தமிழமுதம்
ஏதிலார் குற்றம் போல தன்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு..(190)
***
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்!..
***
ஓம் ஹரி ஓம்
***
சிவ தரிசனம்
வேணுவனம் - திருநெல்வேலி
நெல்லையம்பதி
நெல்லையம்பதி
மருந்தவை மந்திர மறுமைநன் நெறியவை மற்றும் எல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவிவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூம்
செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலியுறை செல்வர்தாமே..(3/92)
-: திருஞானசம்பந்தர் :-
அக்குலாம் அரையினர் திரையுலா முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலி உறைசெல்வர் தாமே..(3/92)
-: திருஞானசம்பந்தர் :-
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவிவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூம்
செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலியுறை செல்வர்தாமே..(3/92)
-: திருஞானசம்பந்தர் :-
அக்குலாம் அரையினர் திரையுலா முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலி உறைசெல்வர் தாமே..(3/92)
-: திருஞானசம்பந்தர் :-
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்... 17
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்...18
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்... 17
ஸ்ரீ சந்த்ரசேகரர் - ஸ்ரீ மனோன்மணி அம்பிகை.. உவரி |
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்...18
***
- அபிராமிபட்டர் -
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
குறுங்குடி நம்பியையும், நெல்லையப்பர்- காந்திமதியம்மையையும் தரிசித்தேன். தமிழமுதம் ருசித்தேன், ரசித்தேன்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
மகிழ்ச்சி.. நன்றி...
அழகிய குறுங்குடி நம்பியையும் , தெய்வீக நெல்லையப்பரையும் கண்டு மகிழ்ந்தேன் ...
பதிலளிநீக்குஇனிய தரிசனம்
குறுங்குடி நம்பி , நெல்லையப்பர், உவரி, தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஇன்றைய தரிசனத்திற்கு நன்றி.
இன்றைய தரிசனம் நன்று ஜி
பதிலளிநீக்குஅன்பு துரை,
பதிலளிநீக்குநெல்லை வேணுவன நாதர், நெல்லையப்பர்,காந்திமதி அம்மை,
எங்கள் திருக்குறுங்குடி அழகிய நம்பியும் தாயார்களும்,
உவரிப் பெருமான், அபிராமி அந்தாதிப் பாடல் அனைத்தும் இன்று காலை தரிசனமாகக் கொடுத்தமைக்கு நன்றி.
திருப்பாவை,திருவெம்பாவைப் பாசுரங்கள்
கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
அரிய வாசகங்கள் நம்முடன் என்றும் ரீங்கரிக்கட்டும்.
மிக மிக நன்றி.
ஏதிலார் குற்றம் உடனே தெரிவது நம் குற்றத்தையும்
உணர்வது மானுடர்க்கு வாய்ப்பது அரிது.
பாதிக்கப்படும் மனம் தவிக்கிறது. எல்லாம் அவன் செயல் என்று பொறுமை காத்தலைத் தவிர என்ன செய்ய முடியும் அப்பா.
அருமையான தரிசனம்...
பதிலளிநீக்குஉவரி போனதே இல்லை. திருக்குறுங்குடி, நெல்லையப்பர் ஆகியோரின் தரிசனம் முன்னரே கிடைத்துள்ளது. அழகான நிறைவான தரிசனம். நன்றி.
பதிலளிநீக்குநெல்லையப்பர்-காந்திமதி அன்னை தரிசனம் காணக் கிடைத்தது - நன்றி. திருமணம் ஆன புதிதில் அங்கே சென்று வந்திருக்கிறோம். அதன் பிறகு வாய்ப்பு அமையவில்லை.
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வு. தொடரட்டும் பதிவுகள்.