நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 32
வியாழக்கிழமை
இன்று பிரதோஷம்
கார்த்திகை..
தஞ்சையில்
கருடசேவையின் போதும் நவநீத சேவையின் போதும்
தெற்கு ராஜவீதி ஸ்ரீ கலியுக வேங்கடேசர் கோயிலுக்கு முன்பாக இரண்டு நாளும்
தஞ்சை சௌராஷ்ட்ர சபையினரால் நாம சங்கீர்த்தனமும் அன்ன தானமும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது..
அடுத்துள்ள ஸ்ரீ அன்னபூரணி கோயிலின் முன்பு பெரிய பந்தலிடப்பட்டு எழுந்தருள்கின்ற பெருமாளுக்கு நிவேத்தியத்துடன் கற்பூர ஆரத்தி..
அந்த வகையில்
இருபத்து நான்கு நிவேத்யங்கள் சமர்ப்பிக்கப்பட்டன..
நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு வந்த பெரியவர்களை வணங்கி ஆசி பெற்றது பெரும் பாக்கியம்..
அங்கே சடாரி பெற்று வருவதற்குள் கழற்றி வைத்த செருப்பு தொலைந்து விட்டது..
கொதிக்கும் வெயிலில்
ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும்
வந்தோர் பலர்..
நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு வந்த பெரியோர்களுக்கு முன் நான் சாதாரணம் எனினும் செருப்பு இன்றி நடக்க இயலவில்லை..
இருந்தும்
தெற்கு ராஜவீதியில்
இருந்து மேல ராஜ வீதி காமாட்சியம்மன் கோயில் வரை (மூன்று கி.மீ) சென்று திரும்பி வந்தேன்..
பல இடங்களிலும் சித்ரான்னம் வழங்கிக் கொண்டிருந்தனர்..
தவிரவும் தெற்கு ராஜவீதி ஸ்ரீ அன்னபூரணி சந்நிதியில் போல - மேல ராஜவீதியின் பல வீடுகளிலும் இருபத்து நான்கு நிவேத்யங்கள் சமர்ப்பித்து மகிழ்ந்தனர்..
இல்லம் ஒன்றில் வாசலில் வைத்து மாம்பழம் வழங்கி மகிழ்ந்தனர்..
தண்ணீர், மோர், பேரீச்சம் பழம், உலர் திராட்சை, கற்கண்டு என - மக்களின் அன்பிற்கு அளவில்லை..
சுட்டெரிக்கும் வெயிலில் செருப்பில்லாமல் நடப்பது அவ்வளவு எளிதாக இல்லை..
ஆனாலும்,
அடியார்கள் பலர் செருப்பின்றி நடந்து கொண்டு இருந்தனர்..
தெற்கு ராஜவீதியில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தண்ணீர் குழாயைத் தெருவில் போட்டு குளிரச் செய்திருந்தார்கள்..
சாலைகளின் அழகு சொல்லி மாளாது..
பற்பல காரணங்களால்
மாணிக்கப் பரல்களாக
ஆங்காங்கே ஜல்லிக் கல் சரளைகள் சிதறிக் கிடந்தன..
இவற்றை கவனத்தில் கொண்டு ஒழுங்கு செய்வது யார்?..
தெரியவில்லை..
ஏதும் கேட்டால் -
" இஷ்டம் என்றால் நட.. இல்லாவிட்டால் வீட்டிலேயே கிட!.. " - என்பார்கள்..
நமக்கு எதற்கு ஊர் வம்பு?..
இருந்தாலும், சில பிரச்னைகள் தவிர்க்கவே இயலாமல்..
சடாரிக்கும் குங்குமத்துக்குமாக மனம் துணிந்து நெருக்கியடித்து முட்டி மோதிக் கொண்ட மங்கையர் திலகங்கள்..
மாற்றுச் சாலை வசதி இருந்தும் - ஒழுங்கு முறையின்றி திருவிழா கூட்டத்துக்குள் தாறுமாறாக வந்து - காள்.. காள்.. - என்று ஒலியெழுப்பி இடையூறு செய்த வாகன ஓட்டிகள்..
முறையான அனுமதியுடன் தான் விழா நடக்கின்றது என்றாலும் - எதற்குப் பிரச்னை - என்று கருட வாகன வண்டிகளை விறுவிறுப்பாக நடத்தி விட்டார்கள் நம்மவர்கள்..
கூட்டத்துக்குள் நடக்கும் போது முதுகில் கை வைத்துத் தள்ளுவது எங்கும் சர்வ சாதாரணமாக இருப்பது..
அந்த வகையில் மெதுவாக நடந்த நானும் தள்ளப்பட்டு
தடுமாறினேன்..
கீழே விழாதிருந்தது அதிர்ஷ்டம்..
அப்படி என்னைத் தள்ளிய ஒருவன்
என்னிடம் கேட்ட கேள்வி..
