நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 10, 2025

திருமழபாடி 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 27
வியாழக்கிழமை

கொளுத்துகின்ற வெயிலையும் பொருட்படுத்தாமல் கோயிலின் எதிரில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த காட்சி மனதை உருக்கியது..

ஊர் மக்கள் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கியும் கல்யாண விருந்து அளித்தும் சிவத் தொண்டு புரிந்து கொண்டிருந்தனர்..

மாலையில் திருக்கல்யாண வைபவ விழா  தொடங்கி - இரவு எட்டரை மணியளவில் எம்பெருமான் ஸ்ரீ நந்தீசனுக்கும் வசிஷ்ட மகரிஷியின் பேத்தியும் வியாக்ரபாத முனிவரின் மகளுமான
சுயம்பிரகாஷிணி தேவிக்கும் திருக் கல்யாணம் இனிதே நடை பெற்றது.. 

நிகழ்வுகளை இயன்றவரை காட்சிப்படுத்தியுள்ளேன்..

அன்றிரவு,
கோயிலின் எதிரில் தூங்கி விட்டு பொழுது விடிந்ததும் இல்லத்திற்குத் திரும்பினோம்..
















கலையி னான்மறை
  யான்கதி யாகிய
மலையி னான்மரு
  வார்புர மூன்றெய்த
சிலையி னான்சேர்
  திருமழ பாடியைத்
தலையி னால்வணங்
  கத்தவ மாகுமே..3/48/4
திருஞானசம்பந்தர் 

நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்
நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
பாராகிப் பௌவமே ழானான் கண்டாய்
பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்
அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் தானே.. 6/39/7
திருநாவுக்கரசர்

கண்ணாய் ஏழுலகுங்
  கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன் தமிழாய்ப்
  பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ்
  மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால்
  இனியாரை நினைக்கேனே.. 7/24/5
சுந்தரர்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

6 கருத்துகள்:

  1. கோவிலின் உள் பிரகார படங்கள் கண்களை நிறைக்கிறது.  இரண்டு கட்ட பிரகாரமா?  படியேறிச் செல்லும் வசதி உண்டா?  கடைசி கோபுர படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிப்பதிவில் விவரம்
      தருகின்றேன்

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. கோவிலுக்கு எதிரே தூங்குவது என்றால் எப்படி? சாலையிலா? சாத்தியமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிப்பதிவில் விவரம்
      தருகின்றேன்

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. மூவர் பாடிய தேவாரங்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன். படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..