நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 31
வியாழக்கிழமை
தஞ்சை மாநகரின் ராஜ வீதிகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் கோயில்..
அறுநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமை உடையதாகும்..
ஸ்ரீதேவி பூதேவி உடன் விளங்க ஆஜானுபாகுவாய்த் திகழ்கின்றார் - ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்..
இக்கோயிலில் ஸ்ரீ களஞ்சிய லக்ஷ்மி சந்நிதி சிறப்புடையது..
வைகாசி திரு ஓணத்தில் கருட சேவை, தொடர்ந்து வெண்ணெய்த் தாழி..
அடுத்து - புரட்டாசி.. நவராத்திரி..
மார்கழியில்
வைகுந்த ஏகாதசி.. சொர்க்க வாசல் திறப்பு..
அனைத்து விசேஷங்களும் சிறப்புற நடைபெறுகின்றன..
இக்கோயிலுக்கு செல்ல வேண்டும் ஆயின் ஆட்டோ அல்லது தனி வாகனம் நல்லது..
நன்றி விக்கி |
1960 களில் 3 என்ற எண்ணுடைய நகரப் பேருந்து நகருக்குள் அரண்மனை வீதிகளில் சுற்றி வந்து கொண்டிருந்தது..
70 களுக்குப் பிறகு என்ன ஆயிற்றோ தெரியவில்லை.. இப்போது அப்படியான பேருந்து இல்லை..
தற்சமயம் இக்கோயிலுக்குச் செல்கின்ற வாய்ப்பு கிட்டவில்லை..
படங்கள்: நன்றி
விக்கி, தஞ்சையின் பெருமை..
விரைவில் இத் திருக்கோயிலுக்குச் சென்று படங்களைப் பதிவில் வழங்குதற்கு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசர் அருள் புரிவாராக..
நல்ல தகவல். தஞ்சை வரும்போது பார்க்க வேண்டும் என்று குறித்துக் கொள்கிறேன். எப்போது சமயம் வாய்க்குமோ!
பதிலளிநீக்குதஞ்சை அரண்மனையே நான் பார்த்ததில்லை. நேற்று ஒரு காணொளியில் தஞ்சை ஹௌசிங் யூனிட் குடியிருப்பை சுற்றிக்காட்டி பழைய நினைவுகளைத் தூண்டி நெகிழ வைத்தார்கள்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இங்கும் காலையிலேயே பெருமாள் தரிசனம் மனதிற்கு மகிழ்வை தந்தது. படங்களின் வழியாக ஸ்ரீ பிரசன்ன வேங்கடேச பெருமாளை தரிசித்துக் கொண்டேன்.
கோவிலின் சிறப்புக்களை அறிந்து கொண்டேன். இறைவன் என்னையும் அவனை தரிசிக்க அழைக்கட்டும். தங்களுக்கும் விரைவில் அங்கு செல்லும் வாய்ப்பு அவனருளால் அமைந்து எங்களுக்கும் அந்த கோவில் பதிவுகளை தர வேண்டுமென அவனை வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குதஞ்சையில் பார்க்க வேண்டிய இடங்கள் என நிறையவே இருக்கின்றன. எனக்கும் தஞ்சையின் சிறப்பு மிக்க இடங்களை பார்க்க ஆவல் உண்டு. வாய்ப்பு அமைய எல்லாம் வல்ல ஈசன் அருள் புரிய வேண்டும்.
பதிவு சிறப்பாக இருக்கிறது. விரைவில் நீங்களும் இந்த ஆலயத்திற்குச் சென்று வரவும், படங்களை இங்கே பகிரவும் வாய்ப்பு அமையட்டும்.
தரிசனம் கிடைத்தது நன்றி ஜி
பதிலளிநீக்குபெருமாள் தரிசனம் அருமை.
பதிலளிநீக்குஉங்களுக்கு நேரில் பார்த்து தரிசனம் செய்ய பெருமாள் அருள்வார்.
ஸ்ரீபிரசாத் வெங்கடேசப் பெருமாள் தரிசனம் பெற்றோம்.
பதிலளிநீக்குஅழகிய அலங்காரங்கள் கண்டு வணங்கினோம்.
ஓம் நமோ நாராயணா.