நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 30, 2025

மார்கழி 15

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
மார்கழி 15

இன்று
வைகுந்த ஏகாதசி


ஸ்ரீ நம்பெருமாள்
ஸ்ரீரங்கம்

ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசர்
தஞ்சாவூர்

கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள் 
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும் 
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே.. 894
தொண்டரடிப்பொடியாழ்வார்

குறளமுதம்

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.. 15

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை


எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.. 15
**

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை


மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.. 5
**

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச்செய்த 
தேவாரம்

திருப் பூந்துருத்தி

நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
    நினையா என் நெஞ்சை நினைவித் தானைக்
கல்லாதன எல்லாங் கற்பித் தானைக்
    காணாதன எல்லாங் காட்டி னானைச்
சொல்லா தனவெல்லாஞ் சொல்லி யென்னைத்
    தொடர்ந்திங் கடியேனை ஆளாக் கொண்டு
பொல்லா என் நோய்தீர்த்த புனிதன் தன்னைப்
    புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.. 6/43/1
நன்றி
பன்னிரு திருமுறை
**

ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..