நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 20
ஞாயிற்றுக்கிழமை
திருப்பூந்துருத்தி
நன்றி கூகிள் |
ஸ்வாமி
ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ சௌந்தர்ய நாயகி
வில்வம் வன்னி
காசித் தீர்த்தம், குடமுருட்டி
கருவறையின் தென்புறம் தென் கயிலை, வடபுறம் வட கயிலைக் கோயில்கள் விளங்குகின்றன..
தவ நிலையில் துர்க்கை தனிச் சநிதியில்.
ராஜ கோபுர நந்திக்கு நடுப் பகலில் பிரதோஷ பூஜை நிகழ்கின்ற தலம்..
சூரியனை நோக்கியபடி ஏனைய கிரகங்கள்.
கிணற்றின் கரையில் காசி லிங்கம்.. முன் மண்டபத்தில் கயிலாய லிங்கம்..
கொடி மரத்திற்கு அருகில் தனியாக மேற்கு நோக்கிய காசி விசுவநாதர் கோயில்..
பித்ரு தோஷம் தீர்க்கும் தலங்களுள் இதுவும் ஒன்று..
ஸ்ரீ நந்தீசன் சுயம்பிரகாஷிணி தேவி கிருமணத்தின் போது புஷ்ப கைங்கர்யம் இங்கிருந்து நிகழ்ந்ததாக ஐதீகம்.
கிழக்கே திருக்கண்டியூர் வீரட்டம்.. தெற்கே திவ்யதேசமாகிய தஞ்சை மாமணிக்கோயில்.
மேற்கே திரு ஆலம்பொழில்..
வடக்கே திரு நெய்த்தானம், திரு ஐயாறு..
திருநாவுக்கரசர் திருமடம் அமைத்துத் தங்கியிருந்த திருத்தலம்...
மதுரையில் சமணத்தை வென்று திரும்பிய ஞானசம்பந்தர் - திருநாவுக்கரசருடன் திருமடத்தில் தங்கியிருந்ததாக சொல்லப்படுகின்றது..
அப்பர் பெருமான் உழவாரப் பணி செய்த திருத்தலம் என்பதனால் நடப்பதற்கு ஞானசம்பந்தர் அஞ்சிய போது அவருக்காக நந்தி விலகிய திருத்தலம்..
அருணகிரி நாதர் திருப்புகழ் பாடி வணங்கிய திருக்கோயில்..
திரு இசைப்பா பாடல்களை அருளிய பூந்துருத்தி காடவ நம்பிகள் அவதரித்த திருத்தலம்..
கிருஷ்ண லீலா தரங்கிணி இயற்றிய ஸ்ரீ நாராயண தீர்த்தர் இங்குதான் சித்தியடைந்தார்..
தெற்கு மற்றும் மேற்கு திருச்சுற்றுகளில் அப்பர் பெருமானின் வரலாறும் வடக்குத்
திருச்சுற்றில் ஞானசம்பந்தர் சுந்தரர் வரலாறும் பெரிய புராணக் காட்சிகளும் காணக் கிடைக்கின்றன..
நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
நினையாஎன் நெஞ்சை நினைவித் தானைக்
கல்லாதன எல்லாங் கற்பித் தானைக்
காணாதன எல்லாங் காட்டி னானைத்
சொல்லாதன எல்லாஞ் சொல்லி என்னைத்
தொடர்ந்திங் கடியேனை ஆளாக் கொண்டு
பொல்லா என் நோய்தீர்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 6/43/1
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
சுற்றிச் சுற்றி எத்தனை ஆலயங்கள்... அந்தக் கால மன்னர்களும், மக்களும் புண்ணியம் செய்தவர்கள். தமிழ்நாட்டில் புதிதாக பெரிய அளவில் கோவில் கடைசியாக எப்போது கட்டப்பட்டது?
பதிலளிநீக்குகோவில் பற்றிய விவரங்கள் அறிந்து கொண்டேன். படங்கள் மூலம் தரிசனமும் பெற்றேன்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குசிறப்பான தகவல்கள். படங்கள் வழி நாங்களும் தரிசனம் கண்டோம். நன்றி.
சிறப்பான தரிசனம் கிடைத்தது நன்றி ஜி
பதிலளிநீக்குபூந்துருத்தி தலத்தின் சிறப்புக்கள் பலவும் அறிந்து வியப்புறுகின்றோம்.
பதிலளிநீக்குவிரிவாக படங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி.
பூந்துருத்தி தல வரலாறும் படங்களும் அருமை.
பதிலளிநீக்கு