நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 04, 2024

ஜெய் ஸ்ரீராம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 21
சனிக்கிழமை



ஸ்ரீராம ராம
ஜெயராம ராம..

 

காணொளிச் சித்திரம்
Fb ல் கிடைத்தது..
நன்றி..

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்துபோய் 
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி மதிள் நீர் இலங்கை வாளரக்கர் தலைவன்
தலை பத்தறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே!. 988
-: திருமங்கையாழ்வார் :-
 - நன்றி திவ்ய ப்ரபந்தம் -


வாக்கினால் இன்புரைத்து வாழ்கிலார் தம்மை யெல்லாம்
போக்கினாற் புடைத்த வர்கள் உயிர்தனை உண்டும் ஆறான்
தேக்குநீர் செய்த கோயில் திருஇரா மேச்சுரத்தை
நோக்கினால் வணங்கு வார்கள் நோய்வினை நுணுகும் அன்றே.. 4/61/7

கோடி மா தவங்கள் செய்து குன்றினார் தம்மையெல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்துபின் அன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
நாடிவாழ் நெஞ்சமே நீ நன்னெறி ஆகுமன்றே.. 4/61/9
-: திருநாவுக்கரசர் :-
**

ஓம் 
ராமாய ராமபத்ராய ராம சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய சீதாய பதயே நம:

ஓம் நம சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. ஸ்ரீராமஜெயம். கொன்றை சூடிய பெருமான் அந்த அம்மையப்பன் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  2. நாவுக்கரசர் பாடலை பாடி வணங்கி கொண்டேன்.
    காணொளி நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. ஓம் நமசிவாய
    காணொளி கண்டேன் சிறப்பு

    பதிலளிநீக்கு
  4. காணொளி நன்று.

    இராமேஸ்வர நாதரை வணங்கினோம்.

    ஸ்ரீ ராம் ஜெய்ராம் ஜெய ஜெய ராம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..