நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 14, 2015

சித்திரைத் திருவே வருக..

இந்த நாள் இனிய நாள்!..

அனைவருக்கும் 
அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..


மங்கலகரமான ஸ்ரீ மன்மத வருடத்தில்
இல்லந்தோறும் மகிழ்ச்சியும் மன நிறைவும் நிலைத்திட
ஸ்ரீமஹாகணபதியை வேண்டிக் கொள்கின்றேன்..
* * *

இன்று செவ்வாய்க் கிழமை மதியம் 1.42 மணிக்கு கிருஷ்ண பட்சம். தசமி திதி அவிட்ட நட்சத்திரம் இரண்டாம் பாதம் மகர ராசி கடக லக்னம் எட்டாம் பாதம்.

நவாம்சத்தில் கும்ப லக்னம் கன்யா ராசி. சித்தயோகம். நேத்திரம் ஜீவனம் நிறைந்த நன்னாள்.

பஞ்சபட்சியில் பகல் நான்காம் ஜாமத்தில் மயில் உணவு கொள்ளும் வேளை.

செவ்வாய் மகாதசையில் சனி புக்தியில் சுக்ரன் அந்தரத்தில் அங்காரக ஓரை கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீ மன்மத வருடம் பிறப்பதாக ஜோதிட ரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் குறிப்பிடுகின்றார்.

மன்மதத்தில் மாரியுண்டு வாழும் உயிரெல்லாமே
நன்மை மிகும் பல்பொருளுநண்ணுமே - மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென்திசையில் காற்றுமிகு
கானப்பொருள் குறையுங் காண்..

- என, இடைக்காட்டு சித்தர் அருளிய வெண்பாவின்படி -

இந்த ஆண்டு நல்ல மழை பொழியும். சகல உயிர்களும் நலம் பெற்று வாழும். நன்மைகள் மிகுத்து வரும். பலவகையான பொருட்களும் பெருகும். சீனத்தில் சண்டை மூளும். தெற்கேயிருந்து புயல் வீசும். கானகத்தில் குறைவு ஏற்படும்..
- என்று அறியப்படுகின்றது.

அறுபது ஆண்டுகளின் வரிசையில் இருபத்தொன்பதாவது ஆண்டு ஸ்ரீமன்மத. 

கலியப்தம் - 5116 எனவும் 
திருவள்ளுவர் ஆண்டு 2046 - 2047 எனவும் 
சாலிவாகன சகாப்தம் 1936 -1937 எனவும் 
பசலி - 1424 - 1425 எனவும் - குறிக்கப்படுகின்றது.

ஸ்ரீ சனைச்சரன் - திருநள்ளாறு
இந்த ஆண்டுக்குரிய ராஜா - ஸ்ரீ சனைச்சரன்.
மந்திரி - ஸ்ரீ அங்காரகன்.

ஸ்ரீ சனைச்சரன் ராஜாவாக வருவதால் சாதாரணமானவர் ஏற்றம் பெறுவர். வழக்கம் போல ஓரிடத்தில் வறட்சியும் மற்றோரிடத்தில் வெள்ளப் பெருக்கும் ஏற்படும். இரும்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் விலை மலியும்.

கால்நடைகளை நோய் தாக்கக் கூடும். மக்களுக்கு போராட்ட குணம் மிகும். திருட்டுகள் அதிகரிக்கும். பாவ காரியங்களைத் துணிந்து செய்வர் - என்றும் குறிப்பிடப்படுகின்றது.

மந்திரியாக செவ்வாய் வருவதால் வெப்பம் அதிகரிக்கும். தீ விபத்துகள் அதிகரிக்கும்.

சேனாதிபதியாக சந்திரன் வருவதால் பருவ மழை பொழியும். ஆறு குளங்கள் நிறையும்.


தான்யாதிபதியான புதனுடன் சூரியன் செவ்வாய் சம்பந்தப்படுவதால் விளைச்சல் மிகும்.  பலவித தானியங்களும் குறிப்பாக பச்சைப் பயிறும் கரும்பும் நன்கு விளையும்.

சஷ்டமாதிபதியாக குரு வருவதால் திருக்கோயில்கள் அர்ச்சகர்கள் நலம் பெறுவர். மண்ணுள் மறைந்திருக்கும் கலைப் பொருட்கள் வெளிப்படும்.

