நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடற்காவிரி..
-: பட்டினப்பாலை :-
உழவர் ஓதை மதகு ஓதை
உடை நீர் ஓதை தண்பதம் கொள்
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி!..
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்
தன் வளனே வாழி காவேரி!..
-: இளங்கோவடிகள் :-
தண்ணீரும் காவிரியே
-: கம்பர்:-
கலவ மயிலுங் குயிலும்
பயிலுங் கடல்போற் காவேரி
(1/67)
முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ் (2/106)
-: திருஞானசம்பந்தர் :-
கைய னைத்துங் கலந்தெழு காவிரி
செய்ய னைத்திலுஞ் சென்றிடுஞ் செம்புனல் (5/75)
மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி (6/73)
-: அப்பர் ஸ்வாமிகள் :-
மாமணிக் கல்லை உந்தி
வளம்பொ ழிந்திழி காவிரி (7/48)
அழகார் திரைக் காவிரி (7/ 77)
-: சுந்தரர் :-
கங்கையிற் புனிதமாய காவிரி
-: தொண்டரடிப் பொடியாழ்வார் :-
ஏழ்தலம் புகழ் காவேரியால்
விளை சோழ மண்டலம்
-: அருணகிரிநாதர் :-
சென்ற 27/5 ல் கல்லணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது..
அப்போது
கும்பகோணத்திற்கு அருகில் இருந்தேன் .. காவிரியாற்றில் நீர் வந்தபோது இரவு நேரம்.. சென்று தரிசிப்பதற்கு இயலவில்லை.. இந்நிலையில் 3/6 அன்று திரு ஐயாற்றில் காவிரி தரிசனம்.. சந்தனம் சாற்றி மலர்கள் தூவி வணங்கி என் அன்பினைத் தெரிவித்துக் கொண்டேன்..
காவிரி காவிரி எனும் போது
என் கண்கள் ஆனந்தக் கடலாட
என் தமிழும் அதனுடன் சேர்ந்தாட
அந்த செங்கரைப் பூக்கள் அசைந்தாட
அங்கு சேலொடு உளுவை புரண்டாட
சிறு குருவிகள் தாமும் மகிழ்ந்தாட
தென்னங்குலைகளும்
வளைந்து கூத்தாட
தென்திசைக் காற்றும்
சேறுடை நாற்றும்
சிலு சிலு என்றே பண்பாட
செக்கர் வானக் கதிரும் சேர்ந்தே
செந்நெல் கதிருடன் நின்றாட
செழுமைகள் எங்கும் குழைந்தாட
கொண்டாடு மனமே
கொண்டாடு..
வாழிய காவிரி வாழியவே!..
***
காவேரித்தாயை வணங்குவோம், வரவேற்போம். உங்களைக் கவிபாட வைத்திருக்கிறாள் காவிரி அன்னை. நல்ல தமிழ்ப்பாக்களை எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
உங்கள் படங்களைப் பார்த்ததும் மொட்டை மாடிக்குப் போய்க் காவிரியைப் படம் எடுக்கும் ஆவல் மேலோங்குகிறது. முடியுதானு பார்க்கலாம். "உளுவை" எத்தனை வருஷங்கள் ஆகிறது இந்தச் சொல்லைக் கேட்டு. இந்த மீன் வகை இன்னமும் இருக்குனு நம்பறேன். காவிரி குறித்த உங்கள் கவிதையும் மற்றக் கவிஞர்களின் அற்புதமான சொல்லோவியமும் அருமை.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குஉளுவை மீனை நினைவு கூர்ந்த்
கருத்துரைக்கு நன்றியக்கா..
கவிதை சிறப்பு உளுவை இதை கையில் பிடிக்க முடியாது.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. உளுவை மீன் கருத்துரைக்கு நன்றி..
அருமை...
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி..
நீக்குபடங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குகாவிரி வழிபாடு அருமை.
கவிதை மிக நன்றாக இருக்கிறது.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
நீக்குஇயற்கை காட்சியை கவிதை அப்படியே கண் முன் கொண்டு வந்து விட்டது. பச்சை பசேல் வயலில் கதிர்கள் காற்றில் தலைஅசைப்பது பார்த்து மகிழ்ந்து இருக்கிறேன். உங்கள் கவிதையில் பர்க்கிறேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. காவிரி ஆற்றின் படங்கள் அருமை. மலர் தூவி வழிபட்ட காவிரி அன்னையின் படங்களும் நன்றாக உள்ளது. காவிரி தாயைக் குறித்து தாங்கள் எழுதிய கவிதை அருமையாக உள்ளது. சொற்கள் அளவாக இயைந்து தங்களின் கவித்திறமையை பறைசாற்றுகிறது. பாராட்டுக்கள். மற்ற புலவர்களின் பாடல்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
நீக்குநடந்தாள் வாழி காவேரி... தாங்கள் இன்று பதிவுக்கு தந்திருக்கும் தலைப்பு அகத்தியர் படப்பாடலாக வரும் சீர்காழி அவர்களின் கம்பீரமான பாடலை நினைவுக்கு கொண்டு வந்தது. இதையும் குறிப்பிட நினைத்து மறந்து விட்டேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநடந்தாய் வாழி காவேரி.. என்னும் வரி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் எழுதியது..
அன்பின்
கருத்துரைக்கு நன்றி..
காவேரி அன்னையை போற்றும் உங்கள் கவிதை சிறப்பு .
பதிலளிநீக்குவணங்குகிறோம் அன்னையை. நிறைந்தோடும் காவேரி பார்க்கும்போதே மகிழ்ச்சி பொங்குகிறது.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
நீக்கு