நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 24, 2024

காரோகணம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 7
வியாழக்கிழமை

திருத்தலம்
குடந்தைக் காரோணம்


இறைவன் 
சோமேசர்
வியாழ சோமேசர்

அம்பிகை 
சோம சுந்தரி,
 தேனார் மொழியாள்.  

தல விருட்சம் 
வில்வம்
தீர்த்தம் 
சோம தீர்த்தம் மகாமகத் தீர்த்தம் 
 
 சந்திரன் வியாழன் 
வழிபட்ட தலம்

சிவபெருமான்  காயாரோகணர் - என, விளங்குகின்ற
தலங்கள் மூன்று..

குடந்தைக் காரோணம்
கச்சிக் காரோணம்
நாகைக் காரோணம்


 ஊழிக் காலத்தில் இறைவன் சகல ஆன்மாக்களயும் தன்னுள்
ஐக்கியமாக்கிக் கொள்வதால் காயாரோகணேஸ்வரர் எனப்படுகின்றார்..

இவ்வகையில் இத்தலங்களை மூன்றாகப் பகுத்துள்ளனர் ஆன்றோர்..

அதன்படி

ஊழியின் போது
அம்பிகை - இறைவனின் திருமேனியில் ஆரோகணித்து ஐக்கியமாகிய தலம்  - குடந்தைக் காரோணம்..

ஊழிக் காலத்தில்
பிரம்மன், நாரணன்  திருமேனிகளைத் தமது தோளில் தாங்கி  தாண்டவம்  புரிந்த தலம் - கச்சிக் காரோணம்..

சிவபெருமான் புண்டரீக முனிவரைத் 
தழுவி வரவேற்ற தலம் - நாகைக் காரோணம்..
 
இப்பதிவில் ஆன்மாக்களுக்கான
குடந்தைக் காரோணம் பற்றி ..

குடந்தைக் காரோணம் :
ஊழிக் காலத்தில் இறைவன் சகல ஆன்மாக்களையும் தன்னுள்
ஐக்கியமாக்கிக் கொள்வதால் இத்தலம் காரோணம் எனப்படுகின்றது..


அம்பிகை, இறைவன் திருமேனியை ஆரோகணித்த தலம் ஆதலின் காரோணம் என்றாயிற்று..

ஸ்ரீராமபிரான், இராவணனை அழிப்பதற்காக  வழிபட்டு திருமேனியில் ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்ற தலம்..

இத்தலம் குடமூக்கு குடந்தை என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் கோயிலின் பெயர் குடந்தைக்  காரோணம்..

இக்கோயில் - ஸ்ரீ கும்பேஸ்வரர் கோயிலுக்கு எதிரில் உள்ள பொற்றாமரைக் குளத்தின்
கீழ்க்கரையில் அமைந்துள்ளது.. இக்கோயிலின் வடபுறத்தில் ஸ்ரீ சார்ங்கபாணி ஸ்வாமி திருக்கோயில்.. 

இதுவன்றி
மகாமகத் திருக்குளத்தின் வடகரையில் இருக்கின்ற
காசி விஸ்வநாதர்  கோயில்  தான்  குடந்தைக் காரோணம் என்று சொல்வதும் உண்டு.  

திருஞானசம்பந்தர் தமது பதிகத்தில் " தேனார் மொழியாள் திளைத்தங்காடித் திகழும் குடமூக்கில், கானார் நட்டம் உடையார் செல்வக் காரோணத்தாரே " என்று குறிப்பிட்டுள்ளார்..

தேனார் மொழியாள் என - அம்பிகையின் பெயர் வழங்கும் தலம் 

சோமேசம் -
(சக - உமேசம்) ..

சோமன் ஆகிய சந்திரன் வழிபட்ட தலம்..

ஆதலின்  சோமேசர் திருக்கோயிலே பாடல் பெற்ற தலமாகக் கொள்ளப்படுகிறது.

காசி விஸ்வேசம் எனப்படுவது மகாமகத் திருக்குளத்தின் வடகரையில் மேற்கு நோக்கியதாக விளங்குகின்ற
ஸ்ரீ விசாலாட்சி உடனுறை
காசி விஸ்வநாதர் கோயிலாகும்.. 

சோமேசர் 
கோயிலானது தற்சமயம் - கும்பகோணத்தில் வியாழசோமேசர் கோயில் என வழங்கப்படுகின்றது..

வியாழ சோமேசர் கோயிலை பல முறை தரிசித்து இருந்தாலும் - கோயில் காட்சிகள் தற்சமயம் கைத்தல பேசியில் இல்லை..

விரைவில் தருகின்றேன்..

ஊனார்தலைகை ஏந்தி உலகம் பலிதேர்ந்து உழல்வாழ்க்கை
மானார்தோலார் புலியின் உடையார் கரியின் உரிபோர்வை
தேனார்மொழியார் திளைத் தங்காடித் திகழுங் குடமூக்கில்
கானார்நட்டம் உடையார் செல்வக் காரோணத்தாரே.. 1/72/3
-: திருஞானசம்பந்தர் :-
 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. கோவில்கள் பற்றிய உங்கள் ஞானம் வியக்க வைக்கிறது. தேடி எடுத்து பதிகத்தையும் கொடுத்துள்ளீர்கள். விவரம் அறிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. ஆலயம் குறித்த தகவல்கள் சிறப்பு. விவரங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட்

      நீக்கு
  3. குடந்தை காரோணம் சோமேசர் சிறப்புக்கள் பலவும் அறிந்து, வணங்கிக் கொண்டோம்.

    அனைவர் நலனையும் ஈசன் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி..

      நீக்கு
  4. குடந்தை காரோணம் சோமேசர் கோவில் சிறப்புக்கள் சொன்னது அருமை. நாங்கள் பார்த்து இருக்கிறோம்.
    சம்பந்தர் தேவார பாடல் பாடி இறைவனை வேண்டி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..