நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி முதல் நாள்
வெள்ளிக்கிழமை
ஐப்பசி
தமிழ்க் கணிப்பின்படி ஆண்டின் ஏழாவது மாதம்..
துலா மாதம் என்ற சிறப்புடன் சுப முகூர்த்தங்கள் நிறைந்த புண்ணிய மாதம்....
ஐப்பசியின் முதல் நாளில்
மயிலாடுதுறையின் காவிரியில் கங்கை வந்து கலப்பதாக ஐதீகம்..
ஐப்பசி மாதத்தில் தான் இருள் எனும் தீமை அகன்று ஒளி எனும் நலம் பெருகுவதான தீபாவளித் திருநாள்..
தீபாவளி - ஐப்பசி 14 வியாழக்கிழமை..
(31 அக்டோபர் 2024).
தீபாவளி நாளில் தான் கேதார கௌரி பூஜை..
இந்நாளில் தான் ஈசன் எம்பெருமான் அம்பிகையை திருமேனியின் இடப் பாகத்தில் ஏற்றுக் கொண்டனன்..
தீபாவளியை அடுத்து சஷ்டி விரதம் ஆரம்பம்..
திருச்செந்தூரில் மஹா கந்த சஷ்டி சூர சங்காரம் ஐப்பசி 21 வியாழக்கிழமை..
ஐப்பசி 24 அன்று
மாமன்னர் ராஜ ராஜ சோழர் பிறந்த
சதயத் திருநாள்..
(நவம்பர் 10 ஞாயிற்றுக் கிழமை)
ஐப்பசி 29 வெள்ளியன்று
(நவம்பர் 15) தமிழக சிவாலயங்களில் (ஐப்பசி பௌர்ணமி) அன்னாபிஷேக வைபவம்.
மங்கலமிகும் ஐப்பசியை வரவேற்று மகிழ்வோம்..
**
திருப்புகழ்
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆன பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!..
-; அருணகிரிநாதர் :-
நன்றி கௌமாரம்
முருகா முருகா
முருகா முருகா
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
துலா மாதத்தை வரவேற்போம். இம்மாதத்தில் ஒரு நாள் காவிரியில் நீராடி விடுவார்கள் எங்கள் மாமாக்கள்.
பதிலளிநீக்குஐப்பசியில் அடைமழை என்பார்கள். இந்த முறை ஐப்பசி தொடங்கும் முன்னரே அடைமழை தொடங்கி விட்டது!
பதிலளிநீக்குஅருமையான பதிவு. திருப்புகழை படித்து முருகனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குஐப்பசி வந்தால் மயிலாடுதுறை நினைவு வந்து விடும்.
ஐப்பசி முழுக்கு திருவிழாவும், திருவிழா கடைகளும் , உறவுகள் வருகையும் என்று ஊரே விழா கோலம் கொண்டு இருக்கும்.
கந்த ஷஷ்டி விரதம் , ராஜ ராஜசோழர் பிறந்த நாள் விழா மற்றும்
சதயதிருநாள் மகனின் பிறந்த நாள் வரும்.
ஐப்பசி சிறப்பான மாதம் மங்கலங்கள் தரட்டும் அனைவருக்கும்.
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குஐப்பசி மாதப்பிறப்பு… தகவல் பகிர்வு சிறப்பு.
ஐப்பசி மாதத்தின் சிறப்பான விழாக்கள் பல கண்டோம்.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு .
ஐப்பசியை வரவேற்போம். இறை வணக்கம் செலுத்துவோம்.
அனைவருக்கும் நலன்கள் உண்டாகட்டும்க்ஷ
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. ஐப்பசி மாதம் குறித்த சிறப்பு பகிர்வு நன்றாக உள்ளது.
ஆடியிலே காற்று வந்தால் ஐப்பசியில் நல்ல மழை என்போம். ஆடி மாதத்தில் அம்மியும் பறக்கும் காற்று வீசும் என்பதும் ஒரு பழமொழி. அதனால்தான் ஐப்பசி அடை மழைக்கு பேர் போனது. இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு காரணங்கள்.
வரும் தீபாவளியும், சஷ்டி விழாவையும் இறைவனின் நல்லருளோடு எதிர்கொள்வோம்.
திருப்புகழ் பாடல் அருமை. கந்தனை வணங்கி நல்லதோர் அருள் பெறுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.