நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 20, 2024

கல்லணை

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 3 
ஞாயிற்றுக்கிழமை
 

உலகின் பழைமையான அணை என்ற சிறப்புடையது..

குடகு மலையில் அவதரித்து பல நூறு கல் பயணித்து பூம் புகாரில் கடலுடன் கலப்பவள் காவிரி...

இந்த நதியின் பயன் மக்களுக்கு ஆக வேண்டும் என இதன் குறுக்காக அணையைக் கட்டி ஒழுங்கு செய்த மாமன்னன் கரிகால் பெருவளத்தான்..

அதன் பின் வந்த சோழ மன்னர்கள்  காவிரிச் சமவெளியைப் பராமரித்து வேளாண்மையைக் காத்து நின்றனர்..

வெகு காலத்துக்குப் பின் மாற்றாரிடம் நாடு அடிமையான  பிறகு  விளைச்சல் அதிகரித்தால்
வரி வசூல் அதிகரிக்கும் அரசின்  பணப் பெட்டி நிறைந்து வழியும் என்ற ஆசையுடன் காவிரி நதி தீரத்தை விரிவு செய்தனர்.. 

அப்போது தான் காவிரியில் கரிகாலன் அமைத்திருந்த கல்லணையின்  அடித்தளம் வெளிப்பட்டது..

காவிரியின் மணற் திட்டுகளை அகற்றுவதற்கு முற்பட்ட போது கல்லணையும் அதன் அடித்தளமும் கண்டறியப்பட்டது.. 

அதன் பின் அந்த அடித்தளத்தில் மதகுகளும் நீர்த் தடுப்புகளும்  
எழுப்பப்பட்டன.. 

1829 களில் கல்லணை நீர்த் தேக்கத்தினைக் கட்டி முடித்தவர்
சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளர்..
(நன்றி விக்கி)




இன்றைய
காவிரியில் திறந்து விடப்படும் மதகுகள்..

காவிரியில் 40 மதகுகள் வெண்ணாற்றில் 33 கொள்ளிடத்தில் 30 கல்லணைக் கால்வாயில் 6 மணற்போக்கியில் 5 கோவிலடி மற்றும் பிள்ளை வாய்க்காலில் ஒரு மதகு - என,  பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்..

இன்றைய நிலையில் கல்லணை வழியே பாசனம் பெறுகின்ற நிலங்கள்:

கல்லணை வழியே பாசனம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.08 லட்சம் ஏக்கர், 
திருவாரூர் மாவட்டத்தில் 92,214 ஏக்கர்
நாகை மாவட்டத்தில் 22,805 ஏக்கர் 
மயிலாடுதுறை மாவட்டத்தில் 93,750 ஏக்கர்
கடலுார் மாவட்டத்தில் 24,976 ஏக்கர் என, கூடுதல்
3.42 லட்சம் ஏக்கர்..
(நன்றி: தினமலர்)



வேளாண்மையில் இருந்து விவசாயிகள் விலகுவதாலும்  விளைவதில் இருந்து நஞ்சை நிலங்கள் விடுவிக்கப்படுவதாலும் எதிர்வரும் ஆண்டுகளில் இந்த விவரங்கள் குறையக் கூடும்..

துலா மாதத்தின் காவிரிக்கு
இப்பதிவு சமர்ப்பணம்
 
துலா மாதப் பிறப்பன்று  மயிலாடுதுறை துலா கட்டத்தில்  திருவாவடுதுறை ஆதீனத்தார் நடாத்திய
சிற்ப்பு  பூஜையும் பஞ்ச  மூர்த்தி எழுந்தருளலும்..

காட்சிகளுக்கு நன்றி..







காவிரி வாழ்க
கல்லணை வாழ்க
கங்கையும் வாழ்க
கழனியும் வாழ்க..

ஒம் நம சிவாய
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. தென்குலப் பெண் அரைத்த மஞ்சளில்
    குளித்தாய்
    திரும்பிய திசை எல்லாம் பொன்னடி
    குவித்தாய்
    காவிரிப் பெண்ணே வாழ்க
    உன் அரும் கணவன் கங்கையை
    அணைத்தே
    கன்னிக் குமரியையும் தன்னுடன்
    இணைத்தான்
    காவிரிப் பெண்ணே வாழ்க

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    காவிரி கல்லணை பதிவு அருமை. கல்லணை அணையின் விபரங்கள் தெரிந்து கொண்டேன். படங்கள் அனைத்தும் கண்களுக்கு குளிர்வாக உள்ளது. இறைவனை தரிசித்து கொண்டேன். காவிரியன்னை அனைவருக்கும் நன்மையை தர பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. காவிரியும் கல்லையும் வாழ்க.

    எத்தனை உயிர்களுக்கு வாழ்வாதாரம் நல்கின்றன அனைத்தும் நீடித்து வாழ வேண்டுவோம்.

    நதிகள்,அணைகளை மறிக்காதவரை அவை மற்றவரை வாழவைக்கும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..