நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 18
வெள்ளிக்கிழமை
திருப்புகழ்
-: திருப்பழநி :-
தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த
தனத்ததன தான தந்த ... தனதான
மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை
யேபு ரிந்து வகைக்குமனு நூல்வி தங்கள் ... தவறாதே
வகைப்படிம நோர தங்கள் தொகைப்படியி நாலி
லங்கி மயக்கமற வேத முங்கொள் ... பொருள்நாடி
வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி
னைந்து மிகுத்தபொரு ளாக மங்கள் ... முறையாலே
வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து
மிகுக்குமுனை யேவ ணங்க ... வரவேணும்..
மனத்தில்வரு வோனெ என்று நடைக்கலம தாக வந்து மலர்ப்பதம தேப ணிந்த ... முனிவோர்கள்
வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி
மருட்டிவரு சூரை வென்ற ... முனைவேலா
தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம நந்து
செகத்தைமுழு தாள வந்த ... பெரியோனே
செழித்தவளமே சிறந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த திருப்பழநி வாழ வந்த ... பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-
மனதில் கவலை ஏதும் இல்லாமல், உனக்கு
அடிமை செய்யும் பணியையே கொண்டு
வகையான நீதிகளில் இருந்து தவறாமல்,
எண்ணங்கள் யாவும் நல்ல
முறையில் அமைந்து,
சந்தேகம் தீர வேதத்தின் மெய்ப்பொருளை ஆராய்ந்து,
இருவினைக்குரிய பாதகங்களைத் தொலைத்து விட்டு
மகிழ்ச்சியுடன் உனைத் தியானித்து,
மேலான பொருள் கொண்ட ஆகமத்தின் விதிப்படி, கோபத்தை முற்றிலுமாகத் துறந்து , மகிழ்ச்சியுடன் கடமைகளைச் செய்து
மேம்பட்டு விளங்குகின்ற
உனையே வணங்குவதற்கு வரவேணும்..
வருவாய் எனத் தியானித்து
உனது அடைக்கலம் என்று வந்து சேர்ந்து - மலர்த் திருவடிகளைப் பணிந்த முனிவர்களுக்கும்,
யோகியர்க்கும் தேவர்களுக்கும், மனம் இரங்குபவனே..
அனைவரையும் அச்சுறுத்தி நின்ற அசுரர்களைக் கூரிய வேலால் வென்றவனே,
தினைப்புனத்திற்கு முன்னே நடந்து
குறவர் தம் கொடியாகிய வள்ளியை மணந்து,
உலகம் முழுவதையும் ஆட்கொண்ட பெரியவனே,
செழித்து வளம் நிறைந்த சோலைகள் விளங்குகின்ற
திருப்பழனி வாழ்வதற்காக வந்த பெருமாளே..
**
முருகா முருகா
முருகா முருகா
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
முருகா ஓம் முருகா.... வணங்கினோம் உன்னை.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலும், அதன் விளக்கமும் அருமையாக உள்ளது. பாடலைப் பாடி, அதன் பொருளுணர்ந்து முருகனை வழிபட்டுக் கொண்டேன். முருகன் அனைவருக்கும், நல்லருளைத் தர பிரார்த்தித்தும் கொண்டேன். முருகா சரணம்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
திருப்பழனி பெருமானை வைகாசி வெள்ளி நாளில் வணங்கி நிற்போம்.
பதிலளிநீக்குவெற்றிவேல் முருகா.