நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 2
சனிக்கிழமை
இறைவனின் நல்லருளால்
இந்த ஆண்டு இந்த அளவுக்கு
கருட சேவை மற்றும் நவநீத சேவையை தரிசிக்க முடிந்தது..
தரிசனத்துடன் தரிசனமாக ராஜ வீதியில் இருக்கும் கோயில்கள் சிலவற்றுக்கும் சென்றேன்..
விவரங்கள் தங்களுக்காக இன்றைய பதிவில்..
ஸ்ரீ கலியுக வெங்கடேசப் பெருமாள்
தெற்கு ராஜவீதி
இக்கோயிலில்
கிழக்கு வாசல் இல்லை.. வடக்குப் பக்கம் தான் ராஜ கோபுரம்..
கொடி மரத்தில் இருந்து
தரிசிக்க இயலாதபடி சுவர் எழுப்பப்பட்டுள்ளது..
மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ கலியுக வெங்கடேசப்பெருமாள் விளங்குகின்றார்..
அமிர்த வெங்கடேசர் சந்நிதியும் உள்ளது..
முன் மண்டபத்தில் சஞ்சீவி ஆஞ்சநேயர் விசேஷமானவர்..
இக்கோயிலில் நவக்கிரக மேடை அமைத்திருக்கின்றனர்..
பழைய பேருந்து நிலையத்தை அடுத்துள்ள தெற்கு ராஜ வீதியில் அமைந்துள்ளது இக்கோயில்..
கருடசேவை நவநீத சேவையுடன் மற்ற அனைத்து விசேஷங்களும் இக்கோயிலில்
நிகழ்கின்றன..
நிலையில் மன்னன்..
கோவில் கோவிலாகச் சென்று நீங்கள் சேர்க்கும் புண்ணியங்களின் எங்களுக்கும் பங்கு வழங்குவதற்கு நன்றி.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
நாராயண.. நாராயண..
நலம் வாழ்க..
கோயில் சிற்பங்களின் புகைப்படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது ஜி
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நீக்குநாராயண.. நாராயண..
நலம் வாழ்க..
முன் நடை குறைக்கப்பட்டுள்ளது என்பதன் பொருள் விளங்கவில்லை. கோவில் தரிசனம் நன்று
பதிலளிநீக்குகிழக்கு வாசலுக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை..
நீக்குகிழக்கு வாசல் வழியே கோயிலுக்குள் நுழைந்தால் குறைந்த பட்சம் ஐம்பது அடியாவது கொடி மரத்தை நோக்கி நடப்போம் தானே..
இந்தக் கோயிலில் அப்படி இல்லை.. அதனால் தான் முன் நடை குறைக்கப்பட்டுள்ளது என்று எழுதினேன்.. நேரில் வந்து பார்த்தால் தான் புரியும்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நெல்லை அவர்களுக்கு நன்றி..
நாராயண.. நாராயண..
நலம் வாழ்க..
படங்கள் அருமை ஐயா...
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
நாராயண.. நாராயண..
நலம் வாழ்க..
படங்களும் தகவல்களும் நன்று. தரிசனம் கண்டோம். சிற்பங்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்..
நாராயண.. நாராயண..
படங்கள் நன்று. தரிசித்துக் கொண்டோம்.
பதிலளிநீக்குஅற்புதமாய்க் காட்சி அளிக்கும் விதானச் சிற்பங்கள். மற்றவையும் குறைந்தவை அல்ல. கேள்வியே படாத கோயிலும் கூட. நல்லதொரு தரிசனம். நன்றி.
பதிலளிநீக்கு