நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
தன்னலமற்ற தலைமகனாம்
பெருந்தலைவரது பிறந்த நாள் இன்று..
தமிழ்நாட்டின்
முதல்வராகத் திகழ்ந்த
காலத்தில்
வளரும் தலைமுறையின்
கல்விக் கண்களைத்
திறந்து வைத்தவர்..
அவர் திறந்து வைத்த
கல்விக் கூடங்களும்
அணைக் கட்டுகளும்
தொழிற்சாலைகளும்
இன்றும் அவரது புகழினைப்
பாடிக் கொண்டிருக்கின்றன..
ஆயினும்
ஏழைப் பங்காளரான
அவரைத் தான்
அந்நாளைய எதிர்க்கட்சியினர்
இழித்தும் பழித்தும்
புழுதி வாரித் தூற்றினர்..
அப்போது
மதி மயங்கிக் கிடந்த தமிழகம்
மாபெரும் தவறிழைத்தது..
ஆனாலும், இன்றைக்கு
அவரது பெருமைதனை
எண்ணி எண்ணித்
தவிக்கின்றது..
கல்விக் கண் கொடுத்த
காமராஜர் அவர்களை
நெஞ்சார்ந்த நன்றியுடன்
நினைவு கூர்தல்
நமது கடமையாகும்..
***
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தியாகச்சுடராம் மதிப்பிற்குரிய தலைவர் முன்னாள் முதல்வர் திரு. காமராஜர் அவர்களது பிறந்த நாளை இன்று நினைவு கூர்ந்து பதிவிட்டமைக்கு நன்றிகள். அவர் நினைவை, அவர் புகழை நாம் என்றும் போற்றுவோம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அவரது பிறந்த'நாளிலும் அவரை நினைவு கூர்வதே அவருக்கு செய்யும் மரியாதையாகும்.
பதிலளிநீக்குஇன்று அவருக்கு பிறந்தநாள் கொண்டாடுவது தவறு...
பெருந்தலைவர் புகழ் என்றும் நிலைக்கும்...
பதிலளிநீக்குஇன்று நான் காய்கறி வாங்கிய கடையில் அவர் புகைப்படம் வைத்து பூக்கள் தூவி மரியாதை செய்திருந்தார்கள். இன்னும் சில இடங்களிலும் இதைப் பார்க்க முடிந்தது.
பதிலளிநீக்குபெருந்தலைவரை நினைவு கூர்ந்து அருமையாக மரியாதை செய்திருக்கிறீர்கள்! நானும் உங்களுடன் சேர்ந்து இங்கே மரியாதை செலுத்துகிறேன்!
பதிலளிநீக்குஇவரைப் போன்றவர்களை இன்றைய காலகட்டத்தில் தேடித்தான் பார்க்கணும். அருமையான மனிதர். இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் "காமராஜர் ஆட்சி" என்கிறவர்கள் அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு உரிய மரியாதையைக் கொடுத்தார்களா என்பதே கேள்வி! :(
பதிலளிநீக்குஇல்லை என்பதே பதில்!
நீக்குபதிவு அருமை.
பதிலளிநீக்குபெருந்தலைவரை வாழ்த்தி வணங்கி அவர் புகழ் போற்றுவோம்.
தன்னலம் இல்லா கர்மவீரர்.
தலைவரின் படத்துக்கு மாலை போடும்போது போடுபவருக்கு உறுத்துமா? இப்போதெல்லாம் ஊழலற்ற, கல்விக்கண் திறந்த என்றெல்லாம் பாராட்டுரைகளில் தலைவர்கள் சொல்லுவதில்லை. அதைக் கவனித்தீர்களா?
பதிலளிநீக்குஅவரது பிறந்த நாளில் நல்லதொரு பதிவு. அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.
பதிலளிநீக்கு