நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 14, 2023

ஸ்ரீ வரதராஜர்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 31
புதன்கிழமை

இறைவனின் நல்லருளால்
இந்த ஆண்டு  இந்த அளவுக்கு கருடசேவை மற்றும் நவநீத சேவையை தரிசிக்க முடிந்தது.. 

ஆனாலும் சில பிரச்னைகள் தவிர்க்கவே இயலாமல்..

அவற்றை அப்புறமாக பேசிக் கொள்ளலாம்..

தரிசனத்துடன் தரிசனமாக ராஜ வீதியில் இருக்கும் கோயில்கள் சிலவற்றுக்கும் சென்றேன்..

விவரங்கள் தங்களுக்காக இன்றைய பதிவில்..

கீழ ராஜவீதி
ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில்..

சிறிய கோயில் தான் எனினும்,
ராஜகோபுரத்தைக் கடந்ததும் பலி பீடம், கொடி மரம்  கருடாழ்வார்..

முன் மண்டபத்தில்
நாகர், விநாயகர்.. கருவறையின் முன்பாக இருபுறமும் துவார பாலகர்கள். 

கருவறையில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திகழ்கின்றார்..

இடப்புறம் தாயார் சந்நதி.. முன்புறம் துவாரபாலகிகள் உள்ளனர்..

பெருமாள் சந்நதியிலிருந்து தாயார் சந்நதி செல்வதற்கு சிறிய வாசல் உள்ளது..

பெருமாள் சந்நிதிக்கும் தாயார் சந்நிதிக்கும் தனித்தனி ராஜ கோபுரங்கள்..

இக்கோயில் இரண்டாம் சரபோஜி மன்னரால் திருப்பணி செய்யப் பெற்றதாகும்..

கருடசேவையும் நவநீத சேவையும்  இக்கோயிலில்
நிகழ்கின்றன..

பழைய பேருந்து நிலையத்திற்கு மிக அருகிலுள்ள கீழ ராஜ வீதியில் அமைந்துள்ளது இக்கோயில்..

தஞ்சை அரண்மனை தேவஸ்தான கோயில்களுள் இக்கோயிலும் ஒன்று..










ஓம் ஹரி ஓம்
நமோ வரதராஜாய..
***

12 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி.. ஸ்ரீராம்

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கோவில் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. ஸ்ரீ வரதராஜ பெருமாளை தரிசித்துக் கொண்டேன். கோவிலைப் பற்றிய தகவல்கள் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல தரிசனம்...கோயில் படங்கள் நன்று

    கீதா

    பதிலளிநீக்கு
  4. தகவல்களும் படங்களும் நன்று. உங்களால் எங்களுக்கும் தரிசனம் கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நல்ல விளக்கங்களுடன் கூடிய படங்கள். தரிசனம் செய்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..