நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 13, 2014

உங்களுடன் நான்

இன்று விடியற்காலையில் வேலைமுடித்துத் திரும்பியதும் சற்று நேரம் வலைத்தளங்களில் உலாவிய பின், குளியல் - வழிபாடு!..

பின்னர் சமையல்!.. சற்றே ஓய்வு.. மனம் பின்னோக்கிச் சென்றது. 

பழைய படங்கள் ஏதாவது பார்க்கலாமே!.. - என்று யூ டியூப்பில் துழாவினேன்.

மனதுக்கு மிகவும் பிடித்த அந்தப் படம் சிக்கியது!.. அது - 

மூன்று தெய்வங்கள் - எனும் திரைப்படம். 

கூகிள் வழியே திரைப்படத்தில் ஆழ்ந்திருந்தபோது,  மேலே - 
மணியில் சிவப்புக் குறி!.. ஏதோ செய்தி வந்திருக்கின்றது என்றது மனம்.


வணக்கம் என்று படம் முடிந்ததும் வலைத்தளத்தினுள் நுழைந்து செய்தியைத் திறந்தால் - அன்புக்குரிய ராஜலக்ஷ்மிபரமசிவம் அவர்கள் தனக்கு விருது கிடைத்த விஷயத்தினைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்..

அவர்களுக்கே இப்போது தான் கிடைத்திருக்கின்றதாம் - என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்த சில வரிகளில்  - 
ஆன்மீகம்  வளர்க்கும் ........... எனக் குறிப்பிட்டு எளியேனின் பெயர்.

ஒரிரு விநாடிகள் ஒன்றுமே புரியவில்லை..

அப்படியா!..


எனக்கும் ஒரு விருது!.. முதல் விருது!..  
அதுவும் அன்புக்குரிய ராஜலக்ஷ்மிபரமசிவம் அவர்கள் கையால்!..

அன்பின் வழி நின்று நல்லனவற்றைப் போதித்த நல்லாசிரியை அவர்களின் கையால்!..

இதனை நினைத்துக் கூட பார்க்கவில்லை!..
எனவே நெஞ்சம் நெகிழ்கின்றது.. கண்கள் கசிகின்றன..

உடனடியாக நன்றி கூறி  பதிவு செய்யத் துடித்தது மனம்.
ஆனால் - இயலவில்லை.  தட்டச்சு செய்ய இயலாமல் கைகள் நடுங்கின.

சற்று நேரம் அமர்ந்திருந்தேன். அபிராமி அந்தாதியை எடுத்து சில பாடல்களை வாசித்தேன்.

ஆன்மீகம் வளர்க்கும் - என்ற சொற்கள் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தன.

ஆன்மீகம் என்னையும் வளர்ப்பதாகப் பொருள் புரிந்தது.

அதுதானே உண்மை!..

அவர்களுடைய தளத்திற்குச் சென்று வருகையைப் பதிவு செய்தேன். அங்கே நன்றி எல்லாம் கூறவில்லை.

எனது முழுமையான மகிழ்ச்சி அவர்களுக்கு சமர்ப்பணம்!..

இப்போது உங்களுடன் நான்!..

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது இந்த விருது - எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.



முதலில் விருது வழங்கியவரின் தளத்திற்கு இணைப்பு!..

நீங்கள் மேலும்  பல விருதுகள் பெற வேண்டும் என வாழ்த்தி மகிழ்வுடன் அவர் தளத்திற்கு இணைப்பு இங்கே http://rajalakshmiparamasivam.blogspot.com/2014/09/

அடுத்து,
விருதினை  தளத்தில் போட்டுக் கொள்ள  வேண்டும்.
அவர்கள் சொன்னது போல - கரும்புத் தின்னக் கூலியா?..
போட்டுக் கொண்டு விட்டேன்.

அடுத்ததாக,
என்னைப் பற்றி ஏழு விஷயங்களைச்  சொல்ல வேண்டும்.
இதோ!.. அதையும்  சொல்லி விடுகிறேன்,.

