நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 23
ஞாயிற்றுக்கிழமை
நாளிதழ்
செய்திகளுடன்
தொகுக்கப்பட்ட பதிவு..
வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது..
கோடை மழை இல்லாததால் - நாடு முழுவதும் உள்ள நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருகின்றது..
குடிநீர் தட்டுப்பாடு பல இடங்களிலும் பிரச்னைகளுக்கு வழி வகுக்கின்றது,.
கிராமங்களிலும் நகரங்களிலும் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர்..
மரம் மட்டை, தோப்பு துரவு, வயல் வரப்பு, வாய்க்கால் குளம், ஏரி ஆறு - என்றிருந்த கட்டமைப்பு சீர் குலைந்ததால்
மக்கள் மட்டுமின்றி வளர்ப்பு விலங்குகள், வன விலங்குகள், பறவைகள் தாவரங்கள் - என, அனைத்தும் துன்பப்படுகின்றன...
காடுகளிலும் கடும் வறட்சி ஆனதால் வன விலங்களும் துன்பத்திற்கு ஆளாகி இருக்கின்றன..
தென்மேற்குப் பருவ மழைக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கின்றன..
இந்நிலையில் வரலாறு காணாத வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக நீர்நிலைகள் வறண்டு விட்டன..
நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விட்டதால்
லட்சக் கணக்கான தென்னை, பனை மரங்களும் ஆபத்தில் இருக்கின்றன..
தண்ணீர் லாரிக்கு
(6,000 லி) 1,800 ரூபாய் வரை செலவு செய்தும் மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை என விவசாயிகள் வேதனை..
தமிழகத்தில்
உத்தேசக் கணக்காக
இரண்டரை கோடி தென்னை மரங்கள் வறட்சியை எதிர் கொண்டுள்ளன..
நன்றி : இந்து தமிழ் ஏப் 24/
தற்போது, அணையின் நீர்மட்டம் 55 அடிக்கு கீழ் சரிந்துள்ளதால், மீண்டும் நந்தி சிலை முழுமையாக வெளியே தெரிகிறது..
நந்தி சிலையைக் காண வார விடுமுறையில் பண்ணவாடிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். தண்ணீரில் மூழ்கியிருந்த நந்தி சிலையை பார்த்து ரசித்தனர்.
(இதிலே ரசிப்பதற்கு என்ன இருக்கின்றது?... )
பின்னர் பண்ணவாடி பரிசலில் மீன் வாங்கி சாப்பிட்டனர்...
(ஆகா.. அற்புதம்... மழை இன்மையால் மேட்டூர் தேக்கத்தில் நீர் குறைகின்ற நேரத்திலும் - சுற்றுலா.
மீன்வறுவல்.. கொண்டாட்டம்..
என்ன கொடுமையடா இது.. )
தினத்தந்தி : மே 3/24
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54 அடியாக குறைந்துள்ள நிலையில்,
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்திற்கு முன்னதாகத் தொடங்கினால் மட்டுமே பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
மேலும் மேட்டூர் அணையின் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை - ஆகிய மாவட்டங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது...
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி
நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்..
திருப்பாவை - 4
(கோதை நாச்சியார்)
மேகராகக் குறிஞ்சியாகிய
இத்திருப்பாடலைப் பாடினால்
மழை பொழியும் என்பது ஐதீகம்..
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட்டு ஐம்மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென்று
அருள்செய்வான் அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர
மழையென்று அஞ்சிச் சிலமந்தி
அலமந்து மரமேறி முகில்பார்க்குந்
திரு ஐயாறே.. 1/130/1
-: திருஞானசம்பந்தர் :-
*
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
அமிர்தவர்ஷினியை அடிக்கடி கேட்டால் மழை வருமோ...
பதிலளிநீக்குஅப்படியும் இருக்கின்றது..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்....
இன்று பேஸ்புக் மெமரிஸ்க்கு சென்றால் நான் 2013 ல் இதே போல மழையை வருந்தி அழைத்திருக்கிறேன். அதைப் படிக்கச் சொல்லி கேட்ட என் அப்பா அவர் பெயரில் ஒரு அக்கவுண்ட் உருவாக்கச்சொல்லி அதில் ஒரு வரி பாராட்டி இருந்தார்.
பதிலளிநீக்குஆகா...
நீக்குஅருமை..
பதிவு அருமை. படங்களும், செய்திகளும் அருமை.
பதிலளிநீக்குகருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்த முடையார் திருப்பறி யலூரில்
விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே.
இன்று காலை கூட்டு வழிபாட்டில் மேகராகக்குறிஞ்சிநாடு
சோழநாடுகாவிரித்தென்கரை தலம் பறியலூர் வீரட்டம் பாடல் பாடினோம். திருஞானசம்பந்தர் தேவாரம் பாடினோம்.
நீங்கள் பகிர்ந்த பாடல்களை பாடி மழைக்கு வேண்டி கொண்டேன்.
மழை பெய்து தண்ணீர் பஞ்சம் மறைய வேண்டும்.
பதிலளிநீக்குஇறைவன் நல்லருள் புரிய வேண்டும்...
நீக்குசெய்திகள் வருத்தத்தை அளிக்கிறது.
பதிலளிநீக்குஓம் நமசிவாய
வேண்டுதலைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் நம்மால்?..
நீக்குஇறைவன் நல்லருள் புரிய வேண்டும்...
பதிலளிநீக்கு"ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு ......." நீர் வற்றிய இடங்களில் மழை பெய்ய பாடலைப்பாடி வேண்டினேன்.
இங்கு இரண்டு நாட்கள் சில மணி நேரங்கள் மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக ரொம்ப வாட்டும் வெயில் இல்லை. இருந்தாலும் இன்னும் மூன்று வாரங்கள் கடத்த வேண்டும்.
பதிலளிநீக்குஅது சரி... மக்களுக்கு டாஸ்மாக் விலையேற்றம் மாத்திரமே கவலை தரும்போது, தண்ணீர், மழையைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. மழை இல்லாத விபரங்கள் மனதை கலங்க வைக்கிறது. விரைவில் இந்த கோடை வெப்பம் தணியுமாறு நல்ல மழை வந்து அனைவரின் மனங்களையும் குளிர வைக்க வேண்டும். அனைவரின் வாழ்விலும் நலம் சேர வேண்டும். மழை வருவதற்கான பாடல்கள் அருமை. நாமும் நல்ல மழை பெய்து மக்கள் அனைவரது வாழ்விலும், சுபிட்சங்கள் உண்டாக இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம். இறைவன் கர்ணை காட்டுவான். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.