நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 20
சனிக்கிழமை
விசாகம் நிறைந்த பௌர்ணமி..
இன்று
கச்சித் திருப்புகழ்
தத்தத் தத்தத் ... தனதான
தத்தத் தத்தத் ... தனதான
முட்டுப் பட்டுக் ... கதிதோறும்
முற்றச் சுற்றிப் ... பலநாளும்
தட்டுப் பட்டுச் ... சுழல்வேனைச்
சற்றுப் பற்றக் ... கருதாதோ
வட்டப் புட்பத் ... தலமீதே
வைக்கத் தக்கத் ... திருப்பாத
கட்டத் தற்றத் ... தருள்வோனே
கச்சிச் சொக்கப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
தேவ, மனித, விலங்கு, நரக - என்ற
நால்வகை கதிகளிலும் முட்டுப்பட்டு
முழுவதுமாக அலைந்து திரிந்து
(பற்பல பிறவிகள் எடுத்து)
தடுமாற்றம் அடைந்து சுழல்கின்ற
என்னை சிறிதளவாவது
நினைத்தல் ஆகாதோ!.
இதய கமலமாகிய பீடத்தில்
வைத்து வணங்கத் தக்க
திருவடிகளை உடையவனே..
துன்பமுறும் சமயத்தில்
காத்தருள் புரிபவனே..
காஞ்சியில் வீற்றிருக்கும்
அழகிய பெருமாளே!..
முருகா.. முருகா..
***
கச்சித் திருப்புகழ், அருணகிரி நாதர், சட் எனப் புரியாத நடையில் அழகுற எழுதியுள்ளார்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குமுருகா.. முருகா..
முருகா.. என் எண்ணங்களை நேராக்கி வாழ்வை வளமாக்கு. எங்களை எப்போதும் உன் பார்வையில் வைத்திரு.
பதிலளிநீக்கு
நீக்குஎங்களை எப்போதும் உன் பார்வையில் வைத்திருப்பாய் முருகா..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
முருகா.. முருகா..
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். சிறப்பான பாடல். மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்..
முருகா.. முருகா..
முருகா முருகா
பதிலளிநீக்குமுருகா முருகா..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஜி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்களின் அன்னையுடன் அமர்ந்திருக்கும் செல்வங்களை வணங்கி கொண்டேன். தம்பதி சமேதராய் காட்சி தரும் முருகன் அனைவரின் துயரங்களை களைந்தெறிவான் என நம்பிக்கை கொள்கிறேன்.
அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் பாடல் அருமையாக உள்ளது. பாடல் விளக்கமும் தெளிவான தமிழில் அருமை.
முருகன் அனைவரையும் அன்புடன் காத்தருள வேண்டும் என அவன் காலடிகள் பற்றி வேண்டிக் கொள்கிறேன். இந்நாளுக்கான பதிவை தந்தமைக்கு தங்களுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
/// தம்பதி சமேதராய் காட்சி தரும் முருகன் அனைவரின் துயரங்களை களைந்தெறிவான் என நம்பிக்கை கொள்கிறேன்.///
பதிலளிநீக்குநம்பிக்கை கொள்வோம்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
முருகா.. முருகா..
முருகா சரணம்...
பதிலளிநீக்குபொருளுடன் கச்சித்திருப்புகழ் அருமையாக உள்ளது. கூடவே தரிசனங்களும் சிறப்பு.
பதிலளிநீக்கு