நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 13, 2013

திருக்கருகாவூர் 2

திருக்கருகாவூர் - ஸ்தல வரலாறு ஆச்சர்யமானது..

வேதிகை எனும் பெண்ணின் கணவர் தேவேந்திரனின் அழைப்பின் பேரில் தேவலோகத்திற்குச் சென்றிருந்தார்..

அவ்வேளையில் ஆதரவற்று இருந்தாள் வேதிகை..



அப்போது பசித்து வந்த முனிவர் ஒருவரின் கோபத்துக்கு ஆளாகியதால் வேதிகையின் கர்ப்பத்திலிருந்து கரு நழுவியது..

வேதிகையின் அழுகுரலுக்கு இரக்கம் கொண்ட அம்பிகை- கருவினை கலசத்தினுள் இட்டு பாதுகாத்தாள்!.. 


சில தினங்கள் பாதுகாப்பாக இருந்த கலசத்திலிருந்து வேதிகையின் குழந்தை தோன்றியது..

அப்படித் தோன்றிய குழந்தைக்கு தெய்வப் பசுவாகிய காமதேனு பாலூட்டியது.

அதிசயம் கண்டு பணிந்து வணங்கிய வேதிகை - ஆனந்தக் கண்ணீரால் அம்பிகையின் பாதங்களை அபிஷேகித்தாள். . 

''..அம்மா!. கருகாத்து நின்ற கருணாகரியே!. கர்ப்ப ரக்ஷாம்பிகையே!. கை கூப்பித் தொழும் அனைவரையும் என்றும் - இதேபோல  காத்தருள வேண்டும் தாயே!..''

அன்னையும்  - ''..அவ்வண்ணமே ஆகட்டும்!..'' என புன்னகைத்தாள்.


திருக்கருகாவூர் தலபுராணமாகச் சொல்லப்படும்
இதில் வேறு ஒரு  விஷயமும் உள்ளது.


இன்றைக்கும் குறைப் பிரசவமாகும் சிசு தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு, தனியே வைத்து விசேஷ கவனத்துடன்- பாதுகாக்கப்படுவதும்,

சில தினங்களுக்கு தாய்ப்பால் தவிர்க்கப்படுவதும் நடைமுறையில் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. 

இது - அன்றைக்கே வேதகாலத்தில் நிகழ்ந்துள்ளது என்பதை நாம் உணர்ந்து கொண்டால் -  நம்முள்  எழும் உணர்வு எத்தகையது!..

உண்மை உணரப்படும் போது  - நம் கைகள் பரம்பொருளை நோக்கிக் கூப்பிய வண்ணம் இருக்கும்.

காரணம்...

நம்முள் விதைக்கப்பட்ட மெய்யான ஆன்மீகம்  அத்தகையது!..


அமிர்தவர்ஷினி எனும் வெட்டாற்றின் கரையில் இருக்கின்றது - முல்லை வனம் எனப்படும் திருக்கருகாவூர்.

ஆரண்ய ஸ்தலங்கள்  எனப்படும் பஞ்ச வனங்களில்,

திருக்கருகாவூர் - முல்லை வனம் - இதுவே முதலாவதானது.

மற்ற தலங்கள்  -

அவளிவநல்லூர் - பாதிரி வனம்.
ஹரித்துவாரமங்கலம் - வன்னி வனம்.
இரும்பூளை (ஆலங்குடி) - பூளை வனம்.
திருக்கொள்ளம்பூதூர் - வில்வ வனம்.

அடுத்து -  திருக்கருகாவூர் முல்லைவனநாதர் திருக்கோயிலில் சந்திப்போம்!..

''திருச்சிற்றம்பலம்!. ''

2 கருத்துகள்:

  1. வேதகாலத்திலேயே நிகழ்ந்துள்ளதை நினைக்கும் போது பரவசமாக உள்ளது...

    பஞ்ச வனங்கள் தகவலுக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..