பிறந்ததும் தவழ்ந்ததும் - நெஞ்சை அள்ளும் தஞ்சை. ஆனாலும் தந்தை அரசு ஊழியரானதால் மாவட்டத்தின் பல பகுதிகளில் பயணம்.

ஆதலால் - பயணங்களில் சலிக்காத ஆர்வம்.
 
கதை எழுதுவதில் ஆர்வம். பதின்ம வயதில் எழுதிக் கொடுத்த கல்யாண வாழ்த்துப் பாடல்கள் நூற்றுக்கும் மேல்..

அன்றைய வார இதழ்களுக்கு படைப்புகளை ஆர்வத்துடன் அனுப்பினால் - போன வேகத்தில் திரும்பி வரும். இருந்தாலும் 1977ல்  தஞ்சை நகரைப் பற்றி நான் எழுதிய துணுக்குச் செய்திகளை - ஆனந்த விகடன் வெளியிட்டு முப்பது ரூபாய் பரிசுத் தொகையும் (சொக்கா!..) வழங்கி சிறப்பித்தது.

மிகவும் பிடித்தவன் - பொன்னியின் செல்வன்!..

ஆர்வத்துடன் படிப்பது - கவியரசர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்!..

சிங்கப்பூரில் நான்காண்டுகள். அதன்பின்  - இனிய இல்லறம். மகள் நந்தினி. மகன் சிவஸ்ரீகாந்த்.

பத்தாண்டுகள் குவைத் வாழ்க்கை. அதன்பின் -2005ல் கரந்தையில் ஸ்ரீ விஷ்ணு கம்ப்யூட்டர்ஸ் என பயணம் தொடர்ந்த வேளையில் -

மீண்டும் குவைத் அழைத்தது. இறையருளால் - இன்று உங்களுடன் நான்!..

அடுத்ததாக -
குறைந்த பட்சம் ஐந்து நண்பர்களுடன் இதனை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இதோ - விருதினை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.



என்றும் எனது அன்புக்குரிய - கரந்தை ஜெயக்குமார்

மரியாதைக்குரிய ஐயா சூரிசிவா

மரியாதைக்குரிய  கோபு அண்ணா (VGK)

அன்புக்குரிய தஞ்சை ஹரிணி

அன்புக்குரிய வெங்கட் நாகராஜ்

அன்புக்குரிய அ. பாண்டியன்

அன்புக்குரிய தளிர் சுரேஷ்

அன்றாடம் ஆன்மிக மலர் தொடுக்கும் இராஜராஜேஸ்வரி

அன்புக்குரிய கோமதிஅரசு

கவிதாயினி அம்பாளடியாள்

குருபக்தியுடன் பாமாலை புனைந்த இளையநிலா இளமதி

தேனடையில் இருந்து சிதறும் தேன்மதுரத் தமிழ்

கவிகாயத்ரியின் தூரிகைச்சிதறல்

கவிதையால் கட்டிப்போடும் காவியக்கவி இனியா

வெல்லத்தில் எந்தப் பக்கம் இனிப்பு?..

ஒருவழியாக விதிமுறைகளை நிறைவேற்றி விட்டேன்.

இந்த விருதினைப் பெற்றவர்கள் - இந்த விருதினை தங்களுக்குப் பிடித்த பதிவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

இவர்களுக்கு மட்டுமல்ல..

தஞ்சையம்பதியுடன் இணைந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு உரித்தாகின்றது.


இந்த விருதுக்கு உரியதாக நான் எதையும் செய்திருப்பதாக எண்ணவில்லை.

நான் என்றும் போற்றி வணங்கும் அபிராமவல்லியே இந்த விருதிற்கு உரிமையானவள்!..

நானறிந்த தமிழே - நல்லோர் மத்தியில் என்னையும் இருத்தியது.

கண்ணியது அவள் புகழ்.. கற்பது அவள் நாமம்!.. 
கசிந்து பத்தி பண்ணுவது அவள் திருபாதாம் புயத்தில்!.. 

