நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 15, 2025

நெய்யும் பாலும்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 2
செவ்வாய்க்கிழமை


காயமே கோயி லாகக் 
  கடிமனம் அடிமை யாக
வாய்மையே தூய்மை யாக 
  மனமணி இலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா 
  நிறையநீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈச னார்க்குப் 
  போற்றவிக் காட்டி னோமே..   4/76/4 

- என்று அப்பர் பெருமான் நமக்கெல்லாம் இறை வழிபாட்டினை அறிவுறுத்துகின்றார்..

எனினும்,
அரன் அஞ்சாடுதல் என்றும் தேன் இளநீர் என்றும் அபிஷேக வரைமுறைகள்  என தேவாரத் திருப்பாடல்களில் பயின்று வருகின்ற போது 
" நேயமே நெய்யும் பாலும் " எனக் கொள்தல் வேண்டும்.. நிறைய நீர் என்பது உலக உயிர்களிடத்தில் காட்ட வேண்டிய இரக்கம்...

இவ்வாறாக
பால் நெய் தேன் இளநீர் என்று அபிஷேக வரைமுறைகள் அருளப்படுகின்ற திருப்பாடல்கள் சிலவற்றை இன்றைய பதிவில் தொகுத்துள்ளேன்...

தொகுப்பில் துணை
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்..


ஸ்ரீ திருஞானசம்பந்தர்

சோலையில் வண்டினங்கள் சுரும்போ டிசைமுரலச் சூழ்ந்த
ஆலையின் வெம்புகைபோய் முகில்தோயும் ஆரூரில்
பாலொடு நெய்தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம்
காலையு மாலையும்போய்ப் பணிதல் கருமமே.. 1/105/2

வேன லானை வெருவவுரி போர்த்து உமை அஞ்சவே
வானை யூடறுக் கும்மதி சூடிய மைந்தனார்
தேனெய் பால் தயிர் தெங்கிள நீர் கரும்பின் தெளி
ஆனஞ் சாடுமுடி யானும் ஐயாறு டை ஐயனே.. 2/6/5

காலா லுயிர்கா லனைவீ டுசெய்தாய்
பாலோ டுநெய் யாடிய பால்வணனே
வேலா டுகையா யெம் வெணாவல் உளாய்
ஆலார் நிழலா யெனுமா யிழையே. 2/23/3


ஸ்ரீ திருநாவுக்கரசர்

பாலுநெய் முதலா மிக்க பசுவிலைந் தாடு வானே
மாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையு ணின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூக மணி அணா மலையு ளானே
வாலுடை விடையா யுன்றன் மலரடி மறப்பி லேனே. 4/63/9

நீல மாமணி கண்டத்தர் நீள்சடைக்
கோல மாமதி கங்கையுங் கூட்டினார்
சூல மான்மழு ஏந்திச் சுடர்முடிப்
பால்நெய் யாடுவர் பாலைத்துறையரே. 5/51/1

சூலம் மல்கிய கையுஞ் சுடரொடு
பாலும் நெய்தயி ராடிய பான்மையும்
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு
ஆல நீழலும் அம்ம  அழகிதே. 5/55/6


ஸ்ரீ சுந்தரர்

படப்பால் தன்மையில் நான்பட்ட தெல்லாம்
படுத்தாய் என்றல்லல் பறையேன்
குடப்பாச் சில்லுறை கோக்குளிர் வானே
கோனே கூற்றுதைத் தானே
மடப்பால் தயிரொடு நெய்மகிழ்ந் தாடு
மறையோ தீமங்கை பங்கா
நடப்பா யாகிலும் நடப்பனுன் னடிக்கே
நாட்டியத்தான்குடி நம்பீ. 7/15/7

வஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில்
லார்நறு நெய்தயிர்பால்
அஞ்சுங்கொண் டாடிய வேட்கையி
னார்அதி கைப்பதியே
தஞ்சங்கொண்டார்தமக் கென்றும்
இருக்கை சரணடைந்தார்
நெஞ்சங்கொண் டார்க்கிட மாவது
நந் திருநின்றியூரே. 7/19/5

வான நாடனே வழித்துணை மருந்தே
மாசி லாமணி யேமறைப் பொருளே
ஏன மாஎயி றாமையும் எலும்பும்
ஈடு தாங்கிய மார்புடை யானே
தேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானே
தேவ னேதிரு ஆவடுதுறையுள்
ஆனை யேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குறவு அமரர்கள் ஏறே.. 7/70/9


திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

2 கருத்துகள்:

  1. பாசுரங்களுடனான உங்கள் பரிச்சயத்தை உங்கள் தொகுப்பு காட்டுகிறது.  அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் திருப் பதிகங்களில் தேடித் தான் எடுக்கின்றேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..