நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று புத்தாண்டு
ஸ்ரீ விஸ்வாவசு
சித்திரை முதல் நாள்
திங்கட்கிழமை
இன்றைய
பிரார்த்தனைகள்

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர ... கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை ... வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப ... னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை ... மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை ... இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை ... தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் ... அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய ... பெருமாளே..
அருணகிரிநாதர்
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம ... வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம ... பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம ... கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ... அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு ... மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக ... வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ... லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ... பெருமாளே..
அருணகிரிநாதர்
கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும்
ஒரு துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவி
பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே..
அபிராமி பட்டர்
அனைவருக்கும்
அன்பின் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு
நீக்குஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
சித்திரைத் திருநாள் நல் வாழ்த்துகள் துரை அண்ணா.
பதிலளிநீக்குஅபிராமிபட்டரின் பிரார்த்தனை ரொம்பப் பிடித்த ஒன்று
கீதா
நீக்குஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி சகோ
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். படங்களும், பாடல்களும் நன்றாக உள்ளது. அனைத்து தெய்வங்களும், உலக மக்கள் அனைவரையும் நலமுடன் காத்தருள வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றியம்மா
சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசிவா +சக்தி குடும்பமாக தரிசனம் தந்துள்ளார்கள். அனைவருக்கும் நல் அருள் தர வேண்டுவோம்.
தங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி மாதேவி