பெண்ணில் நல்லாளொடு இருக்கும் பெருந்தகை 
அனைவருக்கும் பேரருள் பொழிய வேண்டுகின்றேன்!..

வாழ்க தமிழ்!.. 
வாழ்க நலம்!..
* * *

36 கருத்துகள்:

  1. தாங்கள் இந்த விருது பெற்றதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள்.

    இந்த பெருமைக்குரிய விருதினை அபிராமி பட்டரான தங்கள் திருக்கரங்கள் மூலம் அடியேன் பெற்றதை என் பாக்யமாகக் கருதுகிறேன்.

    மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அபிராமியின் பக்தர்களுள் நானும் ஒருவன் .. அவ்வளவே!..
      தங்களின் வரவும் கருத்துரையும் கண்டு மனம் மகிழ்ச்சி அடைகின்றது.

      தங்களின் நல்வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா!..

      நீக்கு
  2. இந்த VERSATILE BLOGGER AWARD (என் நினைவு சரியானால்) ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சுற்று வந்து விட்டது. அநேகமாக நாம் அறியும் பல வலைப் பதிவர்களும் வாங்கி இருப்பார்கள். உங்களுக்கு இது முதல் விருதானால் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.( போன சுற்றில் எனக்கும் கிடைத்தது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா.
      தாங்கள் அளித்திருக்கும் தகவல் எனக்குப் புதியது. இருப்பினும் எனக்கு இதுவே முதல் விருது. தங்களின் அன்பான வருகையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வாழ்த்துரை கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
    வணக்கம் ஒரே நாளில் இரண்டு விருது எனக்கு.
    காலையில் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்.
    மாலையில் நீங்கள். உங்கள் விருதுக்கு நன்றி, மகிழ்ச்சி.
    உங்களிடம் விருது பெற்ற அனைத்து அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ஐயா முதற்கண் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கின்றேன்
    ஆன்மீகம் உங்களை வளர்த்திருக்கிறது
    ஆன்மீகமும் உங்களால் வளர்ந்திருக்கிறது
    இரண்டுமே உண்மை ஐயா
    ஆன்மீகச் சுடராம் தங்களின் திருக்கரங்களால்
    எனக்கும் ஒரு விருது
    எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை
    மனதில் எழும் மகிழ்ச்சிக்கு நிகரான வார்த்தைகள் வர மறுக்கின்றன
    மீண்டும் வருகின்றேன் ஐயா
    நன்றி நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      விருதுகள் மேலும் என்னை பண்படுத்துவதாக உணர்கின்றேன்.
      எந்நாளும் எல்லாருடைய அன்பும் தழைத்திருக்க வேண்டும்.
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. விருது கிடைத்தமைக்கு வாழ்த்துகள் அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      வாழ்க நலம்.. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. வணக்கம் !
    முதற்கண் தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
    ஐயா !பக்திமணம் கமழும் சிறப்பான படைப்புகளுக்குக் கிடைத்த இந்தக்
    கௌரவ விருது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றே !கூடவே எனக்கும்
    அந்த விருதினைக் கொடுத்துக் கௌரவித்தமைக்கு என் மனமார்ந்த
    நன்றிகள் ஐயா !இன்று விருதுபெற்ற ஏனைய சொந்தங்களுக்கும் என்
    இனிய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் கண்டு உளம் நெகிழ்ந்தேன். என்றென்றும் இந்த அன்பு நிலைத்திருக்க வேண்டுகின்றேன்.

      தங்கள் வருகைக்கும் அன்புக்கும் நன்றி.. வாழ்க நலம்!..

      நீக்கு
  8. வணக்கம் ஐயா!

    ஆன்மாவை ஈடேற்ற ஆன்மீகம் தான்வளர்க்கும்
    தேன்பதிவர் பெற்றநற் சீர்!

