நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 24, 2023

ஸ்ரீ விஜயராமர்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 9 
 சனிக்கிழமை

தஞ்சை
கருடசேவை தரிசனத்துடன் மேல ராஜவீதி ஸ்ரீ விஜய ராமர் கோயிலுக்கும் சென்றேன்..

விவரங்கள் இந்தப் பதிவில் தங்களுக்காக..


மேல ராஜவீதி
ஸ்ரீ விஜயராமர் கோயில்

விஜயராமர் கோயில் மராட்டிய மன்னர் பிரதாப சிம்மனால் கட்டப்பட்டதாகும்..


ராஜகோபுரத்தை அடுத்து பலிபீடம்,  கொடி மரம், கருடாழ்வார்..

ஆஞ்சநேயர் சன்னதியுடன்
முன் மண்டபம்.


முன் மண்டபத்தில் பெரிதான வேங்கடேசர் திருமேனி திகழ்கின்றது..

கருவறையில் சீதாதேவி, லக்ஷ்மணர் ஆஞ்சநேயருடன்
மூலவர் ஸ்ரீ விஜய கோதண்டராமர்..

திருச்சுற்றினை அடுத்து ஸ்ரீ பங்காரு காமாக்ஷி அம்மன் கோயில் அமைந்துள்ளது.  

இக்கோயிலின் திருச்சுற்றில் வால்மீகி மண்டபம் உள்ளது. முன்பெல்லாம் இந்த மண்டபத்தில் தான் ராமாயண உபந்நியாசம் நிகழ்வுறும்..

கருடசேவை, நவநீதசேவையுடன்
எல்லா விசேஷங்களும் இக்கோயிலில் சிற்ப்புற நடைபெறுகின்றன..










தஞ்சை அரண்மனை 
தேவஸ்தான 
கோயில்களுள் 
இதுவும் ஒன்று..
***

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே 
ரகுநாதாய நாதாய சீதாய: பதயே நம:
***

11 கருத்துகள்:

  1. வந்தேன்; படங்கள் கண்டேன்; வணங்கினேன்; மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. அறிந்து கொண்டேன் நன்றி ஜி
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இன்று சனிக்கிழமை கருட தரிசனத்துடன் ஸ்ரீ விஜயராமரை தரிசித்துக் கொண்டேன். கோவில் பற்றிய விபரங்கள் படித்து தெரிந்து கொண்டேன். தினம் ஒரு கோவிலாக தாங்கள் தரும் பதிவுகள் மனதிற்கு நிம்மதியை தருகின்றன. தங்களுக்கு மிகவும் நன்றி. 🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  4. விஜயராமர் தரிசனம் பெற்றோம்.

    பதிலளிநீக்கு
  5. இந்தக் கோயில் போன நினைவு இருக்கு. ஆனால் வருடங்கள் பல ஆகிவிட்டன.

    பதிலளிநீக்கு
  6. பல வருடங்கள் முன்பு இந்த கோயிலை தரிசனம் செய்து இருக்கிறேன்.
    இப்போது மீண்டும் தரிசனம் செய்தேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..