாலை கலசங்கள் வீதி வலம் வந்தபின் - ராஜகோபுரத்திலும்
ஸ்ரீ விமானங்களிலும் ஸ்தாபிக்கப்பட்டன.
கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு - வியாழன்று மாலை - பூர்வாங்க பூஜைகள் தொடங்கின.
வெள்ளிக்கிழமை காலை காவிரியிலிருந்து புனித நீர் - மேளதாளங்களுடன் யானையின் மீது எடுத்து வரப்பட்டது.
யாக சாலை பூஜைகள் தொடங்கி - பெருமாள், தாயார் , ஸ்ரீதேசிகன் மற்றும் ஆழ்வார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
தொடர்ந்து - இரவு இரண்டாம் கால யாக பூஜை நிகழ்ந்தது.
சனிக்கிழமை மூன்று மற்றும் நான்காம் கால பூஜைகளும்
ஞாயிற்றுக்கிழமை ஐந்து மற்றும் ஆறாம் கால பூஜைகளும் நடந்தன.
இன்று அதிகாலை மூன்று மணியளவில் விஸ்வரூப திருக்காட்சியுடன்
நித்ய ஆதாரணங்கள், துவார பூஜை, பாலிகா பூஜை, கும்ப மண்டல பூஜைகள், பிராயச்சித்த ஹோமத்துடன் பூர்ணாஹூதி வழங்கப்பட்டது.
தொடர்ந்த நிகழ்வுகளில் அதிகாலை ஐந்து மணிளவில் கடங்கள் புறப்பட்டன.
சந்நிதி வலம் வந்து - காலை 5.45 மணியளவில் ஏக காலத்தில் ராஜகோபுரங்கள் மற்றும் சந்நிதி விமானங்களுக்கு திருக்குடமுழுக்கு சிறப்புடன் நடைபெற்றது..
அத்துடன் மகா தீபஆராதனையும் நடைபெற்றது..
திருக்குடமுழுக்கு வைபவத்தைத் தரிசிப்பதற்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தரிசித்து இன்புற்றனர்.
இன்று மாலை ஸ்ரீ கோமளவல்லித் தாயாருடன் ஆராஅமுதன் தங்கக் கருட வாகனத்தில் திருவீதி எழுந்தருள்கின்றார்..
இன்றைய பதிவில் இடம்பெற்றுள்ள படங்கள் Facebook- ல் பெற்றவை..
படங்களை வலையேற்றம் செய்த
திரு. ராமஸ்வாமி நாராயணன் அவர்களுக்கும்
நம்ம கும்பகோணத்திற்கும் (Facebook) மனமார்ந்த நன்றி..
* * *
சங்குதங்கு முன்கைநங்கை கொங்கைதங்க லுற்றவன்
அங்கமங்க அன்றுசென்று அடர்த்தெறிந்த ஆழியான்
கொங்குதங்கு வார்குழல் மடந்தைமார் குடைந்தநீர்
பொங்குதண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே (808)
திருமழிசையாழ்வார்.
குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திரும் பெற்றதாயினும் ஆயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா எனும்நாமம் (956)
திருமங்கையாழ்வார்..
கோமளவல்லித் திருவடிகள் போற்றி.. போற்றி..
சார்ங்கராஜன் திருவடிகள் போற்றி.. போற்றி!..
ஓம் ஹரி ஓம்
* * *
இன்று நடைபெற்ற குடுமுழுக்கு விழாவினை
பதிலளிநீக்குகுவைத்தில் இருந்து பதிவிடும் பக்தி கண்டு மலைத்தேன் ஐயா
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..
இதற்கு முன் கோவிலில் கலசங்கள் இருக்கவில்லையா? உங்கள் வேகம் ஆச்சரியமளிக்கிறது
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குஇதற்கு முன் இருந்த கலசங்களை எடுத்து விட்டு வேறு புதியதாக பொருத்தியிருக்கின்றனர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
ஸ்ரீசாரங்கபாணித் திருக்கோயில் திருக்குடமுழுக்கு வைபவத்தை உங்களின் பகிர்வு மூலம் கண்டோம் ஐயா... நன்றி...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
வைபவம் பற்றிய அருமையான தகவல்கள் படங்கள் ஐயா! பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
Rasithen
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி.
நேற்று (13.7.2015) காலை கும்பகோணம் சார்ங்கபாணிகோயில் சென்று விழாவில் கலந்துகொண்டேன். ஆசைதீர கோயிலைச் சுற்றி வந்தேன். இன்று உங்கள் பதிவில் இன்னும் அதிகமாக புகைப்படங்களுடன் பார்த்தபோது மனதிற்கு நிறைவாக இருந்தது. நன்றி.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதாங்கள் திருக்குடமுழுக்கு விழாவை தரிசனம் செய்தது மகிழ்ச்சி.. தங்கள் தளத்தில் புகைப்படங்களுடன் புதிய பதிவு இல்லையா...
கருத்துரைக்கு நன்றி..
தாங்கள் எடுத்த புகைப்படங்களும் செய்திகளும் நிறைவான இருந்த நிலையில் அந்த யோசனை எனக்கு வரவில்லை. நன்றி.
நீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் மீள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி..
தங்களின் கருத்துப்படி சார்ங்கபாணிகோயில் சென்றுவந்ததை இன்று (16 சூலை 2015) பதிந்துவிட்டேன், தங்களுக்கு நன்றியுடன்.
நீக்குhttp://drbjambulingam.blogspot.com/2015/07/blog-post_16.html
நீக்குவணக்கம்,
பதிலளிநீக்குதங்கள் வேகம் வியப்பினை அளிக்கிறது, இங்கு நடந்த விழா உடன் தங்கள் பதிவில்,
இப்ப எங்கு விழா என்றாலும் தங்கள் பதிவில் பார்க்கலாம் என்ற மன நிலை வந்து விட்டது,
அழகிய படங்களுங்ன கூடிய அருமையான பதிவு,
வாழ்த்துக்கள்.
நன்றி.
அன்புடையீர்..
நீக்குஇனிய வருகை கண்டு மகிழ்ச்சி.. கைக்கெட்டும் அளவில் கிடைக்கும் தகவல்களைப் பதிவில் தருகின்றேன்..
தங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
கும்பகோணக் கோவிலை கண் முன்னே நிறுத்தும் படங்களுடன் பகிர்வு அருமை ஐயா...
பதிலளிநீக்குஅன்பின் குமார்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.