நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 15
வெள்ளிக்கிழமை
இன்றைய பதிவில்
பழனித் திருப்புகழ்
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ... தனதான
கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்து ... மதனாலே
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்து ... மிகவாடி
அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
அறுசமய நீதி யொன்று ... மறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அநுதினமு நாண மின்றி ... யழிவேனோ..
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
உலகளவு மால்ம கிழ்ந்த ... மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரி லன்று ... வருவோனே
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனரு ளால்வ ளர்ந்த ... குமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
கருவில் உருவாகிப் பிறந்து, வயதுக்கு ஏற்றபடி வளர்ந்து,
பற்பல கலைகளைக் கற்றறிந்து,
மன்மதனுடைய கணையினால்,
கருங்கூந்தற் பெண்களின் பாதச் சுவடுகள் மார்பில் அழுந்தும்படியான இன்பங்களில் வாழ்ந்து
(அதனால்) விளைந்த
மகிழ்ச்சி (பின்னாளில்) பெரிய கவலைகளாகி
மனம் நொந்து, மிகவும் வாட்டம் அடைந்து,
நாள்தோறும்
ஹரஹர சிவாய என்று நினைத்து வணங்காதவனாயும்
அறுவகைச் சமயங்களைப் பற்றி ஏதும் புரியாதவனாயும்,
உணவிடுவோர் தம்
இல்லத்தின் முன்பாக நாளும் வெட்கமின்றி நின்று - அழிந்து போவேனோ?
ஆதிசேஷன் மீது துயில்கின்ற பெரிய பெருமாள் திரு அரங்கன் ஆகவும் உலகளந்த வாமனன் ஆகவும் விளங்கும் திருமாலவன் மகிழ்ச்சி கொள்ளும்படியான மருமகனே..
தாய், தந்தை எனும் இரண்டு வம்சாவளியிலும்
தூய ப்ரகாசனனாக விளங்குபவனே..
வெற்றி பெறும் கவிராஜ சிங்கமாக (சம்பந்த மூர்த்தியாக) புகலி நகரில் (சீர்காழி) அன்று தோன்றியவனே..
முன்பு ஒரு சமயம் -
பரவை நாச்சியார் வீட்டுக்கு
(சுந்தரருக்காக) ஒரு பொழுது தூது நடந்த பரமனுடைய அருளால் வளர்ந்த குமரேசனே..
பகையாய் நின்ற அசுரர் சேனைகளைக் கொன்று, தேவர்கள் சிறையினின்று மீளும் படியாக வென்று,
பழனிமலை மீதில் நிற்கின்ற பெருமாளே..
இத்திருப்பாடலில் ஞானசம்பந்தப் பெருமானையும் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளையும் அருணகிரியார் குறித்தருள்கின்றார்..
ஹர ஹர சிவாய - என்று நினைத்து வணங்காதவர்கள் என்ன கதிக்கு ஆளாவார்கள் - என்று அருணகிரி நாதர் சொல்வதைப் போலவே அபிராமபட்டரும் அபிராமி அந்தாதியில் குறிப்பிடுகின்றார் என்பது நினைவு கூரத்தக்கது..
முருகா
முருகா..
***
பழனி மலை முருகா... பழனி திருக்குமரா... பழம் ஒன்றை எங்களுக்கு தா... ஞானப் பழம் ஒன்றை எங்களுக்கு தா...
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
முருகா..
முருகா..
முருகா சரணம்
பதிலளிநீக்குமுருகா சரணம்
நீக்குமுருகா சரணம்
மகிழ்ச்சி.. நன்றி ஜி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. வெள்ளியன்று என்னப்பன் முருகன் தரிசனமும், அருணகிரிநாதர் அவனைப்பாடி மகிழ்ந்த திருப்புகழும், அதன் விளக்கமும் படித்து அகமகிழ்வுற்றேன். முருகன் அனைவரையும் காத்தருள வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முருகன் அனைவரையும் காத்தருள வேண்டும்..
நீக்குமுருகா சரணம்
முருகா சரணம்..
மகிழ்ச்சி..
நன்றி..
அருணகிரிநாதர் திருப்புகழைப்பாடி முருகனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குநன்றி.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி..
முருகா..
முருகா..
இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குவெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... அனைவருக்கும் நல்லதையே முருகன் அருளட்டும்.
முருகன் அனைவரையும் காத்தருள வேண்டும்..
நீக்குமுருகா சரணம்
முருகா சரணம்..
மகிழ்ச்சி..
நன்றி வெங்கட்..
முருகன் தரிசனத்துடன் திருப்புகழ் அருமை.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குமுருகா.. முருகா..
திருப்புகழும் அதன் விளக்கமும், மிகச் சிறப்பு.
பதிலளிநீக்குகீதா
முருகா சரணம்
நீக்குமுருகா சரணம்..
மகிழ்ச்சி..
நன்றி சகோ..
முருகா சரணம்...
பதிலளிநீக்குமுருகா சரணம்
நீக்குமுருகா சரணம்..
மகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..