நீரஸாதிபதியாக சுக்ரன் ஆட்சி பெற்றிருப்பதால் கடல் வளம் மேம்படும். மீனவர்கள் நலம் பெறுவர். குறிப்பாக மன்மத வருடம் கடக லக்னத்தில் பிறப்பதால் மக்களிடையே திட்டமிடல் அதிகரிக்கும்.

மகர சங்கராந்தி தேவதை மந்தா எனும் பெயருடன் ஆணும் பெண்ணுமாய்க் கலந்த உருவில் பன்றியின் மீது வடதிசை நோக்கி வருவதால் மழை வளம் அதிகரிப்பது உறுதி.

என்றெல்லாம் - புதிய வருடம் சிறப்பிக்கப்படுகின்றது.


ஸ்ரீ மன்மத வருடத்தில் -
மக்கள் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வர் என்றும் திருக்கோயில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும் என்றும் சொல்லப்படுகின்றது.

மழை வளம் சிறப்பாக இருக்கும். எல்லா உயிர்களுக்கும் குறைவில்லாத நன்மைகள் விளையும். ஏழை எளிய நடுத்தர மக்கள் நலம் பெறுவர் என்பது சிறப்பு.


மன்மத வருடத்தின் ராஜாவாக ஸ்ரீசனைச்சரன் விளங்குவதால் - இவருக்கு அதிபதியாகிய ஸ்ரீ தர்ம சாஸ்தா இந்த ஆண்டின் தெய்வமாகின்றார்.

மந்திரியாகிய அங்காரகனுக்குரிய செவ்வாய்க் கிழமையில் புத்தாண்டு மலர்வதால் -


அங்காரகனுக்கு அதிபதியாகிய ஸ்ரீ முருகப்பெருமானின் திருவடித் தாமரைகள் நமக்கு உற்ற துணையாகின்றன.

அங்காரகன் பூமியிலிருந்து தோன்றியவன்.


அதனால் - சுயம்புலிங்க மூர்த்திகளும் புற்றுருவாக விளங்கும் மாரியம்மனும் கோப தாபங்களில் இருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் நம்மைக் காத்து அருள்வர்.

நாம் நமக்குரிய வரங்களைப் பெற்றே - இந்தப் பூவுலகில் பிறக்கின்றோம்.

சஞ்சித பிராரப்த - கடன்களைத் தீர்த்தே ஆகவேண்டும்.

தந்தை வழியில் முன்னோர்கள் வணங்கிய மூர்த்தியே குலதெய்வம்!..

குலதெய்வத்தின் அருளே பிரதானம்.
அதுவே அனைத்து கஷ்டங்களையும் நீக்க வல்லது.

வீட்டின் - தலைவாசல் நிலைப்படியின் இருபுறமும் தேவசக்திகள் நிலை பெற்றிருக்கும்.

அதனால் தான் நல்ல பொழுதுகளில் தலைவாசலில் மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரித்து விளக்கேற்றி வணங்குகின்றோம்.

கிழக்கு மேற்கோ - வடக்கு தெற்கோ, எந்த வீதியாயினும் நமது இல்லத்தின் அருகில் அமைந்திருக்கும் கோயிலின் மூர்த்தியே - நமக்குக் காவல் தெய்வம்.

இந்த மூன்று அம்சங்களையும் - ஒவ்வொரு நாளும் மனதில் கொண்டு வாழத் தலைப்பட்டோம் - எனில்,

வரும் நாட்கள் எல்லாம் வளமான நாட்களே!..

கஷ்டங்கள் தீர பிராயச்சித்தம் தான் செய்யவேண்டும் என விரும்பினால் - மனதார - ஏழை எளியவர்களுக்கு உதவலாம்.

சிற்றுயிர்களை - இயற்கைச் சூழலைக் காக்கலாம்.

வாசலில் அரிசி மாவினால் கோலமிடுவதும்
தெருவில் திரியும் விலங்குகளுக்கு உணவளிப்பதும்
சாலையோர மரத்திற்கு ஒரு குடம் நீர் வார்ப்பதும் - மிகப்பெரிய அறங்கள்.


யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவினுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே!..

- என்பது திருமூலர் அருளிய திருமந்திரம்.

பிறருக்கு இன்னுரை கூறுவதனால் - உள்ளம் குளிர்கின்றது. 

உள்ளம் குளிர்வதனால் - உள்ளுறையும் சிவம் நெகிழ்கின்றது..

சிவம் நெகிழ்வதால் உடனுறையும் சக்தியும் மகிழ்கின்றது...

இதனால் விளையும் நன்மைகள் பலகோடி..
எனினும் - இவ்விதமாக அவற்றை வகுத்திருக்கின்றனர் ஆன்றோர்..


கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் 
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமியும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்

சலியாத மனமும் அன்புஅகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பம் இல்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய 
தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!..

அமுதீசருடன் உறையும் அபிராமவல்லி 
அனைவருக்கும் நல்லருள் பொழிவாளாக!..

திருச்சிற்றம்பலம்
* * *

24 கருத்துகள்:

  1. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்வும் வளமும் பெருகட்டும்..
      சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

      தங்கள் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமும் வளமும் பெருகட்டும்..
      சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

      தங்கள் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்வும் வளமும் பெருகட்டும்..
      சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

      தங்கள் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. வரும் நாட்கள் எல்லாம் வளமான நாட்களே என்னும் நம்பிக்கையில் இந்த ஆண்டை எதிர்கொள்வோம். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வளமும் நலமும் பெருகட்டும்..
      சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

      தங்கள் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்வும் வளமும் பெருகட்டும்..
      இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

      நீக்கு
  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமும் வளமும் பெருகட்டும்..
      இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

      நீக்கு
  7. தங்ளுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      வாழ்க வளமுடன்...
      இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

      நீக்கு
  8. மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
    செங்கமலத் தாயார் பேரருள் பெற்றெ
    சித்திரைத் திருநாள் தித்திப் பாகும்
    சிறப்பினை பெற்றே வாழி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்வும் வளமும் பெருகட்டும்..
      இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

      நீக்கு
  9. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வளமுடன்..
      நலமும் வளமும் பெருகட்டும்..
      இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

      நீக்கு
  10. தங்கள் பதிவில் சொல்லிய மூன்று அம்சங்களை எப்போதும் மனதில் வைத்து கொள்கிறேன்... நன்றி...
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    வாழ்க வளமுடன்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வளமுடன்.
      தங்களின் கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சி..

      இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

      நீக்கு
  11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மன்மத புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    தாங்கள் சொல்லிய முன்று செய்திகளையும் என்னால் முடிந்தவரை பின்பற்றுகிறேன்,
    வாசல் கோலம்
    உயிர்களுக்கு உணவு,
    சிறு செடிக்காவது தண்ணீர்,
    சாலையில் இப்போ எங்கே மரம் உள்ளது.
    இடைக்காட்டு சித்தர் பாடல், திருமுலர் பாடல் மேற்கோல் அருமை.
    அப்புறம் அந்த பஞ்சாங்கம் சூப்பர்,
    எமக்கும் பார்த்து சொன்னால் நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வளமுடன்.
      தங்களின் கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சி..

      மேலும் - எனக்கு பஞ்சாங்கம் பார்க்கத் தெரியுமே தவிர - பலன்களைக் கணிக்கத் தெரியாது.

      பதிவில் விவரங்களைத் திரட்டுவதற்கு மிகவும் சிரமம் அடைந்தேன்.. காரணம் ஒவ்வொன்றும் ஒருமாதிரியாக இருந்தது. நாளிதழ்களில் வெளியானவற்றின் பொதுவான விஷயமே இது!..

      வருடாந்திர ராசி பலன்கள் என்பது கோட்சாரப் பலன்களே!..

      நாள்தோறும் நல்லதோ கெட்டதோ - அனுபவித்துக் கழிப்பது நமது கடமை!..

      ராசி பலன் என்பது - காகிதக் கப்பல்.. நம்ப வேண்டாம்!..
      ஒவ்வொரு ஜோதிடருக்கும் ஒவ்வொரு கருத்து!..

      அம்பாள் திருவடிகளே சரணம்!..

      இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

      நீக்கு
  12. வாருங்கள் நண்பரே!பதிவினை காண்பதற்கு!
    பாரிசில் பட்டிமன்ற தர்பார்
    http://kuzhalinnisai.blogspot.com/2015/04/blog-post_20.html
    வாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுடைய அழைப்பினுக்கு மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..