    விருது பெற்றமைக்கு என் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா!
    மிகச் சரியாக உங்களைப் பொருத்தமான தலையங்கத்தில்
    விருதுக்கு உகந்தவராகத் தெரிந்து தந்துள்ளர்!
    மிகமிக அருமை! பெருமையாக இருக்கின்றது!
    நல் வாழ்த்துக்கள் ஐயா!
    ஐயா!..
    விருதினைப் பெறுவோர் மத்தியில் நானும் ஒருத்தியா?
    நம்ப முடியவில்லை…

    குருபக்தி கொண்ட பதிவரெனச் சொன்னீர்!
    இருகண்ணும் ஊறியகண் ணீர்!

    எப்படி என் நன்றியினைச் சொல்வேன்!...
    வார்த்தைகள் இல்லாமல் தவிக்கின்றேன்.
    உளமார்ந்த என் இனிய நன்றி ஐயா உங்களுக்கு!

    என்னை ஒருபொருட்டாய் இங்கு விருதுகந்தீர்
    எண்ணினேன் நன்றியினை ஈந்து!

    என்னுடன் இந்த விருதினைப் பெற்றுக் கொண்ட அனைவருக்கும்
    அன்பான என் நல் வாழ்த்துக்கள்!

    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      நல்ல கல்விக்கு அழகு - குருநாதர் பெயர் காத்தல்!..

      கவித்துவமான தங்களின் வாழ்த்துகளைக் கண்டு உளம் நெகிழ்ந்தேன். என்றென்றும் இந்த அன்பு நிலைத்திருக்க வேண்டுகின்றேன்.

      தங்கள் வருகைக்கும் அன்புக்கும் நன்றி.. வாழ்க நலம்!..

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே!

    அல்லல் இன்றி வாழ
    ஆன்மீகம் வளர்த்து
    உலகம் உய்ய வழி
    செய்யும் உம்மை
    உலகம் உள்ளளவும்
    போற்றும் இவ் வையம்
    உகந்ததே இவ் விருதும்...!
    விருது பெற்றமைக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சகோ !

    கவிதையால் கட்டிப் போடும் காவியக் கவி இனியா என்று எனக்கும் விருது தந்து சிறப்பித்தமை கண்டு நம்ப முடியாமல் வாயடைத்து நிற்கின்றேன் கண்களில் நீர் மல்க. நன்றி ! என்று ஒரு வார்த்தையில் சொல்லி முடித்தல் நியாயமா? இருப்பினும் தற்போது அதை தவிர வேறு வழி இல்லை எனவே என் மனம் கனிந்த நன்றியை ஏற்றுத் தான் ஆக வேண்டும் சகோ!
    இத்துடன் என்னுடன் விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

    நான் தற்போது இரண்டு வாரங்கள் விடுமுறையில் USA சென்று விட்டேன்.
    ஆகையால் வலை தளம் வர முடிவது இல்லை அவசரமாக வந்து ஒரு பார்வை இட்டேன் அதனால் தான் உங்களுக்கு பதில் தர முடிந்தது. தயவு செய்து குறை நினைக்க வேண்டாம். வந்தவுடன் அனைத்தையும் பார்வை இடுகிறேன்.
    மேலும் பல விருதுகள் பெறவும். ஆண்டவன் அருள் யாவும் பெற்று சீரும் சிறப்பாகவும் வாழ மனமார வாழ்த்துகிறேன்.சகோ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..

      அம்பாளடியாள், இளமதி, தாங்கள் - என அடுத்தடுத்து தமிழ் கொண்டு வாழ்த்தியமை கண்டு மனம் நெகிழ்ந்திருக்கின்றேன்.
      தங்களின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் கண்டு கண்கள் பனிக்கின்றன.

      என்றென்றும் இந்த அன்பு நிலைத்திருக்க வேண்டுகின்றேன்.
      தங்கள் வருகைக்கும் அன்புக்கும் நன்றி.. வாழ்க நலம்!..