" நடக்க முடியலை.. ன்னால் இங்கே எதுக்கு வந்தாய்?.. "
நான் வந்திருப்பது எதற்கு - என்று அவனுக்கு எப்படித் தெரியும்!..
நாராயண..
நாராயண!..
***
இந்த மாதிரி நிகழ்வுகளில் எத்தனை அசௌகரியங்கள்... முறையான ஏற்பாடுகள் சிலவற்றில் அசட்டையாக இருந்திருக்கிறார்கள் போலும்.
பதிலளிநீக்குஇது விழாக் குழுவினரின் பிழையல்ல..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
நாராயண.. நாராயண..
தள்ளியவன் எதற்கு வந்தானோ... எல்லோருக்கும் இறைவனைக் காணவும், பக்திக்காகவும் வருவதில்லையே...
பதிலளிநீக்குஅந்த ரங்கன் அறிவான் அனைத்தையும்..
நீக்குநாராயண..
நாராயண..
கருட சேவை நிகழ்வுகள் நன்று. இம்மாதிரி நிகழ்வுகளில் இருக்கும் அசௌகர்யங்கள் அதிகம் தான். பலருக்கு பொறுமை இல்லை! அடுத்தவர்கள் குறித்த கவலையும் இல்லை. அவரவர் வேலை நடந்தால் போதும் என்றே இருக்கிறார்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை.
பதிலளிநீக்குஒன்றும் சொல்வதற்கில்லை..
நீக்குஅவ்வளவு தான்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி வெங்கட்..
நாராயண.. நாராயண..
செருப்பில்லாமல் நடப்பது மிகவும் சிரமம்...
பதிலளிநீக்குஎல்லாம் நல்லபடியாக நடந்தது..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
.
நாராயண..
திருவிழாவில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது ஆனால் பக்தியின் தரமும் குறைகிறது என்ன செய்வது ?
பதிலளிநீக்குநம் கையில் ஒன்றுமில்லை..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஜி..
நாராயண..
எனக்கு அந்த விழாவில் இல்லையே என்று தோன்றும்படி எழுதியிருக்கீங்க.
பதிலளிநீக்கு"நடக்க முடியலைனா இங்க ஏன் வந்த?" - ஆஹா... அருமையான கேள்வி. இந்த மாதிரி பிறர் நம்மைக் குறை சொல்லும்போது நம் பாவம் தொலைகிறது.
இதைத்தான் நானும் நினைத்தேன்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி நெல்லை..
நாராயண..
நாம சங்கீர்த்தனம் செய்யும் பெரியவர்களை வணங்கி - சொல்ல வெட்கம்தான். ப்ரபந்தம் சேவித்துக்கொண்டு வருபவர்களை மற்றும் வைணவர்களை பார்க்கும் இடத்தில் தெண்டனிட்டு சேவிக்க வேண்டும். ஆனால் ரோடில், தரையில், உடை அழுக்காகிவிடுமே என்று நினைத்து பாவனை மாத்திரம் செய்கிறேன். தவறுதான்
பதிலளிநீக்குசாஷ்டாங்கமாக வணங்குவதற்கு எனக்கும் இயலவில்லை..
நீக்குகுனிந்து பாதம் தொட்டு வணங்கினேன்..
மகிழ்ச்சி.. நன்றி..
நாராயண..
இப்படியான நிகழ்வுகள் விழாக்களில் தள்ளு முள்ளும், ஒழுங்கு முறை இன்மையும் நிறைய. செருப்பில்லாமல் நடப்பதும் சிரமம்.
பதிலளிநீக்குபடங்கள் அழகு.
கீதா
உண்மை தான்.. ஆனாலும் என்ன செய்வது..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி சகோ..
நாராயண..
இம்மாதிரி விழாக்களில் கலந்து கொண்டே பல்லாண்டுகள் ஆகிவிட்டன. ஸ்ரீரங்கம் வந்த பின்னர் 2012 ஆம் ஆண்டில் வைகுண்ட ஏகாதசி விழாவிலும், பின்னர் ஒரு முறை சிதம்பரம் திருவாதிரைத் திருவிழாவிலும் கலந்து கொண்டோம். அதன் பின்னர் விழாக்களிலேயே கலந்து கொள்ளுவது இல்லை. கூட்டத்தில் சமாளிக்க முடிவதில்லை. ஒரு முறை மதுரையில் மீனாக்ஷி சந்நிதியில் மூச்சுத் திணறும் நிலை ஏற்பட்டு நல்லவேளையாகக் கூடவே வந்திருந்த எங்க பையர் அதைக் கவனிச்சுட்டு என்னை வெளியே மீட்டார். அதன் பின்னர் கூட்டம் என்றாலே பிடிக்காமல் போய்விட்டது.
பதிலளிநீக்கு