நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 14, 2025

முசுகுந்தர் 2

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 
திங்கட்கிழமை


இன்று திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு

குன்றில்
குமரன் சிரிக்கட்டும்..
நல்லோர்
அனைவரது வாழ்வும் செழிக்கட்டும்..

முருகா சரணம்
சரணம் சரணம்..


ஆனி ஹஸ்தம் எனது ஜன்ம நட்சத்திரம் ( 3/7).. ஸ்ரீ மகமாயி தரிசனம் செய்தேன்.. 

இன்று பொது வழக்கத்தில் ஜூலை 14.. 

ஒவ்வொரு நாளும் இறைவனின் அருட்கொடை எனக் கொண்டு இப்பதிவுடன் பகிர்ந்து கொள்கின்றேன்..


முசுகுந்தர்  பற்றிய பதிவின் தொடர்ச்சியாக இன்று..


ஒரு சமயம் திருக் கயிலாய மலைச் சாரலில் தழைத்திருந்த வில்வ விருட்சத்தின் கீழ் அமர்ந்து ஐயனும் அம்பிகையும் மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.
 

திருக்கயிலாய வனத்தில் மயில்கள் ஆட, குயில்கள் இசைப் பணியாற்றிக் கொண்டிருந்தன.. அந்த மகிழ்வுடன் மான்கள் துள்ளிக் கொண்டிருந்தன..

குரங்குகளும் கூட்டங்கூட்டமாக தங்கியிருந்தன. 

அப்படி - 
அந்த வில்வ மரக் கிளையில் அமர்ந்திருந்த வயதான ஆண் முசு (குரங்கு) ஒன்று, அம்மையப்பனைக் கண்டுணர்ந்து கிளியில் இருந்த படியே - வில்வ  இலைகளைப் பறித்து, ஒவ்வொன்றாக
கீழே அமர்ந்திருந்த பார்வதி - பரமேஸ்வரர் மீது போட்டது. 

இதைக் கண்ட  அம்பிகை சற்றே கோபம் கொண்டாள். 

அப்போது
" தேவி இந்த முசுவை கோபிக்க வேண்டாம்.. இதன்  செயலை நாம் அர்ச்சனையாகக்  கொள்வோம்!.. " - என்று  சாந்தப்படுத்தினார் பெருமான்..

உமையாம்பிகையும் மனமிரங்கி முசுவுக்கு அருள் புரிந்தாள் . 

அந்தக் கணத்தில் அந்த முசுவின் மனதிலுள்ள அஞ்ஞானம் நீக்கி மெய்ஞானம் உண்டாயிற்று... 

ஞானம் பெற்ற குரங்கு  கீழே இறங்கி வந்து அம்மையப்பனை வலம் செய்து வணங்கி, தன்னைப் பொறுத்தருள வேண்டி தண்டனிட்டது. 

" நீ பிழை ஏதும் செய்யவில்லை..  வில்வ பத்ரங்களால் எம்மைப் பூசித்த அதனால் , மனு வம்சத்தில்  அரசனாகப் பிறந்து
உலகம் முழுவதையும் ஆள்வாயாக "  - என்று அருள் புரிந்தார்..

" மானிடப் பிறவி எடுத்தாலும் 
அம்மையப்பனை என்றும் மறவாமல் இருக்க வேண்டும்..
உலக மாயையில் வசப்பட்டு என் மனதில்  அகந்தை தோன்றாமல்  இருக்க வேண்டும்.. 

அம்மையப்பனாகிய
தங்களையும் மறவாதிருக்க வேண்டும்.. 

அதே சமயத்தில்
அடிமையாகிய நானும் என்னை
மறவாதிருக்க வேண்டும்..

அதனால் அடியேன்  குரங்கு முகத்துடனேயே பிறக்கும்படி  அருள் புரியுங்கள்.. " - என்று பணிவுடன் வேண்டி நின்றது முசு..

பெருமானும் முசு கேட்டுக் கொண்டவாறே வரம் தந்தருளினார்...

இதுவே திருக்கயிலாயத்தில்
 வில்வக் கிளை உதிர்த்த முசு - இந்தப் பூமியில்
செல்வப் பெருங் கிளையான சோழர் 
தம் திருக் குலத்தில்
முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறப்பெய்தி இறவாப்  புகழ் பெற்ற புனித வரலாறு..

முருகன் - தெய்வயானை திருமணத்தில் முசுகுந்தர் கலந்து கொண்டதாக ஒரு வரலாறும் உள்ளது..


இன்றும் திருக் கயிலாய மாமலையில் முசுகுந்தர் மெய்க்காவலாக இருக்கின்றார் என்பது ஐதீகம்..

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ வாரியார் ஸ்வாமிகளின் உபந்யாசத்தில்  தெரிந்து கொண்ட முசுகுந்தர் புராணத்தை என்னளவில் தந்துள்ளேன்..

பிழைகளை மன்னிக்கவும்..

முசுகுந்தர் திருவடிகள் போற்றி

ஆரூரில் 
முசுகுந்தர் சித்திரம்


நந்தீசர் நின்ற திருக்கோலம்


தஞ்சை
 பெரியகோயில்
விடங்கர்



ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவம் ஆன நாளோ
கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ
காமனையும் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ
மான்மறி கை ஏந்தியோர் மாதோர் பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திரு ஆரூர் கோயிலாக் கொண்டநாளே... 6/34/1
-: திருநாவுக்கரசர் :-

திவயதேசங்களில் ஒன்றான
தஞ்சை ஸ்ரீ நீலமேகப் பெருமாள் திருக்கோயிலுக்கும்
இன்று மகா சம்ப்ரோக்ஷணம்..

ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

3 கருத்துகள்:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா..   நோய்நொடிகள் நீங்கி மனநிறைவுடன் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. சிவநாமம் சொல்வோம்.  சிறப்பெல்லாம் பெறுவோம்.

    பதிலளிநீக்கு
  3. முசுகுந்தர் புராணம் அறிந்தோம்

    ."திருக்கயிலாயத்தில்
    வில்வக் கிளை உதிர்த்த முசு " அதன் பக்தி மெய்சிலிர்க்க வைத்தது.
    சிவாயநமக.

    திருப்பரங்குன்றம் குடமுழுக்கு விழா சிறப்பாக நிறைவுற்று இருக்கும்.

    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..