      நீக்கு
  10. அடியேனுக்கும் ஒரு விருது - மிக்க மகிழ்ச்சி நண்பரே.....

    விருது பெற்ற உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சியே!..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு

  11. வணக்கம்!

    மின்வலையில் மீட்டும் வியன்தமிழைப் பாராட்டிப்
    பொன்மலையை ஈந்து பொலிகின்றீா்! - இன்கவியை
    என்றும் இயற்றும்நான் ஏத்தியுனை வாழ்த்துகிறேன்
    நன்றுன் செயலை நயந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா.. வணக்கம்.
      தங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.தங்களின் நற்றமிழ் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி. வாழ்க நலம் . வாழ்க தமிழ்.

      நீக்கு
  12. அன்புள்ள ஐயா,

    வணக்கம். தங்களின் விருது பகிர்வு என்னை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது. இதேபோன்று விருதினை ஐயா ஜிஎம்பி அவர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அப்புறம் வைகோ ஐயா என்று நினைக்கிறேன். இப்போது தாங்கள். உங்கள் எல்லோரின் அன்பிற்கும் தலை வணங்குகிறேன். இது என்னை மேலும் எழுதத் துர்ண்டுகிறது. நன்றிகள் பல. என்றும் மறவேன். தொடர்ந்து தாங்கள் பல விருதுகள் பெற ஆண்டவனை வேண்டி நிற்பேன். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா.. வணக்கம்.
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி.. தாங்கள் மேலும் பல சிறப்புகளை எய்த வேண்டும்.வாழ்க நலம் . வாழ்க தமிழ்.

      நீக்கு
  13. விருது பெற்றதற்கும் அதனை உங்களுக்குப் பிடித்த வலைப்பதிவாளர்களுடன் பகிர்ந்து கொண்டதற்கும் பாராட்டுக்கள். மேலும் மேலும் பல பல விருதுகள் உங்களை வந்தடைய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அம்மா.. வணக்கம்.
      தங்கள் வருகையும் பாராட்டுரையும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி.. தங்களின் இனிய வாழ்த்துரைக்கு மிக்க நன்றி.. அரங்கன் திருவருளால் தாங்கள் மேலும் பல சிறப்புகளை எய்த வேண்டும்.வாழ்க நலம்.

      நீக்கு
  14. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஐயா
    விருதை எனக்களித்ததற்கும் உளமார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி.. தங்கள் வாழ்த்துரைக்கு மனமார்ந்த நன்றி. மேலும் பல சிறப்புகளை தாங்கள் எய்துதற்கு வாழ்த்துக்கள்..வாழ்க நலம் .

      நீக்கு
    2. நேற்று அவசரத்தில் வருகையைப் பதிவு செய்து சென்றேன் ஐயா.
      தேனடையில் இருந்து சிதறுவது என்று என் தளத்தைக் குறிப்பிட்டு இவ்விருதினை எனக்கு அளித்ததற்கு நிக்க நன்றி..என் தளம் தவறாமல் வந்து கருத்திட்டு ஊக்கமளிக்கும் உங்களிடமிருந்து விருது - இரட்டை ஊக்கம் ஐயா..உங்கள் வாழ்த்திற்கும் நன்றி..

      நீக்கு
    3. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க நலம்!..

      நீக்கு
  15. THE VERSATILE BLOGGER AWARD – இனைப் பெற்ற தஞ்சையம்பதி துரை செல்வராஜு அவர்களுக்கு.எனது இனிய வாழ்த்துக்கள்.! பகிர்ந்தளித்தலின் போது தங்களிடமிருந்து அந்த விருதினைப் பெற்ற மற்றைய வலைப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      இதெல்லாம் தங்களைப் போன்ற நல்லோர்களால் சாத்தியம் ஆயிற்று.. தங்களின் அன்பிற்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  17. மனமார்ந்த நல்வாழ்த்துகள் சகோதரரே... தங்கள் எழுத்துப்பணி என்றும் தொடரட்டும். வாழ்க வளமுடன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..