தமிழமுதம்
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து..(126)
***
அருளமுதம்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 20
முப்பத்து மூவர் அமரர்க்கும் முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!..
***
ஓம் ஹரி ஓம்
***
சிவ தரிசனம்
திருக்கோடிகா
(திருக்கோடிக்காவல்)
(திருக்கோடிக்காவல்)
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்ஏலோர் எம்பாவாய்... 9
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன்
கோதில் குலத்தான் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏதவரைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்... 10
***
தேவி தரிசனம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
திருக்கடிகா சிவதரிசனம் சிறப்பு. சிலிர்க்க வைக்கிறார்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான தரிசனங்கள். முதல் படம் திரிவேணி சங்கமத்தில் "வேணி தானம்" செய்யும் கணவன்மாரையும் அவர்களிடம் பின்னிக்கொள்ளும் மனைவியரையும் நினைவூட்டும் கண்ணன், ராதை! எல்லாப் படங்களும் நன்றாக உள்ளன. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குசிவதரிசனம் நன்று ஜி
பதிலளிநீக்குஅருமை ஐயா...
பதிலளிநீக்குஅருமையான தரிசனங்கள். அதுவும் கோடிக்கா
பதிலளிநீக்குதிரிபுர சுந்தரியின் அற்புத தரிசனம் அமிர்தம்.
ஈஸ்வரனும் ஈஸ்வரியும் இணைந்து காணப்படும் படமும் வெகு அழகு.
பாவைப்பாடல்கள் தமிழமுதமே,
அக்கறையுடன் அளிக்கும் அன்பு துரைக்கு நன்றி.
அனைத்து படங்களும் அருமை.
பதிலளிநீக்குதிருக்கோடிகா தரிசனம் மகிழ்ச்சிதரும் தரிசனம்.
நன்றி, வாழ்த்துக்கள்.
சிறப்பான தரிசனம். கோவிந்தனாகக் காட்சி தந்த தேவி - நன்று.
பதிலளிநீக்கு