நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, அக்டோபர் 25, 2024

வழித் துணை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 8
வெள்ளிக்கிழமை


தனதன தான தனதன தான தனதன தான ... தனதான

இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ... விடமேநீ

ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ... யிவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ... முளநோய்கள்

பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ... அருள்வாயே

வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக ... இசைபாடி

வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை ... விடுவோனே

தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் ... மணவாளா

சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு ... பெருமாளே..

 
விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே...
-: கந்தரலங்காரம் :-

முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

13 கருத்துகள்:

  1. காணொளியில் வரும் பாடல் பிரமாதம்.  

    யார் பாடியது?  என்ன அது?  அது பற்றி விளக்கம் கொடுத்திருக்கலாமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதோ தரவிறக்கம் செய்யப்பட்ட ய திருப்புகழ் பாடல்...

      ஓதுவார்மூர்த்திகளின் பெயர் தெரியவில்லை..

      எவ்வித நோயும் அனுகாதிருப்பதற்கான திருப்புகழ் பாடல்..

      அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பாடல் அருமை. காணொளியும் கண்டுகந்தேன் . விழிக்குத் துணை.. கந்தரலங்காரம் பாடல் பாடி முருகனை வழிப்பட்டுக் கொண்டேன். முருகன் அனைவரையும் நலமுடன் வைத்திருக்கட்டும். 🙏. முருகா சரணம்.
    முத்துக் குமரா சரணம். 🙏.

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வித நோயும் அணுகாதிருப்பதற்கான திருப்புகழ் பாடல்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    காணொளி பாடல் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    அனைத்தும் நல்லதாகவே நடக்கட்டும். இணைத்திருக்கும் காணொளியை பிறகு தான் பார்க்க முடியும். மாலையில் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையத்தில் இருந்து பாடலை எடுத்து நான் உருவாக்கிய காணொளி..

      அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. வெள்ளி நாளில் முருகன் வணக்கம் .

    பாடல் கேட்டோம் முருக பெருமாளே அனைவரையும் நோய் நொடியில் இருந்து காப்பாற்றட்டும்.

    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வித நோயும் அணுகாதிருப்பதற்கான திருப்புகழ் பாடல்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. 2 வது ஐப்பசி வெள்ளி... கந்தர் அலங்காரம் எனக்கும் பிடிக்கும் துரை அண்ணன் ஆனா நீங்கள் தான தன எனும் பாடலில் சொல்லியுள்ள பாடல்(பாசை) நான் கேட்டதில்லை.. முதல் தடவையாகக் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா அவர்களுக்கு நல்வரவு..

      எவ்வித நோயும் அனுகாதிருப்பதற்கான திருப்புகழ் பாடல்..

      மனிதனுக்கான 4448 நோய்களின் சாரத்தைக் குறிப்பிடுள்ளார் அருணகிரிநாதர்..

      காணொளியைக் கண்டால் ஓரளவுக்கு விளங்கும்..

      அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி அதிரா..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. இந்த பாடல் அடிக்கடி எங்கள் வழிபாட்டு குழுவில் பிடித்த பாடல் அடிக்கடி பாடுவார் இந்த திருப்புகழை. கோவிட் சமயம் எல்லோரும் தினம் பாடிய பாடல்.
    எல்லோர் நலத்திற்கும் திருப்புகழ் பாடலை கேட்டு, கந்தரலங்காரம் பாடலை பாடி முருகனை வேண்டிக் கொண்டேன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..