நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 08, 2023

முத்துப் பல்லக்கு

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 25
 வியாழக்கிழமை

வைகாசி மூலம் - 
திருஞான சம்பந்தர் குருபூஜை விழாவை முன்னிட்டு தஞ்சை மேல ராஜ வீதி திருஞான சம்பந்தர் திருமடத்தில் இருந்து சம்பந்தப் பெருமானின் தங்க வண்ண சித்திரத்தை அலங்கார சப்பரத்தில்  வீதி வலமாக எழுந்தருளச் செய்வர்..








அது சமயம் தஞ்சையில் அமைந்துள்ள பிள்ளையார் முருகன் கோயில்களில் இருந்தும் வீதியுலா விமரிசையாக நடைபெறும்.. 

நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிகழும் இந்த வைபவத்தில் அவ்வப்போது தளர்ச்சி ஏற்பட்டாலும் சிறப்புற நிகழ்கின்றது.. 

இந்த ஆண்டில் விளங்கும் கோயில்கள் ..

1) ஸ்ரீ வெள்ளைப் பிள்ளையார் கோயில், கீழவாசல்..
2) ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோயில், குறிச்சித் தெரு..
3) ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஸ்வாமி கோயில், 
ஆட்டு மந்தைத் தெரு..
4) ஸ்ரீ பழனியாண்டவர் கோயில், அரிசிக்காரத் தெரு..
5) ஸ்ரீ ஜோதி விநாயகர் கோயில், சௌராஷ்டிர தெரு..
6) ஸ்ரீ கல்யாண கணபதி, 
உஜ்ஜயினி காளி கோயில், கீழவாசல்..
7) ஸ்ரீ கமல ரத்ன விநாயகர், தெற்கு ராஜவீதி.
8) ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோயில், மேல ராஜவீதி..
9) ஸ்ரீ செல்வ விநாயகர், காம்ராஜர் காய்கறி மார்க்கெட்
10) ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோயில், வடக்கு வாசல்
11) ஸ்ரீ வெற்றி வேல் முருகன் கோயில், மேலவெளி..

இந்த வைபவம் அந்தந்த கோயிலைச் சார்ந்த இறையன்பர்களால் நடத்தப்படுவதாகும்..

கரந்தை கண்ணாடிப் பல்லக்கு தஞ்சை வீதிகளில் வலம் வந்தபோது எதிர்பாராத கடுமையான காற்றும் மழைத் தூறலும்..

அன்றிரவு பலத்த மழை.. இரவில் நடக்க இருந்த முத்துப் பல்லக்கு மின் அலங்கார ரத ஊர்வலத்திற்கு தடுமாற்றம்.. 

மறுநாள் விடியற்காலையில் நடத்தப்பட்ட விழாவின் சில காட்சிகள் இன்றைய பதிவில்..

கடும் காற்று மழையின் காரணமாக - இந்த வருடம் தரிசனம் செய்ய இயலவில்லை..

விழாவின்
படங்களுக்கும்
காணொளிக்கும்
நன்றி..
நம்ம தஞ்சாவூர் Fb,
தஞ்சை ஞானசேகரன்..








தஞ்சை திவ்ய தேசத்தின்
புகழ் பெற்ற  இருபத்து நான்கு கருடசேவை 
நாளை வெள்ளிக் கிழமை
வைகாசி 26 (9/6) காலை ஏழு மணி முதல் 
தஞ்சையின் ராஜ வீதிகளில் 
நடைபெற உள்ளது..

அனைவரும் வருக..
அருளாசி பெறுக!..

திருஞானசம்பந்தர் 
திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. காணொலி சிறப்பு.  படங்களும் அழகு.  எட்டாவது படம் முதல்தான் சற்று பெரிதாக இருக்கின்றன படங்கள்.

    பதிலளிநீக்கு
  2. தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அனைத்தும் அருமை...

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
  4. முத்துப்பல்லக்கு படங்கள் அருமை. காணொளியும் நன்றாக இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருஞான சம்பந்தர் தங்க வண்ண சித்திரத்தை தாங்கிய அலங்கார தேர், விநாயகப் பெருமான், முருகர் போன்ற தெய்வங்களை தாங்கிய வீதியுலா தேர்கள் படங்கள் அனைத்தையும் கண்டு அனைவரையும் வணங்கிக் கொண்டேன். பயங்கர காற்று, மழையிலும் சிரத்தையுடனும், கவனத்துடனும், விழாக்களை நடத்திய அவ்வூர் மக்களுக்கு வாழ்த்துகள். காணொளியும் சிறப்பாக உள்ளது. தெய்வங்களை தரிசித்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. காணொளி அசைந்து கொடுக்கவில்லை. மற்றப்படங்களும் சிறப்பு. தொலைக்காட்சிச் செய்தியில் கூட வெட்டிவேர்ப்பல்லக்கும், கண்ணாடிப்பல்லக்கும் வீதி வலம் வந்த செய்தியைக் கேட்க நேர்ந்தது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..