நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 15, 2018

விருந்து உபசரிப்பு

ஒரு வாரமாக நமது தளத்தைக் கவனிக்கவே இல்லை..

காரணம் மிக முக்கியமான கல்யாண வேலை...

பொண்ணு மாப்பிள்ளை யாரு...ன்னு தெரியுமா!...

உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கும்....


நம்ம கோமதி அரசு மனப்பூர்வமா சொன்னாங்களே...

குழந்தைகள் நலமாக இருக்க வாழ்த்துகள்!... - அப்படி..ன்னு!...

அதாங்க...

அந்த மாநிறத்துப் பொண்ணு - அமிர்தவல்லி!..

இப்போ புரிஞ்சிருக்குமே!...

அமிர்தவல்லியோட அம்மா நமக்கு தங்கச்சி முறை...
அதுமட்டுமில்லாம தங்கலக்ஷ்மி அவங்க குடும்பமும் தூரத்து சொந்தம்..

அதனால கல்யாணத்துல -
விருந்து உபசரிப்பு அப்புறம் பந்தி விசாரிப்பு எல்லாம் நம்முடையது...

நரேஷ் - சௌந்தர்யா
சுரேஷ் - அமிர்தா
மணமக்கள் நீடூழி வாழ்க... 

அப்படி..ன்னு பூக்களாலேயே அலங்காரம்...

நல்லபடியா மாங்கல்யதாரணம் ஆகியது...

கல்யாணத்துக்கு நம்ம வலைத்தள நண்பர்கள் 
எல்லாருமே வந்து வாழ்த்தியது ரொம்பவும் மகிழ்ச்சியா இருந்தது...

மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும்
பொண்ணு வீட்டுக்காரங்களும் - எல்லாருக்கும் நன்றி சொன்னார்கள்..

அங்கேயும் இங்கேயும் சம்பிரதாய அழைப்பு எல்லாம் முடிஞ்சதும்
அப்பா அம்மா தனியா இருக்கட்டும்..ன்னு வீட்டுலய விட்டுட்டு -

பசங்க ரெண்டு பேரும் தேனிலவுக்குக் கிளம்பிட்டானுங்க!..

பெரியவன் நரேஷ் சிங்கப்பூர் - பாலி ..ன்னு போயிருக்கிறான்..

சின்னவன் சுரேஷ் - டேம்ஸ் ஊரணி - இல்லையில்லை -
தேம்ஸ் கரையோரத்துக்குப் போயிருக்கான்...

அவங்களத் தொந்தரவு செய்யாம
நம்ம பதிவுக்கு வருவோம்...

கல்யாணம் கோலாகலம் என்றால்
கல்யாண விருந்து அதை விட கோலாகலம்...

அந்த சிற்றுண்டி வகையறாக்கள் மட்டும்
இன்றைய பதிவில்!...

நம்ம பாரம்பர்யம்
இதுவும் தான்
இதெல்லாம் அரேபியன் டிலைட்...

கொழுக்கட்டை தான்..  உள்ளே முந்திரியும் பாதாமும்
Pista Vanilla Cake
Strawberry Choco Delite
Cherry Cakes
Choco Donuts
Veg Pizza
Arabian Fathayer
Croissants


பேரீச்சம் பழம் மூன்று நிலைகளில்
அரேபியன் தேநீர்
ஆக -
இன்றைய பதிவைக் கண்டு சந்தோஷம் தானே!...
மறுபடியும் மனதார வாழ்த்துவோம்

குழந்தைகள் 
நலமாக இருக்கட்டும்!...
***

29 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. துரை அண்ணா விருந்து "திங்க" வந்தாச்சு!!! ஆஜர்!! ஜியோ வாழ்க! எனக்கு நெட் கொடுத்து உதவுகிறது!!!! முதல்ல திங்கற சாமான் எல்லாம் கண்ணுல பட்டுருச்சா...ஹா ஹா திங்க உக்கந்துட்டேன்...ஹா ஹா ஹா

    இதோ பதிவு வாசித்துவிட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க... வாங்க....

      எல்லாம் நமக்காகத் தான்...

      கல்யாண சமையல் சாதம்.. ந்னு பாட்டே இருக்கு!...
      ஆனால் இங்கே சாத வகையறாக்களைக் காட்டவில்லை...

      பதிவு முழுவதையும் ஆற அமர படித்து விட்டு வாருங்கள்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஆஹா விருந்து அமர்க்களம் அண்ணா. முதலில் நான் ஜூசை எல்லாம் குடித்துவிட்டேன்....எல்லாமே பிடிக்குதே...அப்ப இன்னிக்கு நான் 15 ஸ்ரெப்ஸ் நடக்கோனும் பூஸார் பாஷையில்....ஹா ஹா ஹா ஹா..கேக்குகள் எல்லாம் ரொம்பப் பிடிக்கும் என்றால் அந்த ரிச் கொழுக்கட்டை அதான் பாதாம் முந்திரி உள்ளெ இருக்கே ஆஹா போட வைத்தது சுவையோ சுவை!!! ஹையோ அடுத்தாப்புல கராய்சென்ட், அரெபியன் ஃபதாயர் நம்மூர் ஸ்வீட்ஸ்....முடியலையே ஜாமீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயி..ஜீரணம் ஆக கடைசில கொடுத்துருக்கிங்களே அந்த அரேபியன் தேநீர் குடிச்சாச்சு...

    மணமக்கள் பல்லாண்டு சந்தோஷன்மாக வாழ வாழ்த்துகள்!!!! அது சரி இளையவர் தேம்ஸ் பக்கமா .....வைரவா அவரைக் காப்பாத்துப்பா....ஜல் ஜல் சத்தம் கேட்டுக் குழந்தைங்க பயந்துராம இருக்கணும்...

    தேம்ஸ் பக்கம் போனவங்க செலவை நம்ம பூஸார் கணக்குதானே அண்ணா?!!! ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் விருந்தை அனுபவித்து சாப்பிட்டு இருக்கின்றீர்கள்...

      அந்த ரிச் கொழுக்கட்டை பக்குவம் எப்படின்னு டேம்ஸாங்கரையில இருந்து (அதிரா MBBS.,MS(Surgery)FRCS.,(Lon))குறுஞ்செய்தி வந்திருந்தது...

      நான் சொல்லிட்டேன் - எபி..யில வரும்.. பார்த்துக்கோங்க!..ன்டு!..

      இன்னொரு சேதி..

      சுரேஷும் அவனோட டார்லிங்கும் இப்போ அதிராவின் இல்லத்தில்...
      மாப்பிள்ளை உபசரிப்பு அபாரமா இருக்குதாம்!...

      எப்படியோ சின்னஞ்சிறுசுகளை வயிரவர் காப்பாத்தி விட்டார்...

      நீக்கு
    2. ஹா ஹா ஹா இதை இப்போதானே பார்க்கிறேன்:)).. நான் நல்ல வடிவா சமைச்சுக் குடுப்பனே...

      நீக்கு
    3. ஆஹா டொக்டர் வீட்டுல உபசாரமா!! அப்போ டொக்டர் நல்லாவே கவனிச்சுப்பாங்கனு ஜொல்லுங்கோ...!!! ஹை ரிச் கொழுக்கட்டை வரப்போகுத திங்க வுல ஜூப்பரோ ஜூப்பர்.....அங்கயும் ஒரு பிடி பிடிச்சுருவோம்....ஹா ஹா ஹா இன்னும் உண்ட மயக்கம் தெளியவே இல்லை அண்ணா...

      கீதா

      நீக்கு
  4. எபி யில் எழுதிய கதையை வைத்து அருமையன பதிவின் தொடர்ச்சி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா...ல்லே!...

      ரோஜா இதழ் மாதிரி ஒரு கதை எப்படியெல்லாம் போகுது பாருங்க!...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ////அப்பா அம்மா தனியா இருக்கட்டும்..ன்னு வீட்லய விட்டுட்டு...////
    இது தலைகீழாக இருக்குதே ஜி

    மணமக்கள் வாழ்க வளமுடன் அடுத்த வருடம் காதுகுத்து பதிவும் வரணும்

    புள்ளைங்களை ஜேம்ஸ் ஊரணி பக்கம் அனுப்பியது மனதுக்கு கஷ்டமாக இருக்கு....

    அரேபியன் உணவை கண்ணுல காமிச்சுட்டீங்களே..... ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      புள்ளைங்க எந்நேரமும் அடைக்கோழி மாதிரி வீட்டுக்குள்ளேயே கிடந்தா பெரிய்வங்க கொஞ்சமாவது சிரிச்சி பேசிக்கிறது எப்படி!...

      நானும் ஆரம்பத்தில கொஞ்சம் பயந்தேன்...
      சின்னஞ்சிறிசுங்க டேம்ஸ் கரைப்பக்கம் போகுதுங்களே..ன்னு...

      ஆனா - அவங்க காத்தோட காத்தா வந்து அவங்க வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போயிருக்காங்களாம்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. கல்யாண விருந்து தடபுடல்.
    குழந்தைகள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
    என் பின்னூட்டத்தை இங்கு குறிப்பிட்டத்ற்கு மகிழ்ச்சி.

    இந்த காலச் சூழ்நிலையில் மணமக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வாழ்த்திக் கொண்டு இருக்க வேண்டும் பெற்றோர்களும் உற்றோர்களும், நட்புகளும்.

    அது இந்த குழந்தைகளுக்கு கிடைத்தது இறைவன் அருளே!
    மறுபடியும் மனதார வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      மணமக்களின் ஒற்றுமைக்கு வீட்டில் உள்ள பெரியவர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்..

      கதையென்றும் பாராமல் உணர்வுபூர்வமாகக் கொண்டாடி மகிழ்ந்த தங்களது வாழ்த்துரைக்கு மனமார்ந்த நன்றி...

      நீக்கு
  7. அருமையான விருந்துடன்....இனிய நிகழ்வுகள்...

    வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. எங்கள் பிளாக் மூன்று தினங்களாகத் திறக்கவே முடியவில்லை. ஸெல்லில் கதை படித்தேன். அதில் தமிழ் எழுதி பழக்கமில்லை.அருமையான இரட்டையர் கதைகள். ஒரேஒரு ட்விஸ்ட்தான். அருமையான முடிவு. இரட்டையர்களுக்கு ஒரே பந்தலில் கலியாணம் ஒரே குடும்பத்துப்பெண்ணாகத் தேடுவது சற்றுப் புதியதாக இருந்தது. அருமையான அம்மா. இப்போது பக்ஷணமும் பலகாரமுமாக இங்கு இடுகை. நானும் இங்கிருந்தே அக்ஷதைத்தூவி ஆசீர்வதித்தேன். பாராட்டுகள். நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா தங்களது அன்பில் மனம் நெகிழ்கின்றது...

      கதை மாந்தர்களாகிய மணமக்களும்
      அவர்களுடன் நாங்களும் இங்கிருந்தே
      தங்களுக்கு வணக்கம் செய்கின்றோம்..

      மீண்டும் மீண்டும் மகிழ்ச்சி.. மங்கலம்.. நன்றி..

      நீக்கு
  9. நம்ம பாரம்பர்ய இனிப்புகள் எதுவும் நன்றாகவே இல்லை. சாப்பிடுவதற்கும் அப்படியே என்று தோன்றுகிறது. 1. ஜிலேபி - இது எண்ணெய், வட இந்தியாவிலோ அல்லது லோ கிளாஸ் கடைகளிலோ விற்பதுபோல் ஒரே எண்ணெய், அழகில்லாமல் கூடில் தயாரிக்கப்பட்டதுபோல் இருக்கு. லட்டு நல்லால்ல. முருக்கு, மிஷினில் செய்து பாக்கெட்டில் போட்டு விற்பதுபோல் இருக்கு. பக்கத்தில் கோடுபளே, இது கர்னாடகா உணவு. நான் சம்பந்தி வீட்டாராக இருந்தால், அப்போதே சண்டை வந்திருக்கும். தப்பித்தீர்கள்.

    அரபிக் ஸ்வீட்ஸ் செலக்ஷனும் சரியில்லை. அவர்களது டிரெடிஷனல் இனிப்பு வகைகள் எதுவும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியோ தப்பிப் பிழைத்தாலும்
      சம்பந்தி சண்டை இல்லாத குறை தீர்ந்தது..

      அந்த பாரம்பர்ய இனிப்புகள் - இங்கே அருகிலுள்ள உணவகத்தில் செய்யப்படுபவை...

      ஜிலேபி சுவையில் ஏதும் குறையில்லை...
      பூந்தி குழைந்து விட்டதால் லட்டு நல்ல வடிவம் பெறவில்லை..

      முறுக்கு தமிழகத்திலிருந்து வருகின்றது...
      அடுத்தது கோடுபளே - தங்களால் மேல் விவரம் அறிந்தேன்..

      மற்றபடிக்கு கீழுள்ள பட்சணங்கள் எங்களது சமையற்கூடத்தில் தயாரிக்கப்படுபவை...

      இங்கே இனிப்பு கொழுக்கட்டை மட்டும் இடம் பெற்றுள்ளது...
      மற்ற அரபிகளின் பாரம்பர்ய இனிப்புகள் எதுவும் காட்டப்படவில்லை..

      அவற்றில் அதிகப்படியான நெய்யும் இனிப்பும் சேர்க்கப்படுவதால் எனக்குப் பிடிப்பதில்லை...

      மற்றவை மிகக் கவனமாக செய்யப்படுபவை.. தரம் தவறினால் அனைத்தும் குப்பையில் கொட்டப்படும்.. மீண்டும் செய்யப்படும்..

      தங்களது அன்பு வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. நிஜமான கல்யாணமா அது? உறவு வேறா? வாழ்த்துகள். பல்லாண்டு காலம் நீடூழி சகல சௌபாக்கியங்களோடும் வாழ வாழ்த்துகள். மதியம் ஒன்றரை மணிக்கு சாப்பாட்டு ஐட்டங்களை பார்த்ததும் வாயில் எச்சிலருவி! சாப்பிடப் போகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      எளிய கதையை நிஜ கல்யாணம் போல பதிவேற்றம் செய்துள்ளேன்..

      தங்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. நான் தான் தாமதம் போலே இருக்கு! ஜிலேபி நெ.த. நல்லா இல்லைனு சொல்றார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எவ்வளவு அழகான சுத்து! அரபி இனிப்பு வகைகள் எல்லாம் எனக்குப் புதுசு! எனக்குப் பிடிச்சது சாக்லேட் கலந்த எல்லாமே! விருந்து தாமதமாக வந்தாலும் நல்லா இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைப் போல நாலு பேர் இருந்தால் கல்யாண வீடுகளில் சண்டைகள் தவிர்க்கப்படும்...

      இதில் அந்த இனிப்பு கொழுக்கட்டை தவிர மற்றவை பேக்கரி வகையறாக்கள்..

      வருகை தந்து விருந்துண்டு கருத்து வழங்கியதற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. விருந்து அமோகமா இருந்துச்சி .எனக்கு பாரம்பரிய நம் உணவு இட்லி வடை சாம்பார் தட்டு
    அப்புறம் அந்த கை முறுக்கு இவ்ளோ போதும் .

    மகிழ்ச்சியில்தாம்பூலப்பையை மறந்திட்டீங்க :)

    பதிலளிநீக்கு
  13. வலைப்பக்கம் அதிநாட்கள் எட்டிப் பார்க்காததால், இந்த பதிவைப் படிக்கத் தொடங்கியதிலிருந்து எனக்குள் ஒரே யோசனைதான்.

    // எளிய கதையை நிஜ கல்யாணம் போல பதிவேற்றம் செய்துள்ளேன் //

    என்ற தங்களது மறுமொழி குழப்பத்தை தீர்த்து வைத்தது; சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' நினைவில் வந்தது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. ஆவ்வ்வ்வ்வ்வ் அப்போ அக்கதை உண்மைக்கதைதானே? நான் அப்பவே ஜொன்னேனே இது உண்மைக்கதைபோல இருக்கென.. நீங்கதான் இல்லை கற்பனை எனச் சொல்லிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்:)) எப்பூடி மீ கண்டுபிடிச்சேனே:))..

    ஹா ஹா ஹா அப்போ சூப்பர் திருமணம்தான்.. வாழ்க மணமக்கள்.

    தேம்ஸ்கரையில சந்திக்கிறேன்:))

    பதிலளிநீக்கு
  15. விருந்துப் பலகாரம் அபாரம்.. அப்போ துரை அண்ணன் இப்போ ஊரிலயா இருக்கிறீங்க?...

    அதுசரி இடையில எதுக்கு கரட் ஊஸ்ஸ்ஸ்ஸ்ஸ்?:)..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..