நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 09, 2026

மார்கழி 25

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 25

குறளமுதம்

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.. 395

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை


ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.. 25
*
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை


ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.. 15

ஸ்ரீ சுந்தரர் அருளிச்செய்த 
தேவாரம்

திருக்குருகாவூர் வெள்ளடை

 பண்ணிடைத் தமிழொப்பாய்
பழத்தினில் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய்
கடு இருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள்
மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.. 7/29/6
நன்றி
பன்னிரு திருமுறை
**

ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

6 கருத்துகள்:

  1. மார்கழி 25 ஆம் நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. இன்று ஏனோ இந்தத் தாமதம்?  காலை மூன்று நான்கு முறை வந்து பார்த்துச் சென்றேன்.  சமயங்களில் எங்கள் பிளாக் side பாரில் அப்டேட் ஆகாமல், காட்டாமல் இருக்கும்.  அதுபோலவோ என்று வந்து வந்து பார்த்துச் சென்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருப்பாடல் ஒன்று இரண்டு முறை பதிவாகி விட்டது... அதை சரி செய்ததில் குழம்பி விட்டது பிளாக்கர்...

      நீக்கு
  3. தேவாரம், திருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பண்ணிடைத் தமிழொப்பாய்

      மிகவும் பிடித்த பாடல